யார் உண்மையான AIRTEL சூப்பர் சிங்கர்?




வருட கணக்கில் இழுக்கும் மெகா சீரியல்களை விட மனசுக்கும் செவிக்கும் நன்மை பயந்த நிகழ்ச்சி. விஜய் டிவி நடத்திய AIRTEL SUPER SINGER PROGRAMME. எத்தனை எத்தனை வித விதமான பாடகர்கள்... பாடல்கள்...   இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் நிகழ்ந்த சில சுவையான நிகழ்வுகள் இங்கே...

  • ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்து விட்டது. சுஜாதா அவர்களின் மகளும், ஸ்ரீநிவாஸ் மகளும் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும் அவ்வளவு இனிமை. முக்கியமாக சுஜாதா மகளின் குரல் ஒரு லிட்டர் தேனை காதுக்குள் ஊற்றியது போல அவ்வளவு சுவை. 

  • அதே போல போட்டி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக பாட வந்த அல்கா அஜித் குரல் வாய்ப்பே இல்லை. "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை அந்த சின்ன பெண் பாட பாட என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். DIVINE.  

  • நிகழ்ச்சி நடந்த TRADE CENTER முழுக்க ஏகப்பட்ட பிரபலங்களின் தலைகள். அவர் ஒரு கடம் வித்வான் என்று நினைக்கிறேன்... நிகழ்ச்சிக்கு கடம் கொண்டு வராத காரணத்தினாலோ என்னவோ ஒவ்வொரு பாட்டுக்கும் தலையாலே கடம் வாசித்து கொண்டிருந்தார். 

  • பார்வையாளர் கூட்டத்தை கேமரா அணுகும் போதெல்லாம் அழகான பெண்களை மட்டும் நின்று நிதானமாக ரசித்து விட்டு மற்றவர்களை வேகமாக கவர் செய்து கொண்டிருந்தது. நல்ல ரசனைக்கார கேமரா மேன்.   

  • புஷ்பவனம் குப்புசாமி பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டிருக்க, அவர் பாடிய பாடல் ஒன்று மேடையில் வேறு ஒருவர் பாடும் போது,  புஷ்பவனம் குப்புசாமி முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெருமிதமும், கூடவே அவரும் சேர்ந்து பாடியதும் ஒரு உண்மையான கலைஞன் தன்னுடைய படைப்புக்கு கிடைத்த மரியாதையே உணர்ந்த நல்ல தருணங்கள். 

  • நிகழ்ச்சி இரவு ஒரு மணியே தாண்டி சென்ற போதும், பச்சை டி - ஷர்ட் அணிந்து தலையில் குல்லா போட்ட  அந்த குட்டி பாப்பா தன பெரிய கருவிழிகளால் கொட்ட கொட்ட நிகழ்சிகளை ரசித்ததை காட்டிய போது அவ்வளவு ஆச்சரியம்.   

  • நிகழ்ச்சியின் SURPRISE கிப்ட் தனுஷ் ஜி.வீ . பிரகாஷ் இணைந்து பாடிய "காதல் காதல்" பாடல். ரொம்பவே  ராவான பாடல். அதே போல அந்த படத்தின் டிரைலரும் மிரட்டல் ரகம்.  

  •     போட்டியாளர்கள் நான்கு பேரில் சாய் சரண் வெறித்தனமாக பாடியதை நன்கு உணர முடிந்தது. சந்தோஷ் பாடிய "ஆரோமலே "   WILD CARD ரவுண்டில் ஸ்ரீநிவாஸ் பாடிய அளவிற்கு பெரிதான ஒரு இம்பாக்ட்டை கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்திற்கு வந்தது இதில் எதோ ஒரு உள்குத்து இருக்கிறது என்பதை நன்கு உணர்த்தியது. 

  • இந்த நிகழ்ச்சியில் முதல் இறுதி போட்டியாளராக தேர்ந்தேடுக்கபட்ட பூஜா நான்காம் இடத்தை பிடித்தது ரொம்பவே சோகம். "மன்னவன் வந்தானடி " பாடலில் ஜதிகளும், ஆலாபனைகளும்  அவ்வளவு பெர்பெக்ட்டாக இருந்த போதும் நான்காம் இடம் நாமே எதிர் பார்க்காத ஒன்று. கவுன்ட் டௌன் முடிந்து தன் பெயரை சொல்லும் போது அவ்வளவு சிரித்த முகமாக இருந்த போதும் கண்களில் தெரிந்த அந்த அரை நொடி அதிர்ச்சி தான் ஏன் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டோம் என்கின்ற பலமான கேள்வியே சுமந்திருந்தது. 

