இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பெளத்த மதங்களின் வரிசையில் இன்னொரு முக்கியமான மதம் உண்டு. சினிமா என்கின்ற மதம்... உலகம் முழுதும் பல கோடி பேரால் விரும்பப்படும் இந்த மதத்தின், மிக முக்கிய தீவிரவாதிதான் கமல். நல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம். அதனால்தான், தமிழ்நாட்டில் இல்லாவிட்டால் என்ன... மாநிலம் விட்டு மாநிலம் தாவலாம் என வரிசை கட்டிக்கொண்டு பயணித்த வாகனங்களில் எனது பிரேக் பிடிக்காத ஓட்டை டிவிஎஸ் 50 யும் அடக்கம். கொளுத்தும் வெயில்.. மொட்டை காடு..., பழுதடைந்த சாலைகள் என பயணத்தை சிரமமாக்கும் இடர்கள் பல இருந்தாலும்... கோயம்புத்தூர் டு வேளந்தாவளம் (கேரளா தமிழக எல்லை) பயணம் எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற தீவிர சினிமா பிரியர்களுக்கு ஒரு உற்சாகமான சவாரியாகத்தான் நேற்று இருந்திருக்க கூடும். அவரின் இந்த புதிய படைப்பு நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் எ...