கோப்பையும்... கனவும்.....

"நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டாண்டா..." என்கின்ற கோஷத்துடன் முதல் போட்டியையே ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கிறார்கள் நம் பசங்கள்... வருடம் முழுதும் பிரியாணி தின்றாலும், இரண்டு வருடத்திற்க்கொருமுறை வன பத்ரகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டி சுட சுட சாப்பிடும் பிரியாணி போல... எத்தனையோ தொடர்கள் நடந்தாலும் உலகக்கோப்பை தனி விசேஷம்... தனி விருந்து... 1996 ம் வருட உலகக்கோப்பை... இந்தியாவும்... பங்காளி பாகிஸ்தானும்... இரண்டாம் பாதி ஆட்டத்தில் அன்வரும்... அமீர் ஷோகைலும் மதம் கொண்ட காட்டெருமைகளை போல...காட்டுத்தனமாய் விளாசி... கடுப்பை கிளப்ப... அதே ரீதியில் அமீர் கடைசி வரை விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும்... எவன் ஒருவன் ஆணவத்தில்.. தலை கனத்தில் ஆட ஆரம்பிக்கிறானோ... அப்போதே அவன் அழிவு ஆரம்பமாகிவிடுகிறது... பச்சை புள்ளை கணக்காய் பந்து வீசிகொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாந்தை தேவையில்லாமல் சீண்ட... அடுத்து வீசிய பந்தில்... ஸ்டம்ப் சிதறி மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் எகிறியது.....