மிக எதிர்பார்ப்புக்குரிய 12 திரைப்படங்கள்

சில படங்கள் பூஜை போட்ட உடனேயே .. இந்த படத்தை எப்போது பார்க்க போகிறோம் என்கின்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். படத்தின் இயக்குனர் மீதோ, அதன் டெக்னிக்கல்  டீம் மீதோ அப்படி ஒரு எதிர்பார்ப்பு குவிந்திருக்கும். அப்படி முதல் நாள் பார்த்தே தீர வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டும் 12 திரைப்படங்கள்.


12. வம்சம் 

இயக்குனர் பாண்டி ராஜ், வெள்ளந்தியான முகம், கிராமத்தான் போல தோற்றம். ஆனாலும்  முதல் படத்திற்கே  (பசங்க) உலக அளவில் பிரபலம் ஆன தங்க யானை விருது பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த அற்புதமான படைப்பாளி. பசங்க படத்தில் இவர் காட்டிய குழந்தைகளின் உலகம் அவ்வளவு யதார்த்தமானதும் அழகானதும் கூட.. இவரது இரண்டாவது படமான வம்சம் ட்ரைலரில் வரும்  காட்சிகள்  மற்றும்  தமிழ் மன்னர்கள்  பெயர்கள்.. படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும்  தூண்டுகிறது. இந்த படம் இன்று (13.08.10) வெளியாகிறது. 



11 . மங்காத்தா

பர்சனலாய் அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது வெளிப்படையான  பேச்சுக்காகவும், உதவி செய்யும் குணத்துக்காகவும். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளை கண்டாலே பற்றிக்கொண்டு வருகிறது. ஏகன்,அசல் படத்தில் எல்லாம் தலை எப்படி தலையே நுழைத்தாரோ என்று அடிக்கடி தோன்றும். ஒரு சரியான இயக்குனர் கிடைக்காமல் திண்டாடி கொண்டு இருந்தவருக்கு வெங்கட் பிரபு வாய்த்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஹியுமர் சென்ஸ் எல்லோரையும் வசீகரிக்கும் விஷயம். பார்க்கலாம் மங்காத்தா எப்படி என்று. கோவா போல, கதை இல்லாமல்  வெங்கட் பிரபு கும்பலாய் கும்மியடித்தால் கோவிந்தாதான்.



10 . நகரம் 

ஒரு விநியோகஸ்தராக சினிமா வாழ்கையே ஆரம்பித்து, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டும் சசி குமாரை முதன்  முதலில் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது அவர் இயக்கிய  'சுப்ரமணியபுரம்'. படத்தில் வரும் அந்த நீளமான கிளைமாக்ஸ் ஷாட்டும், "கண்கள் இரண்டால்" பாடல் படமாக்கிய விதமும் இன்னமும் பேசப்படும் விஷயம். 1980 களின் மதுரையையும்,  காதலின் கவிதை சந்தோஷங்களையும், நட்பின் துரோகங்களையும் காட்டியவரின் அடுத்த படைப்பு "நகரம்". இந்த படத்தின் ஹீரோ 65 வயது முதியவர் என்பதே இந்த படத்தின் மீது மொத்த கவனமும் கொள்ள வைக்கிறது. 


9 .பயணம்

எந்த வித ஆர்ப்பாட்டங்களும், ஆடம்பரங்களும் இன்றி மனதை வருடும் மயிலிறகு படைப்புகளை தருவதுதான் இயக்குனர் ராதாமோகனின் ஸ்பெஷல். அழகிய தீயே, மொழி, அபியும் நானும் என இவரின் படங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வின் மனிதர்களையும், அவர்களின் சுக துக்கங்களையும்  நகைச்சுவையின் ஊடே நம் கண்களுக்குள் புகுத்தி மனசில் ஒட்ட வைக்கும் ரகங்கள். இவரது எல்லா படங்களும் அன்பை போதிப்பவை.  பயணம் திரைப்படம் இவரின் முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும்   ஆக் ஷன் முயற்சி. காத்திருப்போம்.. 



