கடல் - விமர்சனம்

எல்லோரும் கழுவி ஊற்றி விட்டார்கள், ஆனாலும், மனசை தொடுகிற ஒன்றிரண்டு காட்சிகளாவது மணி சார் ஸ்டைலில் இருக்காதா என்ற எதிர்பார்ப்புடன் தான் டிக்கெட் எடுத்தேன். அதே போல ஒன்றிரண்டு காட்சிகள் இருந்தது என ஒப்புக்கொண்டாலும் மிச்ச காட்சிகள் அத்தனையும் அபத்தங்களின் உச்சம். மீனவ கிராமம், அங்கிருக்கும் சர்ச்சுக்கு புதிதாய் வரும் பாதிரியார், அங்கு அவர் எடுத்து வளர்க்கும் ஒரு அநாதை சிறுவன், வேறொரு இடத்தில் அவர் ஏற்கனவே வளர்த்து விட்டிருந்த பகையின் காரணமாய் பழி வாங்க துடிக்கும் தாதா வில்லன், அவருக்கு வளர்ந்தும் வளராத ஒரு மகள்.. இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் கடல்... எந்த கதாபாத்திரமும் கதையில் அதன் இயல்போடு ஒட்டாமல், நமக்குள்ளும் ஒன்ற மறுத்து, கடலில் மிதக்கும் எண்ணெய் போல தனியாய் பிரிந்து அலை பாய்கிறது. மணி மணியான ஒன் லைனர்கள்... ரசனையான காட்சியமைப்புகள்.. இளமை துள்ளும் காதல் என எதை தேடி உள்ளே வந்தோமோ... அதை இரண்டரை மணி நேரமும் தேடி.. தேடி... தேடி.. தேடி.... தேடி... தேடி...கிடைக்காம...