அவன் இவன் - விமர்சனம்

பல வருடங்களுக்கு ஒரு முறை வரும் திருவிழா போல பாலாவின் புதிய படைப்பு அவன் இவன். பக்கத்தில் இருக்கும் காசியில் மதியம் மூன்று மணி முதலே இரவு காட்சிக்கு ஹவுஸ் புல். உதயத்திலும் அதே நிலை. சத்யம், PVR சினிமா எல்லாவற்றிலும் அடுத்த இரண்டு நாளைக்கு டிக்கெட் இல்லை. என்ன செய்ய.... பாலா படம் முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்கின்ற வெறி... சரி கடைசியாய் பாலியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய பரங்கி மலை ஜோதியில் முயற்சிக்கலாம் என்று வண்டியே கிளப்பினால்... வழியெங்கும் வாகன ஊர்வலம். பயங்கர டிராபிக் ஜாமில் என் SPLENDOUR PLUS மிதந்து... ஊர்ந்து.. நகர்ந்து.. கிடைத்த சிறு சிறு இடைவெளிகளில் உயிரை பணயம் வைத்து அங்கே சென்றால்.... அனுமார் வால் போல நீண்ட நெடிய வரிசை. கடைசி நேர காத்திருப்புக்கு பின் கிடைத்தது டிக்கெட். பரமுக்கு போன் அடித்தால், அவன் தன் வருங்கால துணையுடன் தி நகரில் பனியன் எடுத்துக்கொண்டிருக்க.... அவன் இவனுக்கு டிக்கெட் கிடைத்து விட்டது என சொன்னவுடன்...... உலகம் மறந்து.. தன் துணை... மனை .. மறந்து அடுத்த எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து...