டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்பத்தூர் பையனும்... (18+) - 1


வாய்ப்புகள் நம்மை தேடி வராது. நாம்தான் வாய்ப்புகளை தேடி போக வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை நம்புபவன் நான். ஆனால், டெல்லியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள HANDLOOM & HANDICRAFTS CORPORATION OF INDIA என்கின்ற அரசு சார் நிறுவனத்தில் ஒரு நேர்முக தேர்வுக்கு நான் அழைக்க படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை வீணடிக்க வேண்டாமென்று நினைத்து டெல்லி செல்ல அனுமதி பெற்று, போகும் போது ரயிலிலும் வரும் போது விமானத்திலும் வருவதாய் ஏற்பாடு செய்தேன். 

நேர்முக தேர்வுக்கு நான், எனது தம்பி பிரபு, பிரபுவின் நண்பன் பரமு ஆகிய மூவருடன்   பெயர் தெரியாத ஒரு முன்னூறு பேரும் அழைக்கப்பட்டிருந்தோம். எனது தம்பி ஏற்கனவே டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் நான் மட்டும் கோவையில் இருந்து கிளம்பினேன். பரமு சேலத்தில் என்னுடன் இணைந்து கொள்வதாக கூறி விட்டான். 

நேர்முக தேர்வு 23.08.10 திங்கள் மதியம். ஆனால் நாங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக சென்று டெல்லியே சுற்றுவதாய் ஒரு உயரிய நோக்கம் கொண்டிருந்தோம். சென்னை சென்று அங்கிருந்து மாற்று ரயிலில் (துரந்தோ எக்ஸ்பிரஸ்)  டெல்லி செல்வதாய் திட்டம். இதோ, எனது டெல்லி பயணம் மழை தூறிய அந்த வியாழன் (19.08.10) அன்று நீலகிரி எக்ஸ்ப்ரஸில் இனிதே  துவங்குகிறது. இதை தொடர்ந்த ஐந்து நாட்கள் நான் பெற்ற அனுபவங்கள் தான் இந்த பயணக்கட்டுரை தொடர்.

எனக்கு தெரிந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் கொஞ்சம் ஆசுவாசமாய், நெரிசலின்றி சென்றதாய் ஞாபகமே இல்லை. எத்தனை எத்தனை மனிதர்கள்..எத்தனை விதமான காரணங்கள். சந்தோஷங்கள்... வருத்தங்கள்.. எதிர்பார்ப்புகள்.. கடமைகள்.. எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அந்த கம்பீர ஊர்தி இரவை கிழித்து கொண்டு சென்னை நோக்கி முன்னேறி கொண்டிருந்தது.  அவசர அவசரமாக  கிளம்பியதில் என் செல்பேசி மிக குறைந்த அளவு  மின் சக்தியுடன் இருக்க.. சார்ஜ் செய்யும் வசதி என்னுடைய கோச்சில் இல்லாததால்  பக்கத்துக்கு கோட்சிற்கு  சென்ற போதுதான் அந்த ஜோடிகளை  கண்டேன். கதவை ஒட்டி வாஷ் பேசின் அருகே தரையில் அமர்ந்திருந்தார்கள். அந்த பையன்  அப்பெண்ணின் தோள் மீது கை போட்டபடி  அவள் கைகளை பற்றி ஜோதிடம் பார்த்து கொண்டிருந்தான். அந்த பெண்  கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கலாம். கூச்சத்திலும், வெட்கத்திலும் நெளிந்து கொண்டிருந்தது.  கொஞ்சம் அன்யோநியமாக இருந்த இருவரும் என் வருகை கண்டு விலகி அமர, நான் அருகிலிருக்கும் ப்ளக் பாயிண்டில் சார்ஜரை இணைத்து விட்டு எதிர்புற கதவை திறந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். யதொட்சையாக திரும்பியதில் அந்த பையனின் கண்களில் இருந்த விரோத உணர்ச்சி என்னை எதோ செய்ய.. அப்படியே திரும்பி போய் விடலாமா என்று நினைத்தேன். பரமு வேறு சேலத்தில் போன் செய்வான். அவனை அழைத்து கொள்ளவாவது சிறிதளவு சார்ஜ் வேண்டுமென நினைத்து அங்கேயே நின்றேன். இப்போது அந்த பெண் இயல்பாக அவனிடம் பேசி கொண்டிருக்க, அவன் காதுகளின் கவனம் அவளிடத்திலும், கண்களின் கவனம் என்னிடத்திலும் நிலை கொண்டிருந்தது. எனக்கு  முகம் எல்லாம் முடி முளைத்து, கருப்பாய் கரடி போல் ஆனது போன்ற உணர்வு. யார் இவர்கள்...வீட்டை விட்டு வெளியேறிய  காதலர்களாய் இருக்கலாம்.  அல்லது நல்ல நண்பர்களாய் கூட இருக்கலாம். இப்படி பாதுகாப்பின்றி பயணம் செய்கிறார்களே என  மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் கத்தி சண்டை போட.. அபத்தாந்தவனாய் TTR வந்து சேர்ந்தார். 

