சினிமாவுக்கென்று எந்தவொரு திருப்பங்களும், பரபரக்க வைக்கும் சம்பவங்களும் இன்றி நதி போகின்ற போக்கில் மிதந்து செல்லும் இலை போல நகரும் காட்சிகள்தான் மெரினாவின் பலமும் மிகப்பெரிய பலவீனமும். மெரினா - ஒரு ஆச்சரியம்... ஒரு அனுபவம்.. அத்தோடு மட்டுமல்லாமல் ஒரு தொழிற் சந்தை. மெரினாவை நம்பி, அதன் உப்பு காற்றோடு வாழ்க்கை நடத்தும் சில மனிதர்களின் இயல்பான வாழ்வியல் சம்பவங்களே கதை. மிக வித்தியாசமான அருமையான களம். அதன் பின்னனனியில் அழகாய் ஒரு கதை சொல்லியிருந்தால் இந்த படம் உலக சினிமா வரிசையில் சேர்ந்திருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். அநியாமாய் பாண்டிராஜ் கோட்டை விட்டிருக்கிறார் என்பதைத்தான் வருத்தமாய் சொல்ல வேண்டியிருக்கிறது. வெற்று பனிக்கட்டியாய் நகரும் திரைக்கதைக்கு சிவ கார்த்திகேயன்,ஓவியா இணை கொஞ்சம் சர்க்கரை பாகாய் வண்ணம் சேர்த்து சுவை கொடுத்திருக்கிறது. படத்தில் குறிப்பிடும்படியாய் சொல்ல முடிவது வசனங்கள். ரொம்பவே வசீகரிக்கிறது. மற்றபடி.... பாண்டிராஜ் சார்... உங்களிடம் இருந்து சத்தியமாய் இதை எதிர்பார்க...