சகுனி - விமர்சனம்

. மகாபாரத சகுனியின் பெயரை கெடுத்திருக்கிறார்கள்..... சூழ்ச்சி என்பது வெகு கவனமாக பின்னப்படும் ஒரு சிலந்தியின் வலை போல... அடுக்கடுக்கான சதிப்பின்னல்களும் அதை செயல்படுத்தும் விவேகமும் உடைய ஒரு ராஜ தந்திரம்தான். கார்த்தி இருக்கிறார்... அவர் எதை செய்தாலும் மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்று காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்கள். பூ சுற்றுவதற்கும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும். திரைக்கதையில் அந்த புத்திசாலித்தனம் இல்லாதது சகுனியே ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது. ரயில்வேயின் சப்வே திட்டத்திற்காக... அரசு ஆக்கிரமிக்கவிருக்கும் தன் பாரம்பரிய வீட்டை காப்பாற்றுவதற்காக வழக்கம் போல ரயில் ஏறும் ஹீரோ.. வழக்கம் போல அரசியல்வாதிகளால் விரட்டியடிக்கப்பட... வழக்கம் போல முதல் பாதி முழுதும் ஹீரோயினோடு காதலித்து டூயட் பாடிவிட்டு.. அதற்க்கப்புறம் சுதாரித்து... வழக்கம் போல இன்டர்வெல் ப்ளாக்கில் வீட்டை காப்பாற்ற சபதம் போட்டு.. வழக்கம் போல இரண்டாம் பாதியில் அரசியல்வாதி வில்லன்களை ஏமாற்றி வழக்கம் போல இறுதியில் வீட்டை மீட்கிறார். . என...