Monday, May 10, 2010

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - விமர்சனம்


புளித்த மசாலா தோசைகளையே சாப்பிட்டு கொண்டிருந்த நமக்கு, தமிழ் ஸ்டைலில் சிம்பு தேவன் பரிமாறியிருக்கும்  ஒரு அமெரிக்கன் சாண்ட்விட்ச் தான் இ கோ மு சி. 
இது ருசி மிகுந்ததா, ருசி குறைவா என்பதை பின்னால் பார்க்கலாம். 

ஏறக்குறைய மறந்துவிட்டிருந்த கௌபாய் கலாச்சார கதைகளை திரையில் கொண்டு வந்தமைக்காகவும், இந்த கால குழந்தைகளுக்கு அதை அறிமுகம் செய்து வைத்ததற்கும் சிம்புவுக்கு முதலில்  ஒரு சபாஷ்.  

அநியாயம் செய்யும் வில்லன், அதை தட்டி கேட்கும் புரட்சி  ஹீரோ, ஆள் மாறாட்டம், இடையில் ஒரு காதல், கிளைமாக்சில்  புதையல் வேட்டை என தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கதையே, கௌபாய் மக்கள், குதிரைகள், சுழலும் துப்பாக்கிகள்,  செவ்விந்தியர்கள் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க ஒரு நேரடியான காமெடி படம் அல்ல . BLACK HUMOUR வகையே சார்ந்தது. கசப்பு  மருந்தை வாழை பழத்தில் வைத்து தருவதை போல    சமூக கருத்துக்களை நகைச்சுவை போர்வையில்  சொல்லியிருப்பதில்  இயக்குனர்  சிம்பு தேவன் வித்தியாசப்பட்டு தெரிகிறார். முக்கியமாக அணு குண்டு  ஒப்பந்த காட்சியில்,  நாம் அமெரிக்காவுடன்  முட்டாள் தனமானமாக செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தை   V S  ராகவன் அவர்கள் கேட்கும் கேள்வியின் மூலமாக கொட்டுபவர், படம் முழுதும் நடைமுறை சமூக பிரச்சனைகளை வசனங்கள் மூலம் தொட்டுப்போகிறார். இது போன்ற குறியீடுகளாலேயே நகைச்சுவை காட்சிகள் அமைந்திருப்பதால் எல்லா தரப்பு ரசிகனுக்கும் இது புரியுமா என்பதே கேள்வி. 

மற்றபடி, படம் நெடுக காட்சிபடுத்துதல்களில் சின்ன சின்ன ரசனையான ஹைகூகளை தெளித்து தன் கார்டூனிஸ்ட் திறமையே நிலை நாட்டியிருக்கிறார் இயக்குனர். "இங்கு குரல் வளை நெறிக்கப்படும், தின ஒப்பாரி, ஜெய் ஷங்கர் புரம்" என புன் முறுவல் பூக்க வைக்கும் விஷயங்கள் படத்தில் ஏராளம். 

படத்தின் மெயின் ஹீரோ, MS பாஸ்கரும், அவரது மொழி பெயர்ப்பாளராக வருபவரும்தான். மட்ட  குதிரை போல மெதுவாக செல்லும் காட்சிகள் இவர்கள் வந்ததற்கு பிறகு ரேஸ் குதிரை வேகம் எடுக்கிறது. இயல்பான உடல் மொழியிலும், வசன உச்சரிப்புகளிலும் பிரமாத படுத்தி இருக்கிறார்கள். ராகவா லாரன்சின் துப்பாக்கி சுழற்றும் ஸ்டைலும், நடனமும் குழந்தைகளை கவரும் அம்சங்கள். மூன்று ஹீரோயின்கள் இருந்தும் யாருக்கும் பெரிதாய் திறமையே காட்ட சந்தர்ப்பம் இல்லை. 


படத்தில் குறிப்பிட்டு சொல்ல பட வேண்டியவர் கலை இயக்குனர். குங் பூ புத்தர் சிலை, மர வீடுகள் என படம் முழுதும் இவரது உழைப்பு பாராட்ட பட வேண்டிய ஒன்று. 
இந்த படத்தின்  மெயின் வில்லன் கிழக்கு கட்டை நாசர் அல்ல. இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் தான். ஒவ்வொரு பாடல் வரும் போதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரா பட்சம் இல்லாமல் கேண்டீனை நோக்கி படை எடுக்கின்றனர். பாடல்கள் அனைத்தும் அவ்வளவு மொக்கை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என புத்தகத்தில் படித்திருக்கிறேன். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன் GV பிரகாஷ் குமார் உருவத்தில். 

