எங்கேயும் காதல் - விமர்சனம்

கல்பாத்தி S அகோரமிற்க்கும் , சன் பிக்ச்சர்சுக்கும் ..... அரகர அரகர அரோகரா... இதே கதையே ராம நாராயணனிடம் கொடுத்திருந்தால், பாப்பநாயக்கன் பட்டி வயற்காட்டில் மாதம் முழுதும் வியர்வை சிந்தி வேலை செய்து விட்டு, மாதத்திற்க்கொருமுறை பொள்ளாச்சி டவுனுக்கு வந்து சரக்கடித்து சல்லாபம் செய்யும் இளைஞனையும் அவனது காதலையும் மினிமம் பட்ஜெட்டில் காட்டி போட்ட காசையாவது திருப்பி எடுத்து கொடுத்திருப்பார். ஆனால் இதன் இயக்குனர் பிரபு தேவா என்பதால்... அதுவும் இது நூறு சதவீத காதல் கதை என்பதால் கதை களம் பாரீஸ். அவ்வளவு தூரம் போய் எடுத்த படத்தில் கதை வேண்டாம்... அட்லீஸ்ட் கொஞ்சம் காதலாவது இருந்திருக்க வேண்டாமா... ம்ம்ஹூம். ஏமாற்றிவிட்டார் பிரபு. படத்தின் ஹீரோ ஒரு அப்பா டக்கர். அதாவது காதல் என்ற பெயரில் ஒரே பெண்ணிடம் மாட்டிக்கொள்ளாமல், தினம் ஒரு பெண்ணுடன் இரவை கழிப்பவர். ஜாலி வாலா.. சூதாடி சித்தன் இன்னும் என்னன்னவோ... ஆனால் ரொம்ப நல்லவர்.... எப்படி என்றால் அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை தொட கூட மாட்டார். அவரை நம்பி ஒரு பெண...