என்னுயிர் காதலிக்கு...


 • பார்க்கும் பெண்கள் எல்லாம் உன்னை ஞாபகபடுத்தினாலும்... உன் வெட்கம் கலந்த புன்னகை யாருக்கும் வாய்க்காதது.. அதில் மிளிரும் காதல் எனக்கானது என்பதில் எனக்கு சற்று கர்வமே...

 • நீ பேசும் போது உன் முக பாவங்களையே ரசித்துக்கொண்டிருப்பதால் வேகமான ரயில் பெட்டிகளை போல கடந்து விடுகிறது நீ சொல்லி சென்ற விஷயங்கள்....  நீ அதை திருப்பி கேட்கும் பொழுது அசடு வழிவதில் உள்ள சுகம் ... சொர்க்கம்

  • குறுந்தகவல்களில் கொஞ்சி பேசும் நீ... நேரில் பார்க்கும் போது மௌனமாகி விடுகிறாய்... உள்ளுக்குள் கெஞ்சுகிறேன் நான்.. ஒரு முறையாவது கொஞ்சேன்....!

  • வேறு பெண்களை பற்றி சிலாகித்து  பேசும்பொழுது.. பார்வையால்  எரிக்கிறாய் நீ ...  சுகமாய் எரிவது நானும்....  சுட்டேரிந்து போவது.. பாவம் அந்த பெயர் தெரியா பெண்களும்..
   
  • பின் சீட்டில் அமர்ந்து என் தோள்களை இறுக பற்றிகொள்ளும் போது.. நான் த்ராட்டிலை திருகும்  வேகத்தில் தெறிக்கின்றன நமக்குள்  இருக்கும்  காதல்களும்... மறைந்திருந்த   உற்சாகங்களும்....

  • உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறேன்..  உன் உதடுகளுடனான சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கின்ற பேராசையுடன்.....

  Comments

  1. என் காதலின் நினைவை கண் முன்னே கொண்டுவந்ததிற்கு நன்றி.
   சூப்பர் கவிதை

   ReplyDelete
  2. அருமைங்க. வாழ்த்துக்கள்

   ReplyDelete
  3. Not Badddddddddddddddd

   ReplyDelete
  4. பார்க்கும் பெண்கள் எல்லாம் உன்னை ஞாபகபடுத்தினாலும்...

   குறுந்தகவல்களில் கொஞ்சி பேசும் நீ... நேரில் பார்க்கும் போது மௌனமாகி விடுகிறாய்...

   super boss :)

   ReplyDelete

  Post a Comment

  Popular posts from this blog

  வாகமன் - TOUR SPOT

  சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

  டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4