நடு நீசி நாய்கள் - விமர்சனம்



இப்படி ஒரு கப்பித்தனமான  படத்தை கௌதமிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கதை என்ற பெயரில் வக்கிரத்தை வாந்தி எடுத்து வைத்திருக்கும் அவரது இந்த படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு கருப்பு புள்ளி. 

அதீத சகிப்புத்தன்மை,  வித்தியாச சினிமா மீதான காதல், போதுமான  தலைவலி மாத்திரைகள்  என, என்ன காரணங்கள்  உங்களிடம் இருந்தாலும் இந்த படம் உங்களுக்கு வேண்டாம். காரணம்.... மனித மனம் விலங்கு என்றாலும்.... மிருகமாகிவிடக்கூடது என்றுதான் நாம் வளர்க்க படுகிறோம்... நம் ஆறாவது அறிவும் அதைதான் பன்படுத்துகிறது... இந்த படம் நம்மை... நம் மனதை  மிருகமாய் மாற்ற செய்யும் ஒரு கூறுகெட்ட முயற்சி.  


ரசனையான தலைப்பு, அட்டகாசமான மார்க்கட்டிங், கெளதம் மேனன் என்னும் லேபிள்,  என பலபேரை தியேட்டருக்கு உள்ளே வரவழைத்தாலும் வந்த வேகத்தில் பின்னங்கால் பிடரி அடிக்க ஓடவைக்கும் திரைக்கதையும், கன்றாவி காட்சிபடுத்தல்களும் போடங்..............தா என கௌதமிற்கு மிக பிடித்த வார்த்தையேயே நம்மையும் சொல்ல வைக்கிறது. 

ஒரு வேளை, இந்த படம் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், நல்ல மனநல மருத்துவரை உடனே பார்க்கவும்.


(+) பிளஸ்

ஒன்றுமே
இல்லை


(-) மைனஸ்

எல்லாமே......


VERDICT : குப்பை
RATING   :  0.0 /10.0

EXTRA பிட்டுகள் : 

பரங்கிமலை ஜோதி.... நான் சென்னை வருவதற்கு முன்பாகவே இந்த தியேட்டரின் புகழ்பெற்ற வரலாறு  எனக்கு தெரியும். குறைந்த  செலவில் பலபேருக்கு பாலியல் கல்வி போதித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த  தியேட்டரில்    இப்படி ஒரு அட்டு படத்தை பார்க்க நேர்ந்தது என் துரதிர்ஷ்டமே... தியேட்டருக்குள் நுழைந்த உடனேயே ஜவ்வாது மனமும், முருகனின் பக்தி பாடல்களும், எதோ வழி தவறி கோயிலுக்குள் நுழைந்த உணர்வு... என்ன ஒரு செண்டிமேன்ட்டோ... .......  


Comments

  1. இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மனோ
    மன்னித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. திரைக்கதை சரியில்லை என்பதை நூறுசதம் ஒத்துக் கொள்ளலாம்... ஆனால் மொத்த படமே??? சாரிங்க....

    உங்களது ப்ளஸில், இசையில்லாதபடம் என்று உணராத ஒலியமைப்பை, இரவை இரவாகவே காண்பித்த ஒளியமைப்பைப் பற்றியெல்லாம் காணவில்லை???

    உங்க விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை.

    ReplyDelete
  3. //போடங்..............தா என கௌதமிற்கு மிக பிடித்த வார்த்தையேயே நம்மையும் சொல்ல வைக்கிறது. //

    Superb!

    ReplyDelete
  4. kowtham oru kalla poonai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....