கோ - விமர்சனம்

ஒரு விறுவிறுப்பான நாவல் வாசிக்கும் அனுபவத்தை  அதன் சுவை குறையாமல் அப்படியே விஷுவல் ட்ரீட்டாக தருவதில் இயக்குனர் கே.வி. ஆனந்த் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். 

மணிரத்தினம் தனது ஆயுத எழுத்து படத்தில் படித்த  இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மூன்றில் ஒரு பங்காக சொல்லி சென்றதை  கே.வி இதில் முழுசாய்  பின் தொடர்ந்திருக்கிறார்.  கந்து வட்டி, கடத்தல் என படத்திற்கு படம் வேறு வேறு களம் தேடும் கே வி இதில் தேர்ந்தெடுத்திருப்பது அவருக்கு பிடித்தமான போட்டோ ஜர்னலிசம். வித விதமான புகைப்படங்களை  டைட்டிலில் வரிசைபடுத்தும் போதே போட்டோகிராபி மீதான அவரது காதல் 'கிளிக்'கிடுகிறது. .


ஒரு தின நாளிதளின் சர்க்குலேஷனை அனுதினமும் உச்சியில் வைக்க உதவுவது புகைப்படக்காரர் ஜீவாவின் பணி.அன்றாட அரசியல் அக்கப்போர்களை   இவரது கேமரா வெளிச்சம் போட்டு காட்ட...  ஒரு புதிய மாறுதலாக இளைஞர் படை ஒன்று ஆட்சியே பிடிக்க நேரிடுகிறது.   ஆட்சியே பிடிக்க மறைமுகமாக உதவிய ஜீவாவையே  திடுக்கிட வைக்கும் சாணக்கிய தந்திரங்கள் இரண்டாம் பாதியில் ஒவ்வொன்றாய் வெளிப்பட... ஹீரோ ஜீவா அதை எப்படி எதிர்கொண்டு முறியடிக்கிறார் என்பதே கதை. 


தில்லாக அரசியல் களம் கண்டிருக்கும் இயக்குனருக்கு முதலில் ஒரு சபாஷ். அன்றாட அரசியல் அவலங்களை  கண்முன் நிறுத்தி சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகளை ஒரு விளாசு விளாசியிருக்கிறார். 

காட்சிக்கு காட்சி வெளிப்படும் ஒரு ரிச்னஸ் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது. இவ்வளவு சூடான கதையில் ஜீவா கார்த்திகா  காதல் ஒரு ஜில் பியராக ஈர்த்தாலும் போதுமான ரொமான்ஸ் இல்லாதது சிறு குறை. 

கங்காரு தனது குட்டியே சுமந்துகொண்டு ஓடுவது போல படம் நெடுகிலும் ஜீவா கேமேராவை கட்டிக்கொண்டு ஓடுகிறார். சாகப்போகும் தருவாயில் இருப்பவரை கூட தனது கேமராவில்   நாலைந்து ஷாட் எடுத்துவிட்டு அதன் பின்னரே மனசு வந்து ஓடி போய் உதவும் அவரது கடமை உணர்ச்சி சில சமயங்களில் "என்னங்கடா  இது" என்று சொல்ல வைக்கிறது. 


கோடை வெயிலுக்கு  ஏற்ற குளு குளு தர்பூசனியாய் கார்த்திகா. குவிவு உதடுகள் முத்தமிடும் ஆசையே  தோற்றுவித்தாலும் ஸ்டுல் போட்டு ஏறித்தான் முத்தமிடமுடியும் என்கின்ற அவரது உயரம் நம்மூர்  ஹீரோக்களை கொஞ்சம் யோசிக்க வைக்கும்.  


சுரேஷ் பாலா வசனங்களில்  இன்னமும் இளமை கொப்புளி கொப்புளி என கொப்புளிக்கிறது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் எல்லா காட்சிகளையும் செதுக்கியிருக்கிறார்.  மணி சார், ஷங்கர் படங்களுக்கு அடுத்த படியாக       கே.வி யின் படங்களும் விஷுவல் ட்ரீட்டுக்கு உத்திரவாதம் என்பதை இந்த படம் மெய்பித்திருக்கிறது


ஹசிலி  பிசிலி என போட்ட மெட்டையே திரும்ப போட்டாலும் ஹாரிசை  ரசிக்க முடிவதற்க்கான காரணம் அவரது மெலோடிதான். "என்னமோ எதோ" பாடல் காதுகளுக்குள் மயிலிறகை விட்டு குடாய்கிறது. இந்த வருடத்தின் அட்டகாசமான சூப்பர் ஹிட் பாடல் இது.   


திரைக்கதையில் அயனுக்கு செலவிட்டதில் பாதியைத்தான்  கோ விற்கு  செலவழித்திருக்கிறார் கே வி ஆனந்த். இரண்டாம் பாதியில் திடுமென முளைக்கும் பாடல்களும், சில அரத பழசான காட்சிகளும் காண்டீனில்  சிகரெட், டீ விற்பனையே கண்டபடி உயர்த்துகிறது. 

மற்றபடி இந்த சும்மர் சீசனில் சிறந்த டைம் பாஸ் படம் கோ. 


(+) பிளஸ்

கதை
வசனங்கள்
ஒளிப்பதிவு
ஹாரிஸ்
பாடல் காட்சிகளில் புருவம் உயர்த்த வைக்கும்  லொக்கேஷன்கள்.


(-) மைனஸ்

இரண்டாம் பாதி திரைக்கதை
ஸ்பீட் பிரேக்கர் பாடல்கள்.

VERDICT : மிக சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது டைம் பாஸ் படமாக 
                   வந்திருக்கிறது. 

RATING  : 4.7 / 10.0


EXTRA பிட்டுகள் : 

ஒரு காலத்தில் செகண்ட் ரீலீஸ் படங்களும், குப்பையான மூன்றாம் தர படங்கள் மட்டுமே திருப்பூர் சிவன் தியேட்டரில் வந்து கொண்டிருந்தது. அனால் இப்போது முற்றிலும்  கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, A/C, DTS, QUBE, ONLINE BOKKING, குஷன் இருக்கைகள் என திருப்பூரின் முக்கியமான திரையரங்காக சிவன் தியேட்டர் விளங்குகிறது.   






Comments

  1. ஹாரிஸ் பிளஸ் ஆ?
    ஒரு பாட்டு மட்டுந்தான் நல்ல இருக்கு..!

    ReplyDelete
  2. விமர்சனம் அருமை

    ReplyDelete
  3. ஹாரிஸ் இன் இசை அருமை காதுக்கு இனிமை

    ReplyDelete
  4. விமர்சனம் நன்றாக இருக்கிறது... வசனம் சுபா தானே...????

    ReplyDelete
  5. விமர்சனம் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....