லக்கி லுக் கௌபாய் கதைகளை காமிக்ஸ் புத்தகத்தில் படிக்கும் போது நம் கற்பனையின் அளவு எல்லையற்று படு பிரம்மாண்டமானதாய் இருக்கும். இயக்குனரும், தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு காட்சிபடுத்தியிருந்தாலும், திரையில் பார்க்கும் போது நம் கற்பனையின் அளவோடு இங்கு  ஒப்பிட்டு போகாதது ஒரு குறையே. காமிக்ஸ் கதைகளை படமாக்கும் போது எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சனை இதுவே. 

இருப்பினும், இந்த மாதிரி BLACK HUMOUR படங்கள் வரவேற்க பட வேண்டியதே. சிரிக்க மட்டுமில்லாமல்.. சிந்திக்கவும் வைப்பதால்....

பிளஸ் (+)

கலை இயக்கம்
வசனங்கள்
MS பாஸ்கர் மற்றும் அவரது மொழி பெயர்ப்பாளர்

மைனஸ் (-)
இசை
திரை கதை
ஹீரோயின்கள்

VERDICT  : பார்க்கலாம், தவறில்லை. 
RATING     :  3 .9  / 10

EXTRA பிட்டுகள் 

கான்டீன் உரிமையாளருக்கு அளவில்லா சந்தோஷம், "இப்படி எல்லா படத்திலையும் பாட்டு இருந்தா போதும் சார், நான் சீக்கிரம் மேலேறிடுவேன்"

 ஒரு குழந்தை, தன் அப்பாவிடம்,  " அப்பா உன் பேச்சை கேட்டு நான் இந்த படத்திற்கு வந்தேன்ல..  நீ என் பேச்சை கேட்டு நாளைக்கு குட்டி பிசாசுக்கு வரனும்" என்றது. அந்த தகப்பன் "சரி சரி" என உறுதி அளிக்க, கல்யாணம் , குழந்தை என ஆகும் போது இப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதே வயற்றில் புளியே கரைக்கிறது.

8 comments:

 1. ஒரு குழந்தை, தன் அப்பாவிடம், " அப்பா உன் பேச்சை கேட்டு நான் இந்த படத்திற்கு வந்தேன்ல.. நீ என் பேச்சை கேட்டு நாளைக்கு குட்டி பிசாசுக்கு வரனும்" என்றது. அந்த தகப்பன் "சரி சரி" என உறுதி அளிக்க, கல்யாணம் , குழந்தை என ஆகும் போது இப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதே வயற்றில் புளியே கரைக்கிறது.//


  பயப்படாத அப்படி பயந்தா எவனுக்கும் கல்யாணம் ஆகாது..

  ReplyDelete
 2. BOSS, நான் பயந்தது குட்டி பிசாசை நினைச்சு...

  மனோ

  ReplyDelete
 3. விமர்சனம் வித்யாசமா இருக்கு. படத்தை அனுபவிச்சுதான் பார்த்து இருக்கீங்க.

  ReplyDelete
 4. Romba nalla eludhi irukinga.. Oru vidyasamana nadai..:-)

  ReplyDelete
 5. பார்க்கலாம், தவறில்லை...

  ReplyDelete
 6. ஜானகிராமன்May 10, 2010 at 4:02 PM

  but, உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

  ReplyDelete
 7. ///இது போன்ற குறியீடுகளாலேயே நகைச்சுவை காட்சிகள் அமைந்திருப்பதால் எல்லா தரப்பு ரசிகனுக்கும் இது புரியுமா என்பதே கேள்வி. ///

  பலருக்குப் புரியவில்லை என்பதை தியேட்டரில் உணர முடிந்தது. நீங்கள்கூட பல காட்சிகளில் தனியாகச் சிரித்திருப்பீர்கள்போல!

  ReplyDelete
 8. சிம்புத்தேவனுக்காகவும்,புதிய முயற்சிக்காகவும் பார்கலாம்

  ReplyDelete

you might like this also...

Related Posts with Thumbnails