ஏழாம் அறிவு - விமர்சனம்
250 பக்க நாவலில் சொல்ல வேண்டிய விஷயத்தை இரண்டரை மணி நேரத்தில் அவசர அவசரமாக சொல்லியிருப்பதுதான் ஏழாம் அறிவு.


"கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி". நான்காம் வகுப்பில் படித்தது இன்னமும் ஞாபகசெல்களில் மிச்சமிருக்கிறது.  தமிழுக்கென்று தமிழர்களுக்கென்று உள்ள பல சிறப்பியல்புகளை அசாதாரணமாக தொலைத்து விட்டு அமெரிக்கன்  பீட்சா சாப்பிட்டு இங்கிலிஷில் கதைக்கும் வாழ்க்கைமுறைக்கு நாம் வந்து வெகு நாட்களாகிவிட்டது. திருக்குறள், தஞ்சை பெரிய கோவில் என சிற்சில
 அடையாளங்கள்தான் இன்று நம்மிடம்.நாம் பாதுகாக்க மறந்து,    தொலைத்த பல அரிய மருத்துவங்களை, கலைகளை, விஞ்ஞானத்தை, வீரத்தை நம்மிடம் நினைவூட்டிய  விதத்திற்காக A.R. முருகதாசிற்கு ஒரு பெரிய சபாஷ்.கொஞ்சம் டாகுமெண்டரி வாசம் வீசினாலும், முதல் இருபது நிமிடங்கள் இந்த படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் உலக சினிமாவின் உச்சம். ஒளிப்பதிவு, கலை, இசை என எல்லா விஷயங்களும் கண்களை இரண்டு சென்டிமீட்டர் விரிய வைக்கிறது. அதன் பின்னான விஷயங்கள் திப்புடு திப்புடு என இலக்கில்லாமல் ஓடுவதுதான் கொஞ்சம் நெருடல்.

  
வேகமான திரைக்கதைக்கும், வேக வேகமாய் போகிற திரைக்கதைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. என்ன வேகத்தில் போனாலும் ரசிகனின் கையே விடாமல் அவனையும் கதைக்குள் இழுத்துக்கொண்டு போகிற திரைக்கதைதான் வெற்றிக்கான சூட்சமம். இங்கு, திரைக்கதை வேக வேகமாய் போனாலும், ரசிகன் இன்னமும் ஆரம்ப இடத்திலேயே நின்று கொண்டு மலங்க மலங்க விழிக்கிறான். சரியான நேரத்தில் பொழியாமல்  திடும் திடுமென பெய்யும்  மழை போல முளைக்கும் பாடல்களில் நனைய மனமின்றி  வெளியே ஒதுங்குகிறான் ரசிகன்.


சூர்யா நாளுக்கு நாள் படு மேன்லியாய் உருமாறிக்கொண்டிருக்கிறார். போதி தர்மன் கேரக்டரில் அவரது கண்களில் இருக்கும் கனிவும்,  அமைதியும் அந்த கேரக்டருக்கு வலுவூட்டுகிறது. ஆனால் அரவிந்த் 
கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்ய வாய்ப்பின்றி தடுமாறுவதையும்  கவனிக்க முடியாமல் இல்லை. ஸ்ருதி ஹாசன்.....அழகையும் மீறி கமலஹாசன் மகள் என்னும்  விசிட்டிங் கார்டு அவரை ரசிக்கமுடியாமல் இம்சிக்கிறது.  கஜினி படத்தில் வருவது போல பிரெஷான, அழகான காதல் காட்சிகள் இந்த படத்தில்  இல்லாததது அவரின் மீதான கவன ஈர்ப்பை மேலும் குறைக்கிறது.வில்லனாய் வரும் அந்த சீனா பார்ட்டி அதிக அலட்டல் இல்லாமல் மிரட்டினாலும், ஒரு நொடி பார்வையில் ஹிப்னாடிஸ் செய்து தற்கொலை செய்ய தூண்டுவதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் ஓவர்தான்.

ரவி கே சந்திரன்,  ஹாரிஸ் ஜெயராஜ், ஆண்டனி என சினிமாவில்  மெத்த படித்த டீம்  படத்தின் டெக்னிக்கல் ப்ளஸ்களுக்கு ரொம்பவே உதவியிருக்கிறது. 


