Wednesday, April 21, 2010

PHOONK 2 - விமர்சனம்


ராம் கோபால் வர்மாவின் சிஷ்ய பிள்ளை இயக்கிய படம்.  ட்ரைலரையும்  முதல் பாகத்தையும்  நம்பி உள்ளே போனால் இருக்கிறது பெரிய ஆப்பு. 

பாழடைந்த பங்களா, அங்கு குடி வரும் குடும்பம், இரண்டு குழந்தைகள், ஒரு வேலைக்காரி, சந்தேகத்திற்கிடமான தோட்டக்காரன். சுற்றிலும் எந்த வீடுமில்லாத தனிமை.  மெல்ல நின்று நின்று நகரும் கேமரா, பீதியே கிளப்பும் பின்னணி இசை  என எல்லா பேய் படங்களிலும் வரும் பார்முலா அட்சரம் பிசகாமல் இதிலும் இருக்கிறது. 

வா அருகில் வா, 13ம் நம்பர் வீடு, உருவம், என எல்லா படங்களிலும் இருந்து காட்சிகளை சுட்டது போல மிக அரத பழசான திரைக்கதை.  முதற் பாதி முழுதும் வீட்டை ஒரு அங்குலம் விடாமல் சுற்றி சுற்றி வருகிறார்கள்....,  தீடிர்  தீடிரென கருப்பு நைட்டியில், தலை விரி கோலமாய், முகத்தில் கருப்பு பெயிண்ட் அடித்து ஒரு பெண்ணை காட்டுகிறார்கள். அவர்தான் பேயாம். அதை பார்த்ததும் நாம் பயந்து விட வேண்டுமாம், போங்கடா டேய்...இதெல்லாம் 20 வருசத்துக்கு முன்னாடியே  தக்காளி சீனிவாச அண்ணன் படத்தில பார்த்தாச்சு...

இரண்டாம் பாதியில் சம்பந்த சம்பந்தமே இல்லாமல் இழவு மேல்  இழவாக விழுகிறது... எவன் சாகிறான், எதுக்கு சாகிறான் என ஒரு முகந்திராமும் இல்லை. அவர்கள் கொல்லப்படும் விதமும் படு மொக்கை.  நடுவில்,  பிட்டு  படம் போல ஒரு முத்த காட்சி.. கிரகம் அதுவும் சிறப்பாக படமாக்கபடவில்லை. லாஜிக் என்கின்ற விஷயத்தை படத்தின் முதற்காட்சி எடுக்கும் போது பூசணிகாயுடன் சேர்ந்து உடைத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட கத்தி குத்து வாங்கியும் சாகாத கதாநாயகன்,  பேய் பிடித்த தன் மனைவியே மாடியில் இருந்து தள்ளி விட்டதும், கீழே விழுந்து பேய் இறந்து விடுகிறதாம். என்ன கன்றாவிடா   இது... 

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆவது போல, டைட்டில் காட்சிகளில் காணப்படும் வித்தியாசமான  கேமரா கோணங்கள் போக போக காணமல் போய் சராசரியாகி விடுகிறது. இந்த படத்திற்கு இதுவே அதிகம் என ஒளிபதிவாளர் நினைத்திருக்கலாம். 

 100  பேர் வயலினை  வாசிக்க தெரியாமால் வாசித்தால் எப்படி இருக்கும்.. அப்படி இருக்கிறது  பின்னணி இசை கடைசி கட்டங்களில்.

மிக குறைந்த லோ பட்ஜெட் படம் என்பதால், ராம் கோபால் வர்மா தப்பித்துவிடுவார்.. மாட்டிக்கொள்வது    படம் பார்க்கும் நாம்தான். 

பிளஸ் (+)

அந்த குட்டி பெண் போகும் போது பேய் பிடித்த பொம்மை  தலை திருப்பி பார்க்கும் அந்த காட்சி மட்டும்.

மைனஸ் (-)

1980 க்களின் திரைகதை.
கதை, கிளைமாக்ஸ்.
அழுத்தம் இல்லாத காட்சிகள்

VERDICT  :  தலை வலி.

RATING : 2.1 /10

EXTRA பிட்டுகள்.  

இந்த படத்தை பெங்களூர் போரம் ஷாப்பிங் மாலில் உள்ளே PVR மல்டி பிளக்சில் பார்த்தேன். திரையரங்கின் உள்கட்டமைப்பும் , சவுண்ட் எபெக்டும் உலக தரம். ஆனாலும்  ஒரு பாப்கார்ன் 160 ரூபாய் என்பது பகல் கொள்ளை.

என் வரிசயில் அமர்ந்திருந்த இரண்டு டீன் ஏஜ் பெண்கள், படத்தில் எதாவது பயமுறுத்தும் காட்சி வரும்போது, இரண்டும் கத்திக்கொண்டே  ஒன்றைஒன்று   கட்டி பிடித்துக்கொண்டது  அவ்வளவு அழகு. படத்தை விட, அவர்களது லூட்டிகள் படு சுவாரசியம்.

6 comments:

 1. எல்லா திகில் படங்களிலும் ஏதாவது வித்தியாசமாக நடக்கும் போது மட்டும்,படத்தின் பின்னணி இசை மேலும் திகிலூட்டுவது போல் இருக்கும்.ஆனால் இந்தப் படத்தில் படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஏதோ பெரிதாக நடந்தது போல்/காட்டப்போவது போல் பின்னணி இசை போட்டு நம்மை வெறுப்பேற்றுகிறார்கள்.படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஏற்பட்ட ஒரே பயம் 'PHOONK-3'வந்துடக்கூடாது என்பது மட்டும்தான்.

  ReplyDelete
 2. என் வரிசயில் அமர்ந்திருந்த இரண்டு டீன் ஏஜ் பெண்கள், படத்தில் எதாவது பயமுறுத்தும் காட்சி வரும்போது, இரண்டும் கத்திக்கொண்டே ஒன்றைஒன்று கட்டி பிடித்துக்கொண்டது அவ்வளவு அழகு. படத்தை விட, அவர்களது லூட்டிகள் படு சுவாரசியம். //

  மனோ நீ என் சிஷ்யன்றதை நிருபிச்சிட்டபா...

  ReplyDelete
 3. வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

  ReplyDelete
 4. DEAR ANONY,

  இந்த பதிவிற்க்கு எதற்க்கு இப்படி ஒரு COMMENT என்று சத்தியமாய் புரியவில்லை. விளக்கினால் நன்று.

  மனோ

  ReplyDelete
 5. //பிட்டு படம் போல ஒரு முத்த காட்சி.. கிரகம் அதுவும் சிறப்பாக படமாக்கபடவில்லை. //

  நான் இதை பத்தி சொல்ல மறந்துட்டேன்...
  பை தி வே நீங்க சொல்லீட்டிங்க....
  நடுவுல ஏதோ பிட் படம் மாத்தி வந்துருச்சோனு
  நான் நினைச்சேன்....ஆனா சிறப்பா இல்லை...!!

  ReplyDelete

you might like this also...

Related Posts with Thumbnails