டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 2

சென்னையில் துரந்தோ ரயிலை நெருங்கியதுமே மின்சாரம் போல அந்த அதிர்ச்சி எங்களை தாக்கியது. சார்ட்டில், 65 வயது ராஜாத்தி அம்மாளை தவிர மற்ற எல்லோருமே ஆண்கள். அட ராமா... எங்கள் கோச் முழுதுமே சேவல் பண்ணையாக காட்சியளிக்க, சைட் அடிக்க ஒரு பிகர் கூட இல்லாத வருத்தத்தில் துரந்தோ ஏறினோம். இந்த இடத்தில் துரந்தோ ரயிலை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இது ஒரு நான் ஸ்டாப் ரயில். சென்னையில் கிளம்பினால் டெல்லி சென்று தான் நிற்கும். இடையில் சில ஸ்டேஷன்களில் நின்றாலும், யாரும் ஏற மாட்டார்கள். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கையில் காபி கோப்பையே பிடித்தவாறு ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டிருந்தேன். தீடிரென எதிர் ட்ராக்கில் ஒரு ரயில் கடக்க, கடந்த வேகத்தில் கையில் இருந்த காபி கப் அப்படியே பாதியாய் மடங்கி என் உடை நனைத்தது. அந்த அளவு வேகம். அதிக பட்சமாக 160 KM வேகத்தில் செல்லும் என TTR குறிப்பிட்டார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காலை 6.40 க்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. சரியாக 28 மணி நேரத்தில் (10.40 AM) க்கு டெல்லி சென்றடைகிறது. இந்த ரயில் அதிக வேகம் செல்வதற்காக, ரய...