திருடன் போலீஸ் - விமர்சனம்



அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை போலீஸ் படும் அவஸ்தைகளில் வேகம் எடுத்து,  காதல் ஸ்பீட் ப்ரேக்கர்களில் தடுமாறி, பழி வாங்கும் படலத்தில் பாதை மறந்து நிற்கும் போது, வேறு வழியில்லாமல்  காமெடி என்னும் யு டர்ன் அடிக்கிறார்கள்.  

படம் பார்த்து வெளியே வருபவர்களிடம் இது எந்த மாதிரியான படம் என ஒரு கேள்வி கேட்டு சரியாய் விடை சொல்பவருக்கு ஒரு எவர்சில்வர் குடமோ, ஒரு வெள்ளி குத்து விளக்கோ பரிசாக கொடுக்கலாம். அந்த அளவிற்கு, இது அக்ஷன் த்ரில்லரா...? சென்டிமென்டல் டிராமாவா?, ப்ளாக் காமெடி வகையா என நம்மை குழம்ப வைத்து கும்மியடிக்கிறார்கள். ஆனாலும், சரியான அளவில் சரியான நேரத்தில் வரும் காமெடிகள் படத்தை காப்பாற்றுகிறது. 


நான்கடவுள் ராஜேந்திரன் (ஆண்ட்டி) ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம். இரண்டாவது ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்.   மற்ற படங்களில் எல்லாம்,  எபோலா வைரஸ் போல பய பீதியே கொடுக்கும் ராஜேந்திரன் இதில் அம்புலிமாமா ரேஞ்சுக்கு எல்லோரையும் கிச்சு கிச்சு  மூட்டுகிறார். சரியான டைமிங்கில் இவர் அடிக்கும் ஒன் லைனர்களில்  தியேட்டர் அல்லு சில்லாகிறது. கூடவே இவரது தம்பியாக வரும் ஜான் விஜய், அவரது முழியும், உடல் மொழியும் படத்தின் எக்ஸ்ட்ரா  பில்லர்.

ரசனையான வசனங்கள் இப்படத்தின் பெரும்பலம். தினேஷ் நண்பனாய் வரும் பால சரவணன்  போலீஸை கண்டு மிரளும் பப்ளிக் பற்றி பேசும் போது   தியேட்டர் முழுக்க கைதட்டல்களால்  லைக்ஸ் அள்ளுகிறது.



காதல் என்னும் வஸ்து படத்தில் இல்லையென்றால் அதை எதோ ஆர்ட் பிலிம் என்று தமிழன் நினைத்து விடுவான் என ஊறுகாய் அளவிற்கு காதல். ஹீரோயின் ஐஸ்வர்யா ஊறுகாய் போலவே ஒரு சிலீர் சுவை கொடுத்து சப்பு கொட்டி பார்க்க  வைக்கிறார். அட்லீஸ்ட், ஒரு பொரியல், கூட்டு ரேஞ்சுக்கு  அவரது காட்சிகளை விஸ்தாரம் செய்திருக்கலாம் என்பது அகில உலக ஜொள்ளர்கள் சங்கத்தின் ஒட்டுமொத்த ட்வீட்.

மிக சுவாரசியமாக கடலை போட்டுக்கொண்டிருக்கும்போது டாப் அப்  செய்ய மறந்து கனக்ஷன் கட்டானால் என்ன கடுப்பு வருமோ அது போல காமெடி விருந்துக்கு  நடுவே குறுக்கிடும் சென்டிமென்டல் உப்புமா ஆயாசத்தை ஏற்படுத்துவது உண்மை. 

படம் ஆரம்பிக்கும் போதும், இடைவேளை முடிந்து தொடங்கும் போதும் புகை பிடிப்பதை தவிர்த்துடுங்கள் என்கிறார்கள். ஆனால் மொத்த  படம் முழுவதிலும் தம் அடித்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்தை உண்டு செய்கிறார் யுவன். இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக மாறினாலும் அவரது முதல் கடவுள் இசை என்பதை அவர் புரிந்து கொண்டால் நமக்கு புண்ணியம்.

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அடடா இந்த சீனை இப்படி எடுத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமே என எல்லா சராசரி ரசிகனும் யோசிக்கும்படி செய்து   படம் பார்க்கும் அனைவருக்கும் இயக்குனர் ஆகும்  ஆசையே தூண்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.

காதல், சண்டை, அழுத்தம் இல்லாத செண்டிமெண்ட், பழிவாங்கல் என எல்லா மசாலாக்களையும்  சேர்த்து கொத்து பரோட்டா போட்டிருந்தாலும்  வாய் விட்டு சிரிக்க நல்ல காமெடி இருப்பதால்  மறப்போம் மன்னிப்போம்.

(+) பிளஸ்

நான் கடவுள் ராஜேந்திரன்
வசனங்கள்


(-) மைனஸ்

யுவன்
லாஜிக் பொத்தல்கள்
செண்டிமெண்ட் அட்ராசிட்டிகள் 

VERDICT : நான் கடவுள் ராஜேந்திரன் ராக்ஸ்......

RATING : 4.2 / 10.0


EXTRA பிட்டுகள்

ஒன்பது மணி வரை காற்று வாங்கிக்கொண்டிருந்த காசி அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹவுஸ் புல்  ஆனது தீடிர் ஆச்சரியம்.


Comments

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....