மயக்கம் என்ன... - விமர்சனம்

செல்வாவின் படங்கள் எப்பொழுதுமே ஒரு தனித்த அனுபவமாய்... படம் பார்த்து முடித்த பின்னும், ஞாபக செல்களில் மறவாது நீந்திக்கொண்டிருக்கும். மயக்கம் என்ன... சில பல ஆச்சரியங்களை, மன அதிர்வுகளை, ரியலிசத்தின் உச்சம் தொட்டு கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை. ஆரம்ப காட்சிகள், ஆஹா.. தவறிப்போய் சேற்றுக்குட்டையில் காலை வைத்துவிட்டோமே என நினைக்க வைத்தாலும், மெல்ல மெல்ல தெளிந்து, சலசலக்கும் நீரோடையாய் பயணம் செய்து... பின் வேகமெடுத்து பொங்கும் ஆழிச்சுழலில் நம்மையும் சிக்க வைத்து சிலிர்ப்பூட்டுகிறது. படம் நெடுக செல்வா கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியங்கள் தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் புதுசுதான் என்றாலும் வெகு ஜன ரசிகன் பொறுமையிழந்து கெட்ட வார்த்தையில் திட்டுவதையும் கேட்க முடிகிறது. எதையும் காம்ப்ரமைஸ் செய்யாமல் தன் மனம் சொன்னபடி கதை சொல்லவும் ஒரு துண...