8 .மாலை நேரத்து மயக்கம் 

ஆயிரத்தில் ஒருவனில் ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து சறுக்கினாலும், இவரின் 7G யும், புது பேட்டையும் ஏற்படுத்திய தாக்கங்கள் பலமான ஒன்று. மனித மனசின் காதலை, கசடுகளை,  அப்படியே காட்சிபடுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் ஒரு சிறந்த இயக்குனர். செல்வா இப்போது ஒரு அடிபட்ட புலி. இவரின் அடுத்த பாய்ச்சல் சற்று வேகமாகவும் , உறுதியாகவும் இருக்கும் என நம்பி காத்திருக்கும் அவரது ரசிக கண்மணிகளில் நானும் ஒருவன். 


7. நடு நீசி நாய்கள்

DVD பார்த்து காப்பியடிக்கிறாரோ இல்லை சொந்த சரக்கோ.. ஸ்டைலிஷான மேக்கிங்குக்கு கெளதம் மேனன் அட்டகாசமான சாய்ஸ். இவரின் 'காக்க காக்க ' அதிரடியான அதே சமயம் நம்பும் படியான ரியலிசம் கொண்ட அக்ஷன் அட்வென்சர். இவர் பாடல்களை படமாக்கும் விதமும், தன் கதாபாத்திரங்களுக்கு சுத்தமான தமிழ் பெயர் சூட்டுவதும் அலாதியான விஷயம். இவரின் புதிய படமான  'நடு நீசி நாய்கள்' பாடல்கள் இல்லாத திரில்லர் என்பதே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றி விட்டுள்ளது. 


6.யுத்தம் செய்  

மிஷ்கின் என்னும் இயக்குனரை பார்த்து நான் மிரண்டது 'அஞ்சாதே' படம் பார்த்து. இவ்வளவு யதார்த்தமாக ஒரு திருடன் போலீஸ் கதையே எடுக்க முடியுமா.. ? ஆரம்ப காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் இயக்குனர் நின்று விளையாடியிருப்பார். நரேன், பிரசன்னா இருவருக்கும் வேறு வேறு தளங்களை கொடுத்த படம். படம் முழுதும் CAT & MOUSE GAME எனினும் சொன்ன விதம் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க செய்தது . யுத்தம் செய்.. அஞ்சாதே வின் இரண்டாவது பாகம் என்பது படத்தின் மீது கூடுதல் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

5.ஆதி பகவன் 

பருத்தி வீரன் பாதிப்பு இன்னமும் அதை பார்த்த நமக்கும் இருக்கிறது. அதில் நடித்த கார்த்திக்குக்கும் இருக்கிறது (அவரின் மற்ற படங்களில்) அந்த அளவு மதுரை மண்ணில்  படம் பார்த்த நம்மையும் புரட்டிபோட்டு  எடுத்த யதார்த்த காவியத்திற்கு சொந்தக்காரர். இடையே மேக் அப் போட்டு  நடிக்க போய் விட்டாலும், தமிழ் ரசிகன் ஹீரோ அமீரை விட இயக்குனர் அமீரையே மிகவும் விரும்புகிறான் என்பதே நிஜம். இவரின் அடுத்த படைப்பான 'ஆதி பகவன்' ஓட்டு மொத்த தமிழ் சினிமா  இண்டஸ்ட்ரியும் எதிர்பார்க்கும் படைப்பு. 




4 . அவன் இவன் 

இந்த ஆள் நார்மலான ஒரு இயக்குனரா, இல்லை கஞ்சா குடுக்கியா, இல்லை சைக்கோவா என ஆளாளுக்கு ஒரு கருத்து சொன்னாலும்  தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்பதை ஒட்டுமொத்த  ஊரும் மறு பேச்சின்றி ஒப்புக்கொள்ளும். இத்தனைக்கும் இவர் இதுவரை இயக்கியது மொத்தமே நான்கே நான்கு படங்கள். அதற்குள் இவ்வளவு உயரம் என்பது பாலாவுக்கு மட்டுமே சாத்தியம். தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படம் 'அவன் இவன்' வேகமாக தயராகிறது என்பது தமிழ் ரசிகனுக்கு சந்தோஷத்தையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர தரும் செய்தி.



