சிறுத்தை - விமர்சனம்



காரமான ஆந்திர மிளகா பஜ்ஜியே கதற கதற வாயில் திணித்து கண், காது, மூக்கு இன்னும் உடலில் துவாரம் உள்ள மிச்ச சொச்ச  இடங்களிலும் புகை வர வைத்திருக்கிறார்கள். சர்க்கரை  போல சந்தானத்தின் காமெடி இருப்பதால் தப்பித்து கொள்கிறோம். என்னதான் டைம் பாஸ் படம் என்றாலும் நல்ல தமிழ் சினிமாக்களின் ராஜ பாட்டையில்   இந்த மாதிரி படங்கள் ஒரு ஸ்பீட் பிரேக் போலத்தான்.
ஒரு கார்த்தி பிக்பாக்கெட் அடிக்கிறார், தமன்னாவை லவ்வுகிறார்,சந்தானத்துடன் இணைந்து கிக்கிரி பிக்கிரி காமெடி செய்கிறார். ஜாலி வாலாவாக சுற்றும் அவரது இமேஜை காலி செய்யும் விதமாக ஒரு குட்டி பாப்பா இவரை அப்பா என்றழைத்து  அவருடன்  வந்து  ஒட்டிக்கொள்கிறது. கூடவே இலவச இணைப்பாய் தடி தடியான வில்லன்கள் தடிமனான ஆயுதங்களுடன் கார்த்தியே கொலை செய்ய முயற்சிக்க, இன்னொரு கார்த்தி என்ட்ரி. அவர் ஒரு படு பயங்கர போலீஸ் + குழந்தையின் அப்பா.  ஆந்திராவில் தொங்கனா கொடுக்கா வில்லன்களை அடித்து துவம்சம் செய்து நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுப்பவர். தமிழ் சினிமாவில் அடுத்த சீன் என்ன...  போலீஸ் கார்த்தி வில்லன்களால் தாக்கப்பட்டு இறக்க, பிக்பாக்கெட் கார்த்தி போலீஸ் ஆக மாறி  மீதமிருக்கும் வில்லன்களை இறுதியில் அழித்து நாட்டு மக்களுக்கு நிரந்தர நிம்மதியே தருகிறார். கூடவே நமக்கும்... படத்தை முடித்து வைத்து.

கார்த்தி இரு வேடங்களுக்கும் உண்டான வித்தியாசத்தை, தனது உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் வேறுபாடு காட்டி பின்னியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இன்னொரு மாஸ் ஹீரோ ரெடி ஆகி கொண்டிருக்கிறார். குறிப்பாக  போலீஸ் உடையில் நல்ல மிடுக்கு.

அழகான பெண்களுக்கு அறிவு என்பதே இல்லை என்கின்ற சான்றோர் வாக்கிற்கேற்ப தமன்னா  ஒன்னாம் நம்பர் லூசாக படத்தில் வாழ்ந்திருக்கிறார். அவ்வப்போது இடுப்பை காட்டி என்னை கிள்ளு என்கிறார். வெண்ணை போன்ற அந்த குறிப்பிட்ட பிரதேசத்தை பார்க்கும் போது கார்த்திக்கு  மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் கை ஞம ஞம என்கிறது.

சந்தானம் என்கின்ற ஆபத்தாந்தவன் காமெடியில்  கரகாட்டம் ஆடியிருக்கிறார். இவர் இல்லாமல் இந்த படத்தை கற்பனை செய்து பார்ப்பதற்கே பீதியை கிளப்புகிறது. 



இந்த படம் சீரியசான ஒரு காமெடி படம்.வில்லன்கள் உச்ச ஸ்தாயியில் கத்தும் போது மட்டும் காதில் பஞ்சு வைத்து கொள்வது நல்லது. படத்தில் எல்லாமே ஏகத்துக்கும் அதிகமாக இருக்கிறது. சண்டை, கவர்ச்சி, மிகைபடுத்திய ஓவர் பில்ட் அப்புகள் என  இத்தனை மசாலா கலவைகளை சேர்த்தவர்கள் லாஜிக் என்கின்ற உப்பை மட்டும் மறந்திருக்கிறார்கள். அதிலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் ஜீரணம் ஆகாது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் படத்தின் அழகியலாய் விளங்குவது படத்தில் நடித்திருக்கும் அந்த குட்டி பாப்பாதான். அவ்வளவு அழகு + யதார்த்தமான நடிப்பு அந்த குழந்தையுடையது மட்டும்தான்.  

டெக்னிக்கல் விஷயங்களுக்காக யாரும் பெரிதாக மெனக்கெடவில்லை. வித்யாசாகரின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு என எல்லாமே ஒரு சராசரி தெலுங்கு  படத்துக்கு உரியவை.  


கில்லி, தூள், போக்கிரி போன்ற ஆக்க்ஷன் படங்களில் இருக்கும் ஒரு டெம்ப்போ மற்றும் பரபரக்கிற  திரைக்கதை இதில் மிஸ்ஸிங். காமெடி மொத்த ஆச்ஷனையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. 

(+) பிளஸ் 

காமெடி


(-) மைனஸ்

லாஜிக் இல்லாத திரைக்கதை.
 இசை.


VERDICT : சிரிப்பு போலீஸ்.
RATING   : 4.0
   

EXTRA பிட்டுகள்.

சிவகுமார் குடும்ப வாரிசுகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு மதிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். சூர்யா படத்திற்கு பிறகு, கார்த்தி படத்திற்கும் குடும்பத்துடன் வந்து படம் பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி இருக்கிறது. 
 
நேற்று என் அருகில் தனியாக அமர்ந்து படம் பார்த்த நபர், நல்ல டிரெஸ்ஸிங், பார்ப்பதற்கு நல்ல டீசென்டான ஆசாமி போல தென்பட்டார். ஆனால் காமெடி காட்சிகளில் சின்ன குழந்தை கணக்காக சீட்டின் மேல் இரண்டு கால்களையும் வைத்துகொண்டு சிரித்து சிரித்து படம் பார்த்ததில் நிஜமாகவே மிரண்டு விட்டேன். எங்கே ஆர்வ கோளாறில் கடித்து கிடித்து வைத்து விடுவாரோ என.. பாவம் மனுஷனுக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ...  கல்யாணம் ஆன ஆண்களின் சுதந்திரம் வீட்டுக்குள்ளே  கொஞ்சம் சந்தேகத்துக்கு உரியதாகத்தான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....