மங்காத்தா - விமர்சனம்



 ஆஞ்சநேயா, ஜனா, ஏகன், அசல் என எத்தனை அரியர் வைத்தாலும், கோடம்பாக்கம்  கல்லூரியின் அழகான, அம்சமான ஸ்டுடென்ட் அஜித். ஒருவழியாய் மங்கத்தா மூலமாய் டிஷ்டிங்ஷனில் தேறியிருக்கிறார்.

 ஒரு மாஸ்  ஹீரோவின் ஐம்பதாவது படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக  மங்காத்தா டீம் மொத்தமும் அஜீத்துக்காக ஆடி தீர்த்திருக்கிறது. ஆனால், சர்ப்ரைஸ் கிப்ட்டாக ஆட்டநாயகன் விருதும் அஜித்தே  அடித்திருப்பது  எதிர்பாரா ஆச்சரியம்.

 கோடி்கள்  புரளும் கிரிக்கெட் சூதாட்ட களத்தில்,  பந்தய பணம்  ஐநூறு கோடியே  கொள்ளையடித்து நோகாமல்  நோன்பு கும்பிட நினைக்கும் நால்வர் குழு ஒன்று.  ஒன் மேன் ஆர்மியாய் அதை ஆட்டையே போட துடிக்கும் போலீஸ் அதிகாரி் அஜித். மொத்த  சூதாட்ட கும்பலை பிடிக்க நினைக்கும்  சிபிஐ அதிகாரியாய் அர்ஜுன். பணத்தை பறிகொடுத்த ஆத்திரத்தில் துப்பாக்கியோடு அலையும் சூதாட்ட கும்பல். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆடும் ஆட்டம்தான் மங்காத்தா. 

சென்னை.28 , சரோஜா, என வெங்கட் பிரபுவிற்கு கைகொடுத்த அதே  கிரிக்கெட் களம் மங்காத்தாவிலும் உதவியிருக்கிறது. அஜித், டீமின் அதிரடி  பேட்ஸ் மேனாய்  சிக்சர்களாய் அடித்து நொறுக்க, ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என எல்லோரும்  தன் பங்குக்கு  ஸ்கோர் செய்ய, கேப்டனாய் இருந்து்  அதிகம்  ஸ்கோர் செய்யாவிடினும் தோனி போலவே அதிர்ஷ்டத்தில் வென்றிருக்கிறார் வெங்கட்பிரபு. 


 அஜித், வாய்ப்பே இல்லை. ரொம்ப நாளைக்கு பிறகு பழைய பார்மி்ற்கு வந்திருக்கிறார். டயலாக் டெலிவரியில், உடல் மொழியில் ஏகப்பட்ட மாற்றங்கள். மாஸ் ஹீரோக்கள் செய்ய மறுக்கும் நெகட்டிவ் ரோலை அனாயசமாக செய்ததற்காகவே பாராட்டுக்கள் . முக்கியமாக இடைவேளைக்கு முன்பான அந்த செஸ் போர்டு காட்சிகள் செம.

 
 முழுக்க முழுக்க தல ஆடும் ஆட்டத்தினால்,  ஏகப்பட்ட நட்சத்திர  ஆட்கள் இருந்தாலும்  வேறு யாருக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை. எல்லா படத்திலும் தனித்துவம் கட்டும் ஜெயபிரகாஷ் கூட இதில் அடக்கி வாசித்திருக்கிறார்.
  வெங்கட் பிரபுவிற்கு என ஒரு  ஸ்டைல் இருக்கிறது. எவ்வளவு சீரியசான இடத்திலும் கொஞ்சம் காமெடியே புகுத்தி சிரிக்க வைப்பது. மகா சீரியசான இந்த படத்தில் அப்படி காமெடியே புகுத்தலாமா, வேண்டாமா என தினறியிருப்பது தெரிகிறது. புகுத்திய இடங்கள், காமெடிக்கு பதில் எரிச்சலை வரவழைப்பதுதான் படத்தில் சொல்லப்படாத ட்விஸ்ட். 


 தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது பிரேம்ஜி விஷயத்தில் சரிவருமா என வெங்கட்பிரபு யோசிப்பது நலம். சில இடங்களில் பயங்கர கட்டை போட்டு நம் பொறுமையே ஏகத்துக்கும் சோதிக்கிறார். அஜித்தும், பிரேமும் தன்னியடித்து விட்டு காரில் வரும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் சிரிப்பு சத்தம்.


 "தி இட்டாலியன் ஜாப்" படத்தை விரு்ம்பி பார்த்தவர்களுக்கு இந்த படம் பயங்கர அதிர்ச்சியையும், எரிச்சலையும் தரலாம். கொள்ளையடிப்பதை கூட கலைநயத்தோடு செய்யும் அந்த பட காட்சிகளை அப்படியே சுட்டு  இதில் கிக்கிலி பிக்கிலி காமெடி செய்திருக்கிறார்கள்.