3. 7 ம் அறிவு 

ரமணா பட வெற்றி விழாவில், மேடையேறி பரிசு வாங்கிய அந்த இளைஞனை கண்டு எல்லோர்க்கும் ஆச்சரியம். இவ்வளவு சிறு வயது பிள்ளையா இப்படிப்பட்ட படத்தை இயக்கியது என்று. அதுவரை காணாமல் போயிருந்த விஜயகாந்தையும்,  புத்திசாலிதனமான  திரைக்கதையையும், தீ பிடிக்கிற வேகத்தில் செல்லுலாய்டில் செதுக்கிய A .R . முருகதாஸ் இப்போது தமிழில் மட்டுமல்ல பாலிவூட்டிலும்  MOST WANTED இயக்குனர். கஜினியின் மாபெரும் வெற்றிக்கு இவரது மிக பிரெஷான திரைக்கதையும், மேக்கிங்கும் முக்கிய காரணம். அதே டீம் தற்போது தமிழில் 7 ம் அறிவு என தொடங்கிய நாள் முதல் பயங்கர எதிர்பார்ப்பு. ரமணா, கஜினி மேஜிக் இதிலும் இருக்கும் என தாரளமாய் நம்பலாம். 


2 . மன்மதன் அம்பு 

உலக நாயகனின்  அடுத்த அம்பு. கமல் எப்படி நடித்தாலும் ரசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இந்தியாவின் ஒப்பற்ற கலைஞன்.  நடிப்போடு மட்டும் அல்லாது அவரின் புத்திசாலிதனமான வசனங்களுக்காகவும்,  ரொமாண்டிக் காட்சிகளுக்காகவும் கொஞ்சம் ஜொள் விட்டபடி   எதிர்பார்த்திருக்கும் படம் மன்மதன் அம்பு. 


1 . எந்திரன் 
எனக்கு ரஜினி பிடிக்கும், ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. முதல் நாள் தியேட்டரில் அத்தனை ரசிகர்களும் ஒரு சேர ஆர்ப்பரித்து, விசிலடித்து ரஜினி வரும் முதல் காட்சியே ரசிப்பதே ஒரு அற்புதமான அனுபவம். முதுகு தண்டை சிலிர்க்க செய்யும் ஒரு  ஆனந்த அனுபவம் அது . எங்கு இருந்து கிடைக்கிறது அத்தனை உற்சாகம், மகிழ்ச்சி.. நிஜத்தில் அது ஒரு திருவிழா..   அந்த எனர்ஜிக்காகவே ரஜினி சாரை கொண்டாடலாம். 

இம்முறை இந்த திருவிழாவில் ரஜினியோடு இந்திய சினிமாவின்  டாப் மோஸ்ட் மனிதர்கள் AR .ரஹ்மான், ஷங்கர், ஐஸ்வர்யா ராய் இணைந்திருப்பதால் கொண்டாட்டத்திற்கு நிச்சயம் குறைவிருக்காது. 

இவை எல்லாவற்றியும் மீறி, இந்த படத்தை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருப்பது எங்கள் வாத்தியார் சுஜாதா சாருக்காக.. அவரின் கடைசி பங்களிப்பு இந்த படம். அவரின் உற்சாக வசனங்களையும்,  திரைக்கதையில் அவரின்  பங்களிப்பையும் காண காத்து கொண்டிருக்கும் அவரின் கோடி கணக்கான சிஷ்ய பிள்ளைகளில் நானும்  அடக்கம். 

