நொறுக்கு தீனி - 3 (13.05.12)வாரா வாரம் ஆரவாரமாய் எழுத வேண்டும் என தொடங்கியது இந்த பகுதி... என் சோம்பேறித்தனமா.....இல்லை உங்கள் நல்ல நேரமா என தெரியவில்லை... இவ்வளவு நாள் எழுதாமல்,  அதிகம் படிக்காமல் விட்டதால்,  மண்டையில் ஒட்டடை படிந்து நானே.... எதோ பழசான பொருளாய் மாறிப்போனது போல ஒரு உணர்வு. இனியும் நேரம் கடத்துவதாய் இல்லை.

வாழ்க்கை ஒரு வட்டம்டா.....

மெட்ராஸ் வெய்யிலில் வருபட்டுக்கொண்டிருப்பவனுக்கு கோயம்புத்தூர்காரனை பார்த்தால் ஒரு ஆதங்கம்.. இவனுக மட்டும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்துல குளு குளுன்னு வாழ்ந்துட்டு இருக்கானுக.. சிறுவாணி தண்ணி குடிச்சுட்டு குஷியா இருக்காங்கன்னு.. கோயம்புத்தூர் காரனுக்கு மெட்ராஸ் காரனை பார்த்தால் ஒரு கோபம்.. .. இவங்களுக்கு  மட்டும் ரெண்டு மணி நேரம் மட்டும் பவர் கட். ஆனா நமக்கு  எட்டு மணி நேரம்...  என்ன கொடுமை டா... ராமான்னு.. இந்த ரெண்டு பேரையும் பார்த்துட்டு நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறான் புதுக்கோட்டை காரன்.. எங்களுக்கு பவர் கட்டே கிடையாது... வெயில் அடிச்சாலும் சில்ல்ன்னு பீர் குடிக்க இலவசமா வீட்டுக்கு வீடு காசு வேற தராங்கனு...  

ரயில் வருது... ரயில் வருது...ஒரு நகரின் உண்மையான வளர்ச்சி என்பது... அதன் உள்கட்டமைப்பு வசதிகளின் விஸ்தாரத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.. சென்னையில் இருக்கும் மக்கள் தொகைக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் மெட்ரோ ரயில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டிய விஷயம். எல்லாமே சரியாக நடந்தால்.. அடுத்த ஆண்டு இறுதியில்(2013)  தமிழனும் மெட்ரோ ரயிலில் சவாரி செய்யும் சாதனை நிகழலாம். நிகழவேண்டும்...  மனித  வாழ்வில்.. இழந்தால்    ஈடு கட்ட முடியாதது நேரம் தான். அதை மிச்சம் செய்து கொடுக்கும் இந்த மாதிரி வசதிகள் தான் எல்லா நகரங்களுக்கும் தேவை.

 
விகடன் பக்கம்

இந்த வார விகடன்ல... 'சாந்தி' னு ஒரு சிறுகதை..... 'சாதத் மஹத் மண்டோ'ன்னு  இந்தியாவின் பிரபலமான ஒரு எழுத்தாளர் எழுதியது... ஆரம்பத்துல ஒரு மாதிரி குன்சா போனாலும்... கிளைமாக்ஸ் அட்டகாசம். ஒற்றை வரியில்  சிலிர்ப்பான ஒரு அனுபவத்தை தர்றார்... தலைவர் சுஜாதா போலவே.....

அப்புறம்.. "நிறைய நீர் கொஞ்சம் விஷம்' னு சமஸ் எழுதின ஒரு கட்டுரை.... குறிப்பிட வேண்டிய ஒன்று.  பீர் குடிச்சா கூட ஒன்னும் ஆகாது போல... ஆனா நாம குடிக்கிற தண்ணியில் கலந்திருக்கும் பிரச்சனைகளை இவர் சொன்ன விதம்.. நிஜமாவே பயமுறுத்துது...

வழக்கு படத்திற்கு இவ்வளவு மார்க் விகடன் அள்ளி தரும்னு எதிர்பார்க்கலை. 55/100.

இசை...

ஏற்கனவே மைனாவில் கேட்ட மாதிரி இருந்தாலும், மனம் கொத்தி பறவையில்... "ஜல் ஜல்" பாடலும், "என்ன சொல்ல" பாடலும் பிரமாதம்...இமான் அடிச்சு துவைச்சு காய போட்டிருக்கிறார்.

அதே போல.. கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் வரும் " உன் கண்கள்" பாடல் அட்டகாசமான மெலடி. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
எதிர்பார்ப்பு 


கடல்...... இந்த சிம்பிளான ஸ்டில் கூட ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை தூண்டுது... மணி சார்... மொத்த இந்தியாவுக்கும் படம் எடுக்காம.. தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்துற மாதிரி அழகா எடுக்க எல்லாம் வல்ல பிலிமானந்தாவை வேண்டிக்கொள்கிறேன்.


 

Comments

 1. என்ன மனோ, நொறுக்குத் தீனி, லேஸ் சிப்ஸ் பாக்கெட் மாதிரி ஆயிருச்சே... பெரிய பாக்கெட்டில் நிறைய காத்து + சில சிப்ஸ் துண்டுகள் போல கொஞ்சமா முடிஞ்சிடுச்சி! புதுக்கோட்டை மேட்டர லிங்க் பண்ணியது சூப்பர்.

  ReplyDelete
 2. எங்க ஊரை பத்தியும் சொல்லி இருக்கீங்க..நாங்க என்ன அப்படி குளு குளு ன்னா இருக்கோம்..வந்து பாருங்க...அதுக்கு சென்னை தேவலை...

  ReplyDelete
 3. எப்படியோ...புதுக்கோட்டையையும் உள்ளே இழுத்துடீங்க..அவங்க பாடு இனி ஜாலி தான்...

  ReplyDelete
 4. ஹாய் ஜானகி ராமன் சார்,

  இனி வரும் பதிவுகளில் நிறைய எழுத முயற்சிக்கிறேன்...

  thanks for your comments

  ReplyDelete
 5. ஏனுங்க... கோவை நேரம்...
  நானும் கோயம்புத்தூர்காரன்தான்...
  thanks for your comments

  ReplyDelete
 6. mano eppo irunthu NORUKU theeni eluthuringa. CHANCELESS niraya eluthanum neenga athan en ventukol. நொறுக்கு நறுக்குணு இருக்கு. மனோ.. வாழ்த்துகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4