தேகம் - புத்தக விமர்சனம்



சென்னை புத்தக கண்காட்சியில் சாருவின் "தேகம்" வாழைக்காய் பஜ்ஜி போல சுட சுட விற்றுக்கொண்டிருந்தது. அப்போது என் நிதி  நிலைமை சற்று சிறப்பாக இல்லாத படியால் வாங்க முடியாமல் போய் விட்டது. 

இடையில்... என் நண்பனொருவன்... புத்தகங்களின் மீது அதிகப்படியான ஈடுபாடு இல்லாதவன், என் தொடர் நச்சரிப்பின்  காரணமாக புத்தகம் படிக்க ஆரம்பித்து   சுஜாதா, கல்கி மூலமாக புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை நிறையவே வளர்த்திருந்தான். புதிததாய் கல்யாணமான தன மனைவியுடன் திருப்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றவன்... அங்கிருந்து செல்பேசியில்... என்ன புத்தகம் வாங்கலாம்... சொல்லுடா என்றான். நானும்.... இரண்டு மூன்று நல்ல சுஜாதா புத்தகங்களை சொல்லிவிட்டு... கடைசியாய்... சாருவின் தேகம் கிடைத்தால் வாங்கி படி..  ரொம்ப நல்ல இருக்குதாம் என்றேன். கணவன் மனைவி சகிதம் நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி.. தேடியலைந்து ஒரு வழியாய் 'தேகம்' வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறான். அன்றிரவே... எனக்கு போன்... எடுத்தால்... எழுத்தில் சொல்ல முடியாத தூய தமிழ் கெட்ட வார்த்தைகள் நான்கைந்தை சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.  இரண்டு நாட்களுக்குள்  அவனிடமிருந்து ஒரு கூரியர்... பிரித்தால் சாருவின் பள பளா தேகம். புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே  "படித்து வாழ்வில்  முன்னேற தகுந்த புத்தகம்" என அவன் கையெழுத்து.

படிக்க ஆரம்பித்தேன்.... இரண்டே இரவுகள்.... முடித்துவிட்டேன்..... இலக்கியம் என்றால் என்ன என்கின்ற ஆதாரமான கேள்விக்கு அப்பொழுதுதான் எனக்கு விடை கிடைத்தது.  இலக்கியம் என்றால் என்ன?   

முதல் தகுதி... படிக்கும் எவனுக்கும் ஒரு எழவும் புரிய கூடாது.... இரண்டாவது...  ஒரு கோர்வையில்லாமல் மனம் போன போக்கில் எதையாவது... எதைப்பற்றியாவது எழுதி  வைப்பது..... மூன்றாவது ஆண் பெண் பிறப்புருப்புக்களை... உடலுறவை பற்றி விலா வரியாக அலசுவது.. கடைசியாக பாயசத்தில் கொஞ்சம் முந்திரிகளை மிதக்க விடுவது போல... சில பல கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது... சாருவின் இலக்கியம் இந்த வட்டத்திற்குள்ளேயே  அடைபட்டு விடுகிறது.  புரியவில்லை.... என்ன மாதிரியான நோக்கத்திற்காக சாரு இப்படி எழுதுகிறார். என்ன சொல்ல வருகிறார். ஒரு வேளை.. திரும்ப திரும்ப வாசித்தால் எதாவது உள் அர்த்தம்...மனித குலம் அறிந்து.. விளங்கி.. ஆழ்மனம் பன்படும் அளவிற்கு அதில் புதைந்திருக்குமா  தெரியவில்லை... என் சிற்றறிவிற்கு  சத்தியமாக  ஏதும் தட்டுப்படவில்லை. 


