சிங்கம் - விமர்சனம்

நீங்கள் முனியாண்டி விலாசுக்கு போனால் கொத்து பரோட்டாவும், கோழி குருமாவும் தான் கிடைக்கும். தெரிந்தே சென்று விட்டு அங்கு வெண் பொங்கல் இல்லை, பட்டர் ரோஸ்ட் இல்லை என்று சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஹரி படங்களில் நான் லீனியர் திரைக்கதை உத்தியயியோ வித்தியாசமான கதாபாத்திரங்களையோ நீங்கள் எதிர்பார்ப்பதும் அப்படியே. அவரது எல்லா படங்களில் இருக்கும் மசாலா கலவைதான் இதிலும். வழக்கமான திருடன் போலீஸ் கதைதான். ஆனால் வேகமான திரைக்கதை மூலம் 2 1/2 மணி நேரத்தை அனாயசியமாக கடக்க வைத்திருக்கிறார் ஹரி. சொந்த ஊரில் போஸ்டிங் வாங்கிகொண்டு, ஊர் மக்களின் அன்போடு சப் - இன்ஸ்பெக்டராக இருக்கும் சூர்யா, சென்னையில் தாதாவாக இருக்கும் பிரகாஷ் ராஜ், இருவரையும் விதி ஒரு கண்டிஷன் பெயில் கையெழுத்து பிரச்சனையில் இணைத்து வைக்க, சொந்த ஊரில் அவர் மீது கை வைக்க முடியாது என தனது செல்வாக்கால் சென்னைக்கு இன்ஸ்பெக்டராக மாற்றல் செய்ய வைக்கிறார் பிரகாஷ். சென்னையில் பிரகாஷ் கோஷ்டி கொடுக்கும் குடைச்சலை சமாளித்து எப்படி வில்லனை வேரருக்கிறார் எ...