 பின்னணி இசை இந்த படத்திற்கு எவ்வளவு உதவியிருக்கிறதோ, அதே அளவு படத்தின் பாடல்களும், அவை திடுமென முளைக்கும் இடங்களும் ஏகத்துக்கும் காலை வாரியிருக்கிறது. பாடல்களை துணிந்து  வெட்டலாம். 



ஒன்றிற்கு நான்காய் ஹீரோயின்கள். தேவையற்ற பாடல்களுக்கு தாரள மனதாய் உதவியிருக்கிறார்கள். அவ்வளவே. 


 இவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும், படம் கரை சேர்ந்து விடுவதற்கு காரணம் அஜித்தும், கொஞ்சம் பர்பெக்ஷனான மேக்கிங்கும்தான். சக்தி சரவணன் ஒளிப்பதிவு,  பிரவீனின் எடிட்டிங் என டெக்னிக்கல் சமாச்சாரங்கள் படத்தின் பெரும் பிளஸ்.

 அஜித்தின் மாஸ் இமேஜை, ஒரு பர்சென்ட் கூட குறைவில்லாமல் உபயோகித்துக்கொண்ட வி்தத்தில் வெங்கட் பிரபு ஒரு இயக்குனராக கவனம் ஈர்க்கிறார். திரைக்கதை துரத்தல்களில் இன்னும் கொஞ்சம் லாஜிக் சேர்த்திருந்தால் மங்காத்தா ஆட்டம் இன்னமும் சூடு பிடித்திருக்கும். 


 தல ரசிகர்களுக்கு  தலை தீபாவளி.


(+) பிளஸ்

அஜித்
ஒளிப்பதிவு
எடிட்டிங்
மேக்கிங்
திரைக்கதை


(-) மைனஸ்

பாடல்கள்
பிரேம்ஜி 
நீளமான சண்டைகள் 
வெங்கட் பிரபு டச் இல்லாதது.
  

VERDICT :  நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். 
RATING   : 4.3 / 10.0



EXTRA பிட்டுகள் 

   எத்தனை மொக்கை படங்கள் கொடுத்தாலும், அஜித்திற்கு இருக்கும் ஒபெனிங் மிக பெரியது. 'அசல்' போன்ற காவியத்திற்கே   முதல் நாள்  டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது நினைவிருக்கிறது. இந்த படம் வேறு பப்ளிக் டாக்கில் நன்றாக இருக்கிறது என பரவ, திருப்பூரில் 9 தியேட்டர்களில் ரீலீஸ். 7 தியேட்டர்கள் வரை அலைந்தும் எங்கும் டிக்கெட் கிடைக்க வில்லை. கடைசியாக சிட்டியில் இருந்து ரொம்பவே விலகி இருக்கும் MGB தியேட்டரில் இரவு பதினோரு மணி காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது.


  ஆனால், டிக்கெட் என கொடுத்தது சைக்கிள் டோக்கன் போல எதுமே எழுதபடாத ஒரு துண்டு சீட்டு. எல்லா டிக்கெட்டுகளையும் 60 ரூபாய் என ரவுண்டு ரேட்டில் விற்பனை செய்தார்கள். 60 ரூபாய்க்கு எங்கு போய் அமர்ந்தும் படம் பார்க்கலாம். இந்த விசித்திர விதிமுறையால், அதற்க்கு முந்தைய காட்சி முடிவதற்கு முன்னரே, ரசிகர் கூட்டம் முண்டியடித்து திரையங்கிற்க்குள் ஓடி துண்டு விரித்து இடம் பிடிக்க...  பயங்கர கலாட்டா.


 அதற்க்கு பின்னரும், இரவு இரண்டு மணி காட்சிக்கு  டிக்கெட் வாங்கும் கூட்டத்தை பார்த்து மிரண்டு விட்டேன். வைகுண்ட ஏகதேசிக்கு விடிய விடிய படம் காட்டுவதை போல...விடிய விடிய தல தரிசனம்தான்.


Comments

  1. மங்காத்தா தலையின் வெறியாட்டம்

    ReplyDelete
  2. hi naanu athaa mgb laa than pathan anna tik 100 rs

    ReplyDelete
  3. நீங்களும் தல ரசிகரா? வாழ்த்துக்கள். அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. THANKS FOR YOUR POSITIVE REVIEW ABOUT MANKAATHA.
    THANKS A LOT FOR YOUR COMMENT ABOUT THALA'S OPENING.
    THALA-WIN THE MATCH.

    ReplyDelete
  5. hai, farhan, jagan, jetli, prasad thanks for your comments.

    ReplyDelete
  6. hai vivek, thanks for your comments.

    ReplyDelete
  7. maggathavil, naravai pasaga eapothum kudiyai pathi mattum peasuraga, hero fulltime pokaya vittapadi valam varukirar. sub titillil kooda kudiyum, pohayum udal nalathiriku keadu ena podavillai, eathai dr ramadas vemarsanam seaithal cinima makkalukku koobam varum.chee ethuvum oru puzaippa.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....