-------------------------------------------------------------------------------------------------------

கொசுரு  :   ஆரண்ய காண்டம், அரவான்,  கோ, பலே பாண்டியா, அழகர் சாமியின் குதிரை என  பார்க்க வேண்டிய படங்கள் எக்ஸ்ட்ரா லிஸ்டில் இருக்கிறது. அது அடுத்த பதிவில். 

கொசுறு :  இம்ம்புட்டு எழுதி இருக்கேன். ஒரு வரியிலாவது கமெண்ட் போட்டுட்டு போங்கப்பு..

Comments

  1. நண்பா எல்லாமே நல்லா தான் இருக்கு இப்போ.. வந்தவுடனே பார்போம்..

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு

    ReplyDelete
  3. மிக நல்ல நினைவூட்டல். படங்கள் எப்போது வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனா, இலைய தளபதியோட படங்கள், கலைஞரோட கதைவசன படங்கள், பேரரசுவோட படங்கள், ரொம்ப முக்கியமான பசுநேசனோட மேதை படம் ஆகியவற்றை திட்டமிட்டு புறக்கணித்த உங்களை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்தலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
  4. ஒரு வரியிலாவது

    ReplyDelete
  5. Good but i think sasikumar's next film isn't "nagaram".its "puthumai virumbi",pls check it.

    ReplyDelete
  6. இம்ம்புட்டு எழுதி இருக்கேன். ஒரு வரியிலாவது கமெண்ட் போட்டுட்டு போங்கப்பு..

    -------------------

    ஆசதான் .. ஆனா சினிமா பார்க்க அதிகமா புடிக்காதே..:(


    நல்ல எழுத்து..

    ReplyDelete
  7. தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள், மிஸ்கினின் நந்தலாலா ஆகியவற்றை விட்டு விட்டீர்கள்.

    ReplyDelete
  8. மனோ கலக்கற.... நல்ல தொகுப்பு...

    ReplyDelete
  9. நல்லத் தொகுப்பு
    பல படங்கள் நானும் எதிர்பார்ப்பவை

    ReplyDelete
  10. அருமையாக‌ தொகுத்திருக்கீங்க மனோ. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'ஆடுகளம்' படமும் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்

    ReplyDelete
  11. நல்ல தொகுப்பு மனோ.

    படம் அனைத்தும் அனைவரும் எதிர்பார்க்கும் படம் என்றாலும்
    உங்களின் எழுத்து நடை படங்களின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பினை ஏகத்திற்கும் அதிகரிக்க வைத்துள்ளது..
    அன்புடன்
    பொன்.சிவா

    ReplyDelete
  12. "நடுநிசி நாய்கள்"- லயன் காமிக்ஸ் தலைப்பு போல் உள்ளது. :-)

    ReplyDelete
  13. அத்தனையும் எதிர்பார்புக்குறிய படங்கள்

    செமயா தொகுத்து தந்தமைக்கு நன்றி நண்பா :)

    அடுத்தது போடுங்க

    ReplyDelete
  14. super! but i am expectations in only one in thala film mangattha

    ReplyDelete
  15. thayavu seithu vijay padam podathinga.
    this is my personal request

    ReplyDelete
  16. Unmaiyile neengal nermaiyanavaraka irunthal Thalapathy Vijayin Kavalkaathal, Velayutham Patti Eluthamal Irunthirukka Maateer. Ajitha vai pidikum entu Sollumpothe ninaithen Ungalai Patti Good Bye

    ReplyDelete
  17. Karthikeyan Moodikitu un velaiyai Mattum paaru Thalaivar vijay ai patti pesa unaku thakuthi kidaiyathu ..

    ReplyDelete
  18. Ajithavan Mangathaaa manga kaaliyaatha unakku neeye vaikka pora aaapu aatha karthikeyan wait and see ok

    ReplyDelete
  19. VIJAY’S NEXT FIVE.
    Vijay’s fans are upbeat that their favorite star has five films lined up! Siddique’s Kaaval Kaadhal, which is the remake of the Malayalam hit film Bodyguard, Jayam Raja’s Velayudham, Shankar’s remake of 3 Idiots, Seeman’s Pagalavan, and an untitled venture for Lingusamy, are the five films that Vijay would be concentrating for the next few months.

