ராஜபாட்டை - விமர்சனம்

நம்பிக்கையான இயக்குனர் என நம்ம்ம்ம்பி முதல் நாளே படம் பார்க்க போனால் காலை வாரி விட்டு முகத்திலேயே மிதிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று. ராஜபாட்டையும் அந்த பாதையில்... அழகர் சாமியின் குதிரை, நான் மகான் அல்ல.. என வித விதமான கதை களனில் கவர்ந்த சுசிந்தரன் முதல் முறையாய் வாங்கியிருக்கும் அடி... படம் பார்க்கும் நமக்கும் பார்த்து முடித்து வெளியே வரும் வரை வலிக்கிறது... தமிழகத்தில் மோசமான வியாதியாக பரவியிருக்கும் நில அபகரிப்பு பிரச்சனைதான் கதையின் அடிநாதம். நல்ல கருதான். ஆனால் அதை சொல்லி சென்ற விதத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டாமா? ஒரு மாஸ் ஹீரோவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக தினசரிகளை மேலோட்டமாக மேய்ந்து விட்டு குத்து மதிப்பாக படம் எடுத்தால் உருப்படாது என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். விக்ரமை இந்த அளவு கன்றாவியாக எந்த படத்திலும் காட்டியதில்லை. அவரது ஹேர் டிசைனருக்கு எதாவது சம்பள பாக்கியா என்ன என்பது தெரியவில்லை. ப்ளீச் செய்கிறேன் பேர்வழி என்று முடிந்தவரை அவரது இமேஜை டேமேஜ் செய்திருக்கிறார். முகத்தில் நன்கு தெரியும் சுருக்கங்களும...