சென்னையும்.... தனிமையும்...

 
திங்கள் கிழமை அதிகாலை சென்னையில் வந்து இறங்கியபோது ஏற்பட்ட பிரமிப்பு..... எத்தனை எத்தனை மக்கள்... தினம் தினம் புதிது புதிதாய் வாய்ப்புகளை தேடி  வந்திறங்கும் லட்சகணக்கான பேரை  தாங்கிக்கொண்டு... இனிமேலும் வருபவரை வரவேற்க தயாராய் இருக்கும் சென்னை... வாழ்க்கையின்... வாழ்கையே வாழ்பவரின் ஒரு முக்கிய அடையாளம். அன்றே வேலையில் சேர்ந்தாயிற்று.... அறை பிடித்தாயிற்று.. எல்லாம் முடிந்தபின் ஒய்ந்து படுக்கையில் சாயும் போது.. தூக்கம் வரவில்லை.. அத்தனை நேரம் ஒளிந்து கிடந்த வீட்டு ஞாபகம் ஒரு மோசமான புயல் போல என் மொத்த இரவையும் அள்ளி சுருட்டிக்கொண்டு  போக.. தனிமையில்.. ஒரு வெறுமையில் அந்த நொடியில் துளிர்த்த கண்ணீர் எதை கொண்டும் ஈடு செய்ய இயலாதது. கோவையில்.. அண்ணா, அண்ணி, தம்பிகள், தங்கைகள் என ஏகப்பட்ட சொந்தங்களுக்கு மத்தியில் என் தினங்கள் பாட்டுக்களும் கேலி கூச்சல்களுமாய்.. சந்தோஷ தருணங்களாய் கடக்கும்.. ஆனால் இங்கு.... மேலே சுற்றும் மின் விசிறியே தவிர இப்போதைக்கு என்னுடன் பேச யாரும் இல்லை. அங்கு.. வீட்டில் எல்லோரும் தூங்கியபின் என் தம்பியும்.. தங்கையும்.. நானும் திருட்டு பூனைகள் போல சமையலறை நுழைந்து.. பால் பாக்கெட் உடைத்து.. பூஸ்ட் தயார் செய்து... பகிர்ந்து குடிக்கும் அந்த சுவை அன்றைய இரவு முழுதும் நாக்கில் ஒட்டிக்கிடக்கும்.... அன்பின் அடையாளங்கள் எல்லாம் அங்கு இருக்க.. மனசு மரித்து இங்கு வெறுமையாய் தூக்கம் தேடுகிறேன்..... சொந்தங்களை எல்லாம் விட்டு விட்டு... பொருளாதார தேவைக்காய்... இங்கு சுற்றி திரியும் ஒவ்வொருவரும்  என்னை போன்றே சின்ன சின்ன கவிதை சந்தோசங்களை அடகு வைத்து விட்டு... தூக்கம் தொலைத்த ஒரு இரவில்   மேலே சுற்றி கொண்டிருக்கும் அந்த மின் விசிறியோடு பேசிக்  கொண்டிருக்க கூடும். 

இந்த மாதிரி கடினமான சூழ்நிலைகளில்தான் நல்ல நட்புகள்...   காயம் பட்ட நெஞ்சை மயிலிறகு கொண்டு தடவி.. இலவம் பஞ்சாய் மாற்ற துடிக்கின்றன. அதனால்தான் சென்னை முழுதும்... சென்னை மட்டுமல்ல உலகம் முழுதும்....  மாமா.. மச்சான் என நட்பின் உறவுகள் பலம் கொண்ட மட்டும் பின்னி பிணைந்திருக்கின்றன.. வருகிறேன் நானும்....  சேர்த்துகொள்ளுங்கள் உங்கள் நட்பு வட்டத்தில் என்னையும் ஒரு உறவாய்...

Comments

  1. எல்லாம் கை கூடும் மனோ.. நட்புகள் வளரும்..

    ReplyDelete
  2. வாருங்கள் நண்பரே.. இவ்வனுபவும் வேலை நிமித்தம் செல்லும் எல்லோருக்கும் ஏற்படுவது தான். அதனால் வருத்தம் கொள்ள தேவை இல்லை. மிக சீக்கிரம் சென்னை உங்களை வாரி அணைத்து மனதில் இடம் பிடித்துவிடும்.

    ReplyDelete
  3. மனோ சகோதரா நங்கள் உன்னுடன் இருக்கிறோம் கலங்க வேண்டாம். எந்த உதவிக்கும அழைக்கவும்.8122278803

    ReplyDelete
  4. தனிமையில் நிறைய வாசிக்கலாம்; கொஞ்சம் எழுதலாம்; சென்னை நகரம் ஒரு திறந்தவெளிக்கல்லூரி மாதிரி! பார்க்கிற மனிதர்கள், சம்பவங்களை பதிவு செய்து கொண்டால், அந்த வித்தியாசமான வண்ணங்களைக் குறித்து ஆழ்ந்து நோக்க நம்மை உற்சாகப்படுத்தும். வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  5. நினைத்தால் சட்டென்று சேரனோ, கேபிஎன்னோ ஏறி கோவை போய் உங்கள் சொந்தங்களுடன் கலக்க முடியும் தூரத்தில் இருப்பதை எண்ணி சந்தோசப்படுங்கள்.

    ReplyDelete
  6. சங்கமம் நிகழ்ச்சியில சென்னையைப் பற்றி ஒரு பாட்டு வரும்.அதில் “சென்னை அழகிய சென்னை!இது நெஞ்சம் சுரந்திடும் அன்னை”னு ஒரு வரி வரும். சத்தியமாய் உண்மை.நம்பிவரும் எவரையும் சென்னை கைவிட்டதாய் சரித்திரம் இல்லை.

    தனியா இருக்கோம்னு கவலைபடாதீங்க. இங்க எங்களுக்கும் ஒரு கை குறையுது, சேர்ந்து ஆடுவோம் :))

    ReplyDelete
  7. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா‍- இது எல்லா ஊருக்கும் பொருந்தும்.கொஞ்ச நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.சென்னையைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க ஆரம்பித்து விடுங்கள்

    ReplyDelete
  8. @ RAVI KANTH SIR,
    @ MANI SIR,
    @ VISA SIR,
    @ SETTAIKKARAN SIR,
    @ MUGILAN SIR,
    @ MM.ABDULLA SIR,
    @ MOHAN SIR,

    நண்பர்களே.. உங்கள் கருத்துக்கள் எனக்கு மிக்க உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது.. சென்னை நண்பர்கள் உங்கள் அனைவரையும் கூடிய விரைவில் சந்திக்கிறேன். உங்கள் கைபேசி என்னை கொடுத்தால்.. இன்னமும் மகிழ்வேன்..


    மனோ

    ReplyDelete
  9. சேட்டைக்காரர், முகிலன் சொன்னதுதாங்க.. மனுஷங்கள கவனிக்கப் பழகுங்க, நிறைய படிங்க, ஒரு நட்பு வட்டம் உருவாகும், கொஞ்ச நாள் அப்புறம் சென்னையெல்லாம் ஜுஜுபி! :)

    தனியா என்னிக்குமே ஃபீல் பண்ணாதீங்க அது மனச துரு பிடிக்க வெச்சிடும். எங்கேயாவது போய் மக்கள் ஜோதில ஐக்கியமாயிடுங்க. சிம்பிள் :)

    All the best Mano.

    ReplyDelete
  10. de... mano... nee illama enga rendu perkum ennamo mathiri irukkuda... seekram vaa... unna paakanum...

    with love... Neemu n bori

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....