நொறுக்கு தீனி - 4 (20.05.12)

தத்து பித்து out of form - இந்த வார்த்தை கிரிக்கெட்டில் மட்டுமல்ல... வாழ்கையிலும் அவ்வப்போது இயல்பாய் நிகழக்கூடிய ஒன்று. சில சமயங்களில், எல்லாம் வெறுத்து.. என்னடா வாழ்க்கை இது என நினைக்க தோணுமே... அதேதான்! எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கும்... தீடிரென ஒரு வெறுப்பு...குழப்பம்.. .தினசரி நடவடிக்கைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமை... ஒரு தேக்கம்... ஒரு speed breaker போல... எல்லோரும் சில சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சனை இது. நன்றாக எழுதிக்கொண்டிருப்போம்.. .தீடிரென எந்த இழவுமே தோன்றாது. வீம்புக்காய் எழுதினாலும்.. எழுதிய பின் படித்து பார்த்தால்.... நாமே காறி துப்பலாம் போல அவ்வளவு கன்றாவியாய் இருக்கும். out of form. எழுத்தாளன், நடிகன், விளையாட்டு வீரன்... சராசரி மனிதன் என பாகுபாடின்றி எல்லோரும் சந்திப்பது... தீர்மானிக்க முடியா ஒரு புதிர்தான் வாழ்க்கை.. நாளை என்ன நடக்கும் என்று ஒருத்தனுக்கும் தெரியாது... நாளை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் தேமேயென சொங்கி போக வைக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்வதல்ல இந்த ...