தற்போது தமிழ் சினிமா மறந்துபோன ஐந்து பாரம்பரிய விஷயங்கள்
1 . கிளைமாக்ஸ். வில்லனுக்கும், ஹீரோவுக்கும் நடக்கும் கடுமையான மோதலில், ஹீரோ படு பயங்கரமாக தாக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்க.. உடனே ஹீரோவின் நினைவுகளில், வில்லனால் கொலை செய்யப்பட்ட அம்மாவின் முகமோ , தங்கையின் முகமோ பிளாஷ் அடித்து, வேகமாக நூறு வயலின்கள் வாசிக்க, அதன் பின் ஹீரோ வெகுண்டெழுந்து வில்லனை துவம்சம் செய்வது.
2 . ஹீரோயின் வில்லனின் கற்பழிப்பு பிடியில் வசமாக சிக்கிக்கொண்டு, புடவை உருவப்பட்டு, ஐந்து நிமிடம் துரத்தி விளையாடி , படுக்கையில் வீழ்த்தி, இறுதியில் வில்லன் ஹீரோயின் கழுத்தில் முகம் புதைக்கும் போது ஹீரோ சரியாக அங்கு என்ட்ரி ஆவது.. (இப்போதெல்லாம் ஹீரோ என்ட்ரி ஆவதில்லை. கற்பழிப்பு காட்சிகளை மிக டீடெய்லாக காட்டி விடுகிறார்கள்).
3 . ஹீரோ ஏழை என்றோ ...அல்லது கீழ் சாதி என்றோ ஹீரோயினின் அப்பா, காதலை எதிர்ப்பது. (இப்போது இந்த விஷயத்தில் பெற்றோர்களை எவனும் மதிப்பதே இல்லை).4 . ஹீரோ தனது புஜ பல பராக்கிரமத்தை காட்டி எல்லோரையும் அடித்து துவைத்த பின் சரியாக போலீஸ் வருவது.
5 . இறுதியில் உயிர் தியாகம் செய்வதர்க்காகவே ஹீரோவின் உயிர் நண்பனாக ஒருவர் வருவது. ( இந்த கேரக்டருக்கு அன்றும், இன்றும் என்றும் வாகை சந்திர சேகர் காப்புரிமை பெற்றிருக்கிறார்).
இதே போல தமிழ் சினிமா மறந்திருக்கும் பல விஷயங்களை யாரேனும் ஞாபக படுத்தலாம். சுவாரசியமாக இருக்கும்.
ஹீரோ மூணு அடி வாங்குவாரு.. அவர் உதட்டுலே சிகப்பு கலர்ல ஒரு தண்ணி வரும் (ரத்தமாம் ) .. அப்புறம் வில்லனையும் , அவன் கூட்டாளிகளையும் சும்மா புரட்டி எடுப்பாப்ல.. நம்ம ஹீரோ..
ReplyDeleteமனோ