வணக்கமுங்க.....

வணக்கமுங்க.. இது என்னோட 100 வது பதிவு. நமக்கு புஸ்தகம் படிக்கிறதுன்னா ரொம்ப உசுருங்க. இந்த பொட்டி வந்ததுக்கப்புறம் தமிழ்ல படிக்க நெட்ல தொழாவும் போதுதான் இந்த வலைபதிவுகள் (BLOGS ) கண்ணுல பட்டுச்சு. (ENGLISH ல படிக்க நமக்கு புடிக்காதுங்க.. ஏன்னா.. ENGLISH ல படிக்க நமக்கு தெரியாதுங்க..) நமக்கு புடிச்ச விஷயங்களை நிறைய பேர் எழுதறதை பார்த்ததும் பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சு.. ரொம்ப வருஷமா படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். ஒரு நாள் மல்லாக்க படுத்துட்டு வெட்டியா யோசிச்சுட்டு இருக்கும்போது தோனுச்சு.. ஏன் நாமளும் எழுத கூடாது ன்னு.. அது வரைக்கும் நான் டைரி மட்டும்தான் எழுதியிருக்கிறேன். அந்த தகுதி மட்டும் போதுமான்னு எனக்கு பயங்கர சந்தேகம். சரி ஒரு கை பார்க்கலாமுன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். அது பாருங்க, திடு திப்புன்னு நூறு பதிவு ஆய்டிச்சு, கோயம்பத்தூர்ல இருக்கிற வரைக்கும் பொட்டி தட்ட நிறைய நேரம் கெடச்சதுங்க... இப்ப சென்னை வந்த பிறகு சுத்தமா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க.. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குங்களா...? அது மாதிரியே எதாவது ...