நந்தலாலா.. - விமர்சனம்

சொல்லப்படாத கதை என்று உலகில் எதுவுமே இல்லை. மிஷ்கின் இதில் சொல்லியிருக்கும் கதை ஏற்கனவே ஏதோ ஒரு மொழியில் சொல்லப்பட்டதாய் இருந்தாலும்.. நம் மொழிக்கும், நம் உணர்வுகளுக்கும் இம்மாதிரி மயிலறகு தடவல்கள் ஒரு வரம். விரும்பி வரவேற்ப்போம் அதை.... நந்தலாலா.... தத்தமது அம்மாக்களை தேடி புறப்படும் இரண்டு குழந்தைகளின் கதை. ஒன்று வயதால் குழந்தை.. இன்னொன்று மனதால். ஒருவருக்கொருவர் எந்த வித ஈர்ப்பும் இன்றி, ஒரு அன்னியதன்மையோடு பயணப்பட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாய் அன்பின் வாசல்களுக்குள் நுழைந்து அதில் கட்டுண்டு உறவாடும் வரை நீளும் அழகிய பயணம். இடையில் அவர்கள் சந்திக்கும் மனிதர்களுக்குள்ளும் அந்த அன்பை விதைத்துக்கொண்டே செல்ல.... மூகமுடி அணியாத முழு மனிதர்களையும் அவர்களின் ஆழ்மன வெளிப்பாடுகளையும் ஒரு வித பிரம்மிப்போடு காண்கிறோம். மேய்ப்பனை பின் தொடர்ந்து செல்லும் ஆடுகள் போல.... கதையின் பின்னாலேயே நாமும் பயணப்பட தொடங்குவதில் ஆரம்பிக்கும் வெற்றி.. இறுதியில் கண்கலங்கி.. கைதட்டி எழும் வரை தொடர்கிறது. ஓவ்வொரு காட்சியும் ஒரு கவிதையாய்... ஒரு ஓவி...