வந்தவர் அவ்விருவரிடமும் சரமாரியாக கேள்விகள் கேட்டவர், இருவருக்கும் தனி தனி பெர்த் அலாட்  செய்து தர.. சத்தியமாக சொல்கிறேன்.. எனக்கு என்னவோ சொல்ல முடியாத ஒரு மன திருப்தி ஏற்பட்டது.

சேலத்தில் பரமுவை ரிசீவ் செய்து கொண்டு பின் தூங்கிய தூக்கத்தில் அந்த பெண்ணின் பயந்த முகம் கனவில் வந்து போனது நிஜம்.

காலையில் சரியாக ஐந்து மணிக்கு நீலகிரி  சென்னை வந்தடைய.. டெல்லி செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ்சை  நோக்கி சென்ற எங்களுக்கு அந்த பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. 

                                - பயணம் எக்குத் தப்பாய் போகும். 

Comments

 1. மனோ.. ஆரம்பமே அசத்தல்..
  அனா ராஜேஷ்குமார் கதை மாதிரி ஒரு தொடரும் புள்ளி வைக்க நீங்களும் புறப்பட்டீங்கள?

  ReplyDelete
 2. எக்ஸ்பிரஸாய் ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்த பார்ட் எப்ப?

  ReplyDelete
 3. மனோ உங்கள் எழுத்து நடை பிரமிக்க வைக்கின்றது.. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது ...வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. //பயணம் எக்குத் தப்பாய் போகும்.//
  விபத்து இல்லாம போனா சரி...

  ReplyDelete
 5. பயணத்தின் முதல் கட்டம் நல்லா இருக்கு. ட்விஸ்ட்ட கொண்டுபோயி துரந்தோ எக்ஸ்‌ப்ரெஸ்ல வச்சிருக்கீங்க....

  ReplyDelete
 6. நல்லா இருக்குதுங்க.

  பயணம் சிறப்பாக அமைந்ததா?

  ReplyDelete
 7. எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கின்றது. அடுத்த பகுதிக்காக ஆவலுடன்.

  ReplyDelete
 8. ஸ்பீடு.

  எம்.எம்.அப்துல்லா

  ReplyDelete
 9. நல்லாருக்கு.. ஆனா இவ்வளவு சின்னதா.. எழுதி தொடரும் போடக்கூடாது..:)

  ReplyDelete
 10. Samuga Udura pogatum ,
  2 varathuku No Problem......

  ReplyDelete
 11. மாமு என்ன ஃப்ளோ இது செம செம

  நல்லா போடுறப்பா தொடரும்...

  சீக்கிரம்

  ReplyDelete
 12. @ vino, kalanesan, janaki raman, pon siva, mani, yogesh, thulasi gopal, mohan, abdulla, cable sir, jill thanni...


  thanks for your sweet comments.

  mano

  ReplyDelete
 13. நல்ல வேகத்தோடு வண்டி புறப்பட்டுள்ளது.
  மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. எக்குத்தப்பு எப்போ? வெயிட்டிங்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4