எழுதி இயக்கியிருக்கும் A.R.முருகதாஸ் தமிழ் சினிமாவின்       வழக்கமான
வட்டத்தில் சிக்கிகொள்ளாமல் கொஞ்சம் இன்டர்நேஷனல் லெவலில்
படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.     ஆனால்
அதற்காக கொடுத்த ஓவர் பில்ட் அப் தான் படத்திற்கு முதல் மைனஸ். அதீத எதிர்பார்ப்பு, ஒரு மனிதனை.. தாலி கட்டிய மனைவி என்றாலும், காத்திருந்து படம் பார்த்தாலும், இன்னமும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாமோ என்றுதான் எண்ண வைக்கும். மனித மனதின் அங்கலாய்ப்பு அது. ஒன்றும் செய்ய முடியாது அதை.


இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழர் கண்டறிந்த விஷயங்களை வெள்ளைக்காரன் பேட்டன்ட் போட்டு விற்பது,  தமிழரின் பாரம்பரிய அடையாளங்களை ஒழிக்க நினைத்தது, யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் தமிழ் புத்தங்கங்களை எரித்தது (சுஜாதா சார் இதை பற்றி ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார்) என தமிழ், தமிழர் பற்றிய அக்கறையே தொட்டு சென்ற விதத்தில் இந்த படத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். 


சிற் சில குறைபாடுகள் இருந்தாலும்,   ஒதுக்கிவிட முடியாத படைப்புதான் ஏழாம் அறிவு.  பிளஸ் (+)

சூர்யா
ஒளிப்பதிவு.
இரண்டாம் பாதி
எடுத்துக்கொண்ட மெசேஜ்
முன் அந்தி பாடல்.

மைனஸ் (-)

முதல் இருபது நிமிடங்களை தவிர்த்த முற்பாதி
ஸ்பீட் பிரேக் பாடல்கள்
லாஜிக் மீறல்கள்
அழுத்தம் இல்லாத காதல் எபிசொட்.


VERDICT : பார்க்கலாம்... தவறில்லை.
RATING   : 4.8 / 10.0


EXTRA பிட்டுகள்


நீண்ட நாட்களுக்கு பிறகு, திருப்பூர் நண்பர்களுடன் இரவுக்காட்சி. உற்சாகபான மிகுதியில் தியேட்டரில் கத்தி கூச்சல் போட்டு அட்டகாசம் செய்யும் சில்லறை சந்தோஷங்கள்  திருமணம் முடிந்து சில பல குழந்தைகளுக்கு தகப்பனான பின்னும் தொடர்வது  நண்பர்களுடன்  இருக்கும் போது மட்டுமே வாய்க்கும்.

Comments

 1. நீண்ட நாட்களுக்கு பிறகு, திருப்பூர் நண்பர்களுடன் இரவுக்காட்சி. உற்சாகபான மிகுதியில் தியேட்டரில் கத்தி கூச்சல் போட்டு அட்டகாசம் செய்யும் சில்லறை சந்தோஷங்கள் திருமணம் முடிந்து சில பல குழந்தைகளுக்கு தகப்பனான பின்னும் தொடர்வது நண்பர்களுடன் இருக்கும் போது மட்டுமே வாய்க்கும்.

  mano your writing style is very good .. keep it up..

  ReplyDelete
 2. >>>வேகமான திரைக்கதைக்கும், வேக வேகமாய் போகிற திரைக்கதைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. என்ன வேகத்தில் போனாலும் ரசிகனின் கையே விடாமல் அவனையும் கதைக்குள் இழுத்துக்கொண்டு போகிற திரைக்கதைதான் வெற்றிக்கான சூட்சமம்

  செம லைன்ஸ்

  ReplyDelete
 3. நான் இணையத்தில் படித்த 7ம் அறிவு விமர்சனங்கள் 12 இல் உங்களுதுதான் டாப்!!!

  ReplyDelete
 4. hai ponsiva,

  thanks for your comments

  ReplyDelete
 5. hai senthil kumar,

  thanks for your comments.

  ReplyDelete
 6. vera yepdi than padam yeduka mudiyum ....... nalla padama irunthalum otta matanga.......... anbe sivam nalla film than nalla padam nu yellarum sonnanga ana kalla kattalaiye..... art film ma commercial kalanthu than kuduka mudiyum.........

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4