நீதானே என் பொன் வசந்தம்.....(சவால் சிறுகதை - 2011)

ஞாயிறு உற்சாகங்கள் வடிந்து பணிச்சுமை தொடங்கிய திங்கள் காலை. விடிய மனமின்றி விடிந்த சூரியன். நகரம், பிடித்தும் பிடிக்காமல் அன்றைய வாரத்தின் முதல் தினத்தை ஒரு வித ஆயாசத்தில் தொடங்க... நான் முழு உற்சாகமாய் என் அலுவலக கணிப்பொறியே உயிர்ப்பித்தேன். "WELCOME MAHESH" என்று என் பெயர் சொன்னது. மனசு, நேற்றைய இரவின் சந்தோஷங்களை நினைத்து நினைத்து குதுகலித்துக்கொண்டிருக்க, பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே என் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளை முகப்பில் கொண்டு வந்து சேர்த்தேன். இடைப்பணியாக face book அப் டேட்டுகளை மேய்ந்து கொண்டு என் பர்சனல் e-mail id யே ஓப்பினேன். ஒரே ஒரு மெயில் பல்லை இளித்தது. அறிமுகமில்லாத முகவரி.... அலட்சியத்தோடு திறந்தவனுக்கு.... தந்தி போல மூன்றே வார்த்தைகள்... YOUR WIFE KIDNAPPED! ******** ஆரம்பத்தில், யாரோ அரை கிறுக்கன் வேலையின்றி விளையாடுகிறான் என்றுதான் நினைத்தேன். ஒதுக்கிவிட்டு வேலையில் ஈடுபட நினைத்தாலும், உடனே அனுவுக்கு போன் செய்து பேச வேண்டும் போலிருந்தது.... மொபைலில் எண்களை ஒத்த, இளைய...