    ReplyDelete
  20. Vijay’s Kaval Kadhal resumes shooting
    Wednesday, 11 August 2010 |

    Actor Vijay had recently started shooting for Raja’s ‘Velayudham’ and much before that finished filming major portions of his other film ‘Kaval Kadhal’. Now the shooting for ‘Kaval Kadhal’ has been resumed at a big bungalow in Chennai…

    Actress Asin had flown down to Sri Lanka shooting for the Hindi remake of ‘Ready’ with Salman Khan playing the lead role. Since, the film’s schedule was completed, the actress had flown back to Chennai resuming this project.

    According to the sources, the film’s title ‘Kaval Kadhal’ maybe changed as Vijay and director Siddique aren’t impressed with the name.

    As known earlier, the film is a remake of yesteryear Malayalam blockbuster Bodyguard.

    The film is getting ready to release for Diwali along with Kamal Haasan’s ‘Manmadhan Ambu’

    ReplyDelete
  21. விஸ்வரூபமெடுக்கும் கமல்-விஜய் மோதல்!
    August 13, 2010 | no comments
    உலக நாயகன் கமலஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் இருவரும் விரைவில் மோதவுள்ளனர். ஏற்கனவே ஒருமுறை இவர்கள் இருவருக்கும் மோதல் வந்துள்ளன. அது சச்சின் – மும்பை எக்ஸ்பிரஸ் மூலமாக…

    இப்போது இவர்கள் இருவரும் மோதவிருப்பது வரும் தீபாவளித் திருநாளில். ஆம், உலக நாயகனின் மன்மதன் அம்பு – இளைய தளபதியின் காவல் காதல் ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இதனை மன்மதன் அம்பு படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உறுதிசெய்துள்ளது. அதே போல் விஜயும் காவல் காதல் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் உறுதியாகவுள்ளார். இந்த படத்தின் படப்பிபிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

    இந்த தீபாவளிக்கு கமல் மற்றும் விஜய் படங்கள் ரிலீசாவதால் இருவரது ரசிகர்களும் இரட்டிப்பு சந்தோசத்தில் உள்ளனர்

    ReplyDelete
  22. neengal nadunilyana pathivalaraga irunthal vijay padam pattri eluthi irupeergal .. asith padathuku vijay padam evalavo mel...

    karthikeyan mothala un udambil ulla ( thala pattri ) alukkai sutham sei...

    ReplyDelete
  23. விஜய்யின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம் :

    தனது ரசிகர்களுக்கு பிடித்தமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே
    நடிப்பது என முடிவு செய்திருக்கும் விஜய், பெரிய இயக்குனர்களின் படங்களாக
    இருக்கும்படியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த தோல்விக்கு
    பிறகு புதிய இன்னிங்சை தொடங்கியிருக்கும் விஜய் தற்போது 5 புதிய படங்களில்
    நடித்து வருகிறார். சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில்
    வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ்
    மற்றும் லிங்குசாமி படம் என பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும்
    விஜய் இந்த இன்னிங்சில் விட்ட இடத்தை எட்டிப் பிடிப்பா

    ReplyDelete
  24. Hi Mano Sir 12 movies ok but ean Neengal Vijayn KaavalKathal Mattum Podavillai???????

    ReplyDelete
  25. Thnx JanakiRaman, Vijay, Srirangam Siva..

    Our Thalapathy Rockzz Forever .

    ReplyDelete
  26. Where's Vijay's Kaavalan & Velayutham & 3 idiot's

    ReplyDelete
  27. ஆஹா, சிக்க வைச்சுட்டாங்களே... நண்பர்களே.. எனக்கும் விஜய்க்கும் எந்த மோதலும் இல்லை.அதே சமயம் அஜித் மேல் காதலும் இல்லை. இதில் குறிப்பிட்ட அனைத்துமே இயக்குனர்களின் படங்களே தவிர்த்து நடிகர்களின் படங்கள் அல்ல. கமல், ரஜினி இதில் விதி விலக்கு.