தர்மா என்னும் ஒரு கதாபாத்திரம்... அவர் சில நேரங்களில் மூன்றாம் தர ரௌடி கும்பல்களோடு இணைந்து சுற்றிக்கொண்டிருக்கிறார்... சில நேரங்களில் ஷேக்ஸ்பியரே  தான் எழுதுவதெல்லாம்  ஒரு எழுத்தா என வெட்கி தலை குனியும்  அளவிற்கு கவிதை கிவிதை எல்லாம் எழுதுகிறார்... தான் ஒரு எழுத்தாளன்  என்று அவரே சொல்லிக்கொள்கிறார். ஊரில் இருக்கும் எல்லா பெண்களும் அந்த எழுத்தை கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார்கள். ஒருத்தி பாரீஸில் இருந்து ஓடிவந்து அவர் மீது பைத்தியமாய்  உருகுகிறாள். நடுநடுவே தர்மா... மசாலா படங்களில் வருவது போல... கெட்டவர்களை கடத்தி வந்து வித விதமாக வதை செய்கிறார். ஒவ்வொரு  அத்தியாய  தொடக்கத்திலும் கீதை, ரிக் வேதம், பைபிள், ஜென் கதைகள் இவற்றில் இருந்து எடுத்துக்காட்டுகள்.  நாவலின் முடிவு நெருங்க நெருங்க...இன்னும் உச்சகட்டம்... சம்மந்த சம்மந்தமில்லாமல்... கண்ட கண்ட வார்த்தை பிரயோகங்கள்...  என்ன கன்றாவிடா இது... ஒரு இழவும் புரியவில்லையே என குழம்பினால்.... மன்னிக்க..... இதுதான் இலக்கியமாம். 

அப்படி என்றால்.... நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தரா ராமசாமி அவர்கள் எல்லாம் எழுதுவது இலக்கியத்தில் எந்த வகையில் சேர்த்தி. பிரபு ஒரு படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் சொல்வார்.... படிக்கிறவன் மதிக்கற மாதிரி எழுது... படிச்சுட்டு வந்து மிதிக்கிற மாதிரி எழுதாதே  என்று...   என்னடா இவன் சாருவை பற்றி தப்பாக பேசுகிறானே என்று தீவிர சாரு ரசிகர்கள் என் மீது கோபப்பட வேண்டாம். சுஜாதாவும், கல்கியும், மட்டுமே படித்து வளர்ந்த எனக்கு இந்த எழுத்துக்குகளை புரிந்துகொள்கிற அளவிற்கு பக்குவம் இல்லை... அவ்வளவே...  

ஆனாலும் நாவலில் சிலாகிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது... முக்கியமாக எழுத்து நடை.... இரண்டு இரவுகளில் மொத்த புத்தகத்தையும் ஒரே மூச்சில் படிக்கவைத்த எழுத்து நடை. ரெண்டாவது தர்மாவிற்க்கும் அவன் காதலிக்கும் உண்டான காதலும்... அந்த நெருக்கமும் மனம் கொத்தி பறவையாய் நம்மை எதோ செய்கிறது... 

நிச்சயம் சாருவின் எழுத்துக்குள் வேறு வகை ஜாதி... அதை படிக்கவும் பிடிக்கவில்லை.. படிக்காமல் இருக்கவும் முடியவில்லை... இதுதான் சாருவின் சிறப்போ..... ?


பதிப்பகம் : உயிர்மை. 
விலை : RS.90/- 

Comments

  1. நெத்தியடி விமர்சனம்.

    ReplyDelete
  2. DEAR MOHAN,
    DEAR KARN,

    THANKS FOR YOUR SWEET COMMENTS

    ReplyDelete
  3. ஹா ஹா ... உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு .. சாருவின் நாவலை படிப்பதை விட கட்டுரை தொகுப்பை படித்து பாருங்கள் கொஞ்சம் நல்லா புரியும். முக்கியமா கடவுளும் நானும், சரசம் சல்லாபம் சாமியார் ...

    ReplyDelete
  4. ஹி ஹி.. தீபாவளிக்கு வந்த திரைப்படங்களை விமர்சங்களை விட இது சூப்பர் விமர்சனம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....