வ- குவார்ட்டர் கட்டிங் - இசை விமர்சனம்
வித்தியாசமான மேக்கிங்கும், படம் நெடுக வரும் காமெடியும் ஓரம்போவை மற்ற திரை படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது. அதன் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் அடுத்த முயற்சிதான் வ - குவார்ட்டர் கட்டிங். ட்ரைலர் மற்றும் பாடல்கள் இதுவும் வேறு மாதிரியான படம் என்பதை உணர்த்துகிறது.
உன்னை கண் தேடுதே - பிரகாஷ் குமாரும், கான உலகநாதனும் இணைந்து பாடியிருக்கும் டீசென்டான ரீமிக்ஸ் பாடல். வரிகளில் 5000 பீரின் நுரையே போல, சரக்கின் அருமை பெருமைகள் பொங்குவது இன்னமும் பிளஸ்.
தேடியே தேடியே - ஆண்ட்ரியாவின், ஒயினில் நனைத்த குரல் கொஞ்சம் சைடு டிஷ் போல ரொமான்ஸ் கலந்து ஏகத்துக்கும் கிக் ஏற்றுகிறது. ஆர்க்கெஸ்ட்ரேஷன் எளிமையாக இருந்தாலும் மெட்டின் வசீகரம் ரசிக்க வைக்கிறது.
சவூதி பாஷா - பாடலில் கவிஞர் அவதாரம் எடுத்திற்கும் சிவாவின் வரிகளில் இருக்கும் உற்சாகமும், அரேபிய ஸ்டைல் இசையும் ஒரு குவார்ட்ர் அடித்ததற்கு ஒப்பான மன நிலையே தந்து களிப்பூட்டுகிறது.
ஷார்ப்பு ஷார்ப்பு - ஆல்பத்தின் தீர்த்த திருவிழா. நண்பர்களுடன் ஆட்டம் போட்டு விளையாட வைக்கும் மெட்டும், வரிகளும் எத்தனை குடித்தாலும் பிடிக்கும் கிங் பிஷர் சுவை.
குவார்ட்டர் கிளப் சாங் - பட்டையில் தொடங்கி ஸ்காட்ச் வரைக்கும் கலந்து கட்டிய மிக்ஸிங் காக்டெயில். கொஞ்சம் அசந்தாலும் மட்டையாக்கிவிடும் அடி.
டயலாக்குகளில் கோயம்புத்தூர் மனம் மணக்க.. இப்போதே படம் பார்க்கும் ஆசை, ஏக்கம் தொடங்கிவிட்டது ஒரு போதையே போல...
SONGS CAN LISTEN :
ஷார்ப்பு ஷார்ப்பு
சவூதி பாஷா
VERDICT : 2.9 / 5.0
Napoleannnum Vijay Mallayavum சிரிக்கிறாங்க இன்னைக்கு ராத்திரி.....
ReplyDeleteபடத்தின் கதைக்கு ஏத்த மாதிரியே, பிரகாஷ்குமார் எல்லா பாடல்களையும் போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். படம் வெளி வந்தவுடன்,பாடல்கள் இன்னும் ஹிட்டாகும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteகுவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு :)
ReplyDelete