தமிழ் சினிமாவில் தற்போது முனுமுனுக்க வைக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள் - ஒரு பார்வை.

இசையால் வசமாகா இதயமுண்டோ....? காலை நேர வாக்கிங்கில் நம்மோடு ஆரம்பித்து, அலுவலகம் செல்லும் வழி எங்கும் கூடவே பயணம் செய்து, இடைவேளைகளில் இளைப்பாற வைத்து... மாலை நேர உற்சாகங்களை இரட்டிப்பாக்கி... இரவு நம்மை தூங்க வைத்து தாலாட்டும் வரை... இசை ஒரு தாய். எத்தனை டென்ஷன் இருந்தாலும், கவலைகள் இருந்தாலும், ராஜாவோ, ரஹ்மானோ, யுவனோ....... நம் செவி வழி நுழைந்தால் போதும்...... மனம் லேசாகும். நம் உடலையும்... மனசையும் RE-FRESH செய்யும் நல்ல மருத்துவர்கள் அவர்கள். இசையால் நம்மை வசப்படுத்த, தமிழ் சினிமாவில் நிறைய புதியவர்கள் வந்திருப்பது, இசை பிரியர்களை சந்தோஷபடுத்தும் நல்ல செய்தி. எழுத நேரம் கிடைக்காத காரணத்தினால், நிறைய நல்ல ஆல்பங்களை பற்றி பகிர்ந்து கொள்ள முடியாமலேயே போய் விட்டது. தற்போது என்னை முனுமுனுக்க வைக்கும் சில பாடல்கள் உங்களுக்காக.... கார்த்திக்கின் குரல் எப்போதுமே ஸ்பெஷல். அதுவும் காதல் பாடல்கள் என்றால்.... ஐஸ் க்ரீமாய் கரையும். "வேங்கை"யில் வரும் "காலங்கார்த்தாலே" பாடல் வெரி இ...