  • பூஜாவை  விட பரிதாபத்திற்குரிய  ஜீவன் சத்திய பிரகாஷ்தான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய தினத்தில் இருந்தே அவரின் ரசிகன் நான். பாடல் வரிகளை விதவிதமாக வளைத்து நெளித்து அவர் உச்சரிக்கும் ரகம் அவ்வளவு நன்றாக இருக்கும். இறுதிப்போட்டியில் ஓமனே பெண்ணே பாடலில் கர்னாடிக்கும், வெஸ்ட்டர்னும் கலந்த காக்டெயில்  அவ்வளவு சுவை.    அதற்க்கு உண்டான அங்கீகாரம் அவருக்கு கொடுக்கப்படவில்லை என்பதுதான் இசை ரசிகர்கள் எல்லோருடைய ஆதங்கமாக இருக்க கூடும். என்னை பொறுத்த வரை உண்மையான சூப்பர் சிங்கர் சத்திய பிரகாஷ்தான். சாய் சரண் எவ்வளவு துல்லியமாக பாடிய போதும் சத்திய பிரகாஷின் குரலில் இருந்த வசீகரமும் கூல்னசும் நிச்சயம் சாயிடம் இல்லை.    
  
  • முதல் பரிசுக்கான தகுதியே இறுதி போட்டி ஒன்றில் மட்டுமே வைத்து முடிவு செய்து விடக்கூடாது என்பதை நன்கு தெளிவுறுத்திய நிகழ்ச்சி இந்த AIRTEL SUPER SINGER SESSION 3. 

டிஸ்கி - தமிழ் 10 , யுடான்ஸ், இன்ட்லியில் ஓட்டு போட உங்களுக்கு 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலே போதுமானது. SO... VOTE PLEASE... IF YOU LIKE THIS.....   

Comments

  1. சுஜாதா அவர்களின் மகளும், ஸ்ரீநிவாஸ் மகளும் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும் அவ்வளவு இனிமை./

    அப்படியா பாடுனாங்களா ....

    நான் ஒன்பது மணில இருந்து தான் பார்த்தேன்

    ReplyDelete
  2. பாஸ் ஆனா சத்திய பிரகாஸ் னு ஒருத்தர் பாடினாரே
    அவருக்கு தான் வின்னர் டைட்டில் குடுதுருக்கணும் ..


    நெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்

    ReplyDelete
  3. hai stalin...

    thanks for your comments...

    sathiya prakash is the best...

    ReplyDelete
  4. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே ஒரு கண் துடைப்பு. இதை சென்ற சூப்பர் சிங்கர் ஜூனியரிலேயே நாங்கள் உணர்ந்தோம். நன்றாகப் பாடக்கூடிய சிறுமிகளை ஓரங்கட்டிய விதமும்.. இதோ இன்றைக்கு நீங்கள் பாரட்டிக் கொண்டிருக்கும் அல்காவிற்கு அவர்கள் செய்த உதவியும் எக்கச்சக்கம். ஒரு முறை நித்யஸ்ரீயை விலக்கம் செய்து விட நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. இத்தனைக்கும் அவர் அன்று நன்றாகப் பாடியிருந்தார். சிறப்பு நடுவராக வந்த எஸ்.ஜானகி அவர்கள் உள்புகுந்து காப்பாற்றினார்.

    சத்யபிரகாஷால் பாட்டும் நானே பாடலைச் சுவையாகப் பாடியிருக்க முடியாது என்பது என் கருத்து. அதுவுமில்லாமல் ஒவ்வொரு முறையும் மலையாளிகளுக்கு பட்டம் குடுக்கின்றார்கள் என்ற எரிச்சல் விஜய் டீவிக்கு இந்த முறை புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். அதுவும் சத்தியப்பிரகாசுக்கு உதவாத காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  5. சத்திய பிரகாஷின் குரலில் இருந்த வசீகரமும் கூல்னசும் நிச்சயம் சாயிடம் இல்லை

    ReplyDelete
  6. ஒட்டு மொத்தமாக முன்னரே முடிவு செய்து மக்க்களை முட்டாளாக்குவது இந்த சேனல் காரர்களுக்கு
    கைவந்த கலை. சாய் சரண் என்பவர் நன்றாக பாடினார் ஆனால் பாட்டும் நானே பாடலில் 'பா'Pa வுக்கும்
    பா Baa வுக்கும் வித்தியாசம் காட்டாமல் பாடியே சூப்பர் சிங்கர் ஆகிவிட்டார். இது ஒரு அப்பட்ட்டமான
    கண்துடைப்பு நிகழ்ச்சி என்று சொன்னால் மிகை ஆகாது. சத்ய பிரகாஷ் தான் உண்மையான வெற்றியாளர்.
    பூஜாவையும் இந்நிலைக்கு தள்ளியது வருந்ததக்கது.
    சத்யா பிரகாஷ் கண்டிப்பாக நல்ல பாடகராக வருவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, ஏனெனில்
    பின்னணி பாடல் உலகில் இது போன்ற செயல்கள் வெற்றி அளிக்காது. இது முந்தைய வெற்றியாளர்களின்
    நிலையைப் பார்த்தாலே நன்கு தெரியும். உண்மையான திறமை மட்டுமே நீண்ட நாள் நிலைக்கும்.

    ReplyDelete
  7. மலையாளிகளுக்காக மலையாளிகளால் நடத்தப்படும் நிகழ்ச்சி தான் Airtel supersinger. Doubt iruntha check all episodes

    ReplyDelete
  8. malaiyali and bramin only allowed that is cheating drama manooo

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....