    நான் விஜய் படத்தில் எதிர்பார்த்திருப்பது 3 IDIOTS மட்டுமே. இதுவரை அந்த படம் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவுமே இல்லாததால் அதை பற்றி எழுதவில்லை.

    நான் முதலில் இயக்குனர்களின் ரசிகன். அதற்க்கு பிறகு தான் நடிகர்கள். மேற்படி என் பதிவிலும் எந்த இடத்திலும் நடிகர்களை, அவர்களின் நடிப்பை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

    இதுக்காக அடிச்சுக்காதிங்கப்பா...

    மனோ

    ReplyDelete
  28. புதிய அவதாரத்துடன் இளைய தளபதி!
    2010-08-12 13:42
    இளைய தளபதி விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் சரிவர போகாததால் சில பிரச்சினைகளை சந்தித்தார். இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த முறை அவர் நல்ல கதையம்சமுள்ள படங்களையும் பெரிய இயக்குனர்களையும் தேர்வு செய்துள்ளது அவரது ரசிகர்களையும் திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தற்போது அவர் தேர்வு செய்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் ஹிட் டைரக்டர்கள் லிஸ்ட்டில் இருப்பவர்களே.

    இயக்குனர் சித்திக். இவர் மளையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஹிட் டைரக்டர். மளையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் இவர் ஹிட் இயக்குனரே. ஏற்கனவே விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் உருவான ப்ரண்ட்ஸ் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். இப்போது அவர் மளையாளத்தில் இயக்கிய பாடிகாட் என்ற படத்தை காவல் காதல் என்ற பெயரில் தமிழில் இயக்குகிறார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.

    அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம் என பெரிய இயக்குனர்களை கொண்டு புதிய அவதாரத்துடன் தனது அடுத்த இன்னிங்சை சிறப்பாகத் தொடங்கியுள்ளார் இளைய தளபதி.

    தளபதியின் வெற்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. Jharrisjayaraj

    The music of “3 idiots” will be done simultaneously in 2 languages.The Tamil version will be with Vijay and the Telugu with Mahesh Babu.

    HARRIS JAYARAJ TWEETED THIS IN TWITTER TODAY

    IF ANYBODY HAS THE DOUBT THAT VIJAY IS NOT IN 3 IDIOTS.CLEAR YOUR DOUBTS TODAY.

    SO OUR THALAPATHY IS CONFIRMED.

    INIME YAARUKKUM DOUBT VENDAM

    ReplyDelete
  30. Hi Mano Sir VenkatPrabhu , Sidiq & Raja vai Vida Periya Director ah?

    ReplyDelete
  31. hello mano anna , neenga asith movie maariyatha padatha intha listla sethathu , venkat prabhuvukaga nu solringale..

    venkat prabhu chennai 28 thavira saroja, goa mokka movies ...

    so avan padathuku siddhiq movie onnum mosam illaye...

    maariyatha movie migavum yaaralum ethirpaarkapadum padam alla (ungalai thavira )..

    anyway ungal writing style super except maariyatha

    ReplyDelete
  32. லிஸ்ட்ல இருக்கற எல்லா படங்களுமே ஹிட்டாக ரொம்ப வாய்ப்பிருக்கு.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. சூப்பர்..

    ReplyDelete
  33. Nice Collections!..

    Expecting for ur Next Collections

    ReplyDelete
  34. மனோ நலமா?

    உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.. நேரம் இருப்பின் எழுதுங்கள்..

    ReplyDelete
  35. உங்க பதிவை பாத்துதான் பல படங்களை பற்றித் தெரிந்துகொண்டேன். நன்றி

    ReplyDelete
  36. 7 ham arivu script is strong but screenplay waste documentary format nt work out in Tamil cinema Mr kamal sir already tried up virumandi . so screenplay very important,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....