திருடன் போலீஸ் - விமர்சனம்

அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை போலீஸ் படும் அவஸ்தைகளில் வேகம் எடுத்து, காதல் ஸ்பீட் ப்ரேக்கர்களில் தடுமாறி, பழி வாங்கும் படலத்தில் பாதை மறந்து நிற்கும் போது, வேறு வழியில்லாமல் காமெடி என்னும் யு டர்ன் அடிக்கிறார்கள். படம் பார்த்து வெளியே வருபவர்களிடம் இது எந்த மாதிரியான படம் என ஒரு கேள்வி கேட்டு சரியாய் விடை சொல்பவருக்கு ஒரு எவர்சில்வர் குடமோ, ஒரு வெள்ளி குத்து விளக்கோ பரிசாக கொடுக்கலாம். அந்த அளவிற்கு, இது அக்ஷன் த்ரில்லரா...? சென்டிமென்டல் டிராமாவா?, ப்ளாக் காமெடி வகையா என நம்மை குழம்ப வைத்து கும்மியடிக்கிறார்கள். ஆனாலும், சரியான அளவில் சரியான நேரத்தில் வரும் காமெடிகள் படத்தை காப்பாற்றுகிறது. நான்கடவுள் ராஜேந்திரன் (ஆண்ட்டி) ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம். இரண்டாவது ஹீரோவாக அட்டகத்தி தினேஷ். மற்ற படங்களில் எல்லாம், எபோலா வைரஸ் போல பய பீதியே கொடுக்கும் ராஜேந்திரன் இதில் அம்புலிமாமா ரேஞ...