எங்கேயும் காதல் - விமர்சனம்கல்பாத்தி S அகோரமிற்க்கும் , சன் பிக்ச்சர்சுக்கும்  ..... அரகர அரகர அரோகரா... 

இதே கதையே ராம நாராயணனிடம் கொடுத்திருந்தால், பாப்பநாயக்கன் பட்டி வயற்காட்டில்  மாதம் முழுதும் வியர்வை சிந்தி வேலை செய்து விட்டு, மாதத்திற்க்கொருமுறை  பொள்ளாச்சி டவுனுக்கு வந்து சரக்கடித்து சல்லாபம் செய்யும் இளைஞனையும் அவனது காதலையும் மினிமம் பட்ஜெட்டில் காட்டி போட்ட காசையாவது திருப்பி  எடுத்து கொடுத்திருப்பார்.  ஆனால் இதன் இயக்குனர் பிரபு தேவா என்பதால்...  அதுவும் இது நூறு சதவீத காதல் கதை என்பதால் கதை களம் பாரீஸ். அவ்வளவு தூரம் போய் எடுத்த படத்தில் கதை வேண்டாம்... அட்லீஸ்ட் கொஞ்சம் காதலாவது இருந்திருக்க வேண்டாமா... ம்ம்ஹூம்.     ஏமாற்றிவிட்டார் பிரபு. 

படத்தின்  ஹீரோ ஒரு அப்பா டக்கர். அதாவது காதல் என்ற பெயரில் ஒரே  பெண்ணிடம் மாட்டிக்கொள்ளாமல், தினம் ஒரு பெண்ணுடன் இரவை கழிப்பவர். ஜாலி வாலா.. சூதாடி சித்தன் இன்னும் என்னன்னவோ... ஆனால் ரொம்ப நல்லவர்.... எப்படி என்றால் அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை தொட கூட மாட்டார். அவரை நம்பி ஒரு பெண்கள் கல்லூரியேயே      ஒப்படைக்கலாம். அவ்வளவு பத்திரமாய் பார்த்துக்கொள்வார். 

சினிமாவில் இனிமேலும்  ஹீரோயினை லூசாக காட்டும் இயக்குனர்களுக்கு அரைலூசான மகள்களும், முழு லூசான மனைவிகளும் வாய்க்கட்டும்  என்று  சாபமிடுவதை தவிர வேறு வழி இல்லை. நிஜத்தில் இங்கு அப்படியா இருக்கிறது... ஒவ்வொரு பெண்ணும் படுத்தும் பாட்டில் ஆண் பிள்ளைகள்தான் சித்தம் கலங்கி லூசாக திரிகிறார்கள்.  இதிலும் ஹீரோயின் கீழ்பாக்கம் கேஸ். ஹீரோவை பார்த்த மாத்திரத்தில்  காதல் வயப்படுகிறார். ஆனால் காதலை சொல்லாமல்  வருடக்கணக்கில் சுவிங்கமாய் இழுக்கிறார். அவர் காதலை சொன்னாரா... ஹீரோ காதலை ஏற்றுக்கொண்டாரா என்பதை மொக்கையான காட்சியமைப்புகளில் சொல்லி கடுப்படிக்கிறார்கள். 

அவுட்டோரில் போட்ட ட்ராமா போல படம் முழுதும் அவ்வளவு நாடகத்தன்மை.. ஒரு கேரக்டர்  கூட இயல்பாக இல்லை. முதல் படத்தில் காதலை அவ்வளவு அழகாக காண்பித்த பிரபு படமா இது... நம்ப முடியவில்லை. அதிலும்... கிளைமாக்சில் ஒரு புறா வந்து காதலர்களை சேர்த்து வைப்பதை பார்க்கும் போது தலை முடி எல்லாம் நட்டுக்க நின்று விட்டது.இவ்வளவு கற்பனை வறட்சியே பிரபு தேவாவிடம் எதிர்பார்க்கவில்லை. 


படத்தின் முதல் மைனஸ்... ஹீரோயின் ஹன்சிகா..... இம்மாதிரி காதல் படங்களில்..... ஹீரோயின் கேரக்டரேஷன் ரொம்ப முக்கியம்... படத்தின் ஹீரோவிடம் சேர்ந்து ஆடியன்சும் அவரை காதலிக்க ஆரம்பித்து விட வேண்டும்...  பிசைந்து வைத்த மைதா மாவு போல இருப்பவரிடம் எந்த விதமான ஈர்ப்பும் வரமாட்டேன் என அடம் பிடிக்கிறது. 


அதே போல ஜெயம் ரவி கேரக்டர்....  முற்பாதி முழுதும் காதலை வெறுப்பவர்... பத்து நிமிட இன்டர்வெல் கேப்பில் தீடிரென காதல் வயப்படுவது....ஒசாமா பின்லேடன் பெளத்த சமயத்தில் இணைந்து... " புத்தம் சரணம் கச்சாமி" என சொல்வது போல நம்ப முடியாததாய் இருக்கிறது. 

இவ்வளவு குறைகள் இருந்ததாலும் படத்தை முழுதாய்  பார்க்க வைக்கும் ஹீரோக்கள் இருவர். முதலாமவர் ஹாரிஸ் ஜெயராஜ். இரண்டாமவர் நீரவ் ஷா . படத்தின் பாடல்களும், ஒளிப்பதிவும் அத்தனை அற்புதம். 


தூர்தர்ஷனில்... ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியே ஆரம்பத்தில் இருந்து  பார்ப்பதற்காக அதற்கு முன்பு ஒளிபரப்பாகும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியே வேறு வழி இல்லாமல் மண்டை காய்ந்து  பார்ப்பது  போல... படத்தில் எப்போது பாடல் வரும் என ஒவ்வொரு ரசிகனும் தியேட்டரில் காத்திருக்கிறான். அவ்வளவு  அழகான  மெட்டுக்கள்...  

எங்கேயும் காதல்... தீ இல்லை... நெஞ்சில் நெஞ்சில்... நங்கை ... என அத்தனை பாடல்களும்.... அவை படமாக்கப்பட்ட விதமும் அட்டகாசம். முக்கியமாக நங்கை பாடலில் மொத்த தியேட்டரும் ஆட்டம் போடுகிறது. பிரபு தேவாவின் குறும்புகள் தெரியும் ஒரே இடம் அந்த பாடல்தான். 


சுவாரசியமற்ற மொத்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விட்டு வெறும் பாடல்களை மட்டும் காட்டினால் போதும்... இந்த படம் நூறு நாட்களை தொடும்... நிச்சயமாய்.  


காதல் கொடுக்கும் உற்சாகமும்... துள்ளலும்... அளவிடமுடியாதது... காதலை காதலித்தவர் எல்லோருக்கும் இது தெரியும்... பிரபு தேவாவின் உற்சாகமற்ற இந்த காதலை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது. 


(+) பிளஸ் 

ஹாரிஸ் ஜெய ராஜ்
நீரவ் ஷா 
நங்கை பாடல் 

(-) மைனஸ்

ஹன்ஷிகா
கதை
திரைக்கதை
வசனங்கள்


VERDICT :  CAN WATCH ONLY FOR SONGS

RATING  : 4.0/10.0 


EXTRA பிட்டுகள். . 

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் படம் பார்க்கும் முறையில் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாக பாடல் காட்சிகளில் தம்மடிக்க வெளியே செல்லும் மொத்த ரசிக சிகாமணிகளும் பெவிக்கால்  போட்டது போல சீட்டில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.  அதற்க்கு பதிலாய்... சீரியசான காட்சிகளில் எல்லாம்... மொத்த ஜனமும் தெறித்து ஓடுகிறது... கான்டீன் நோக்கி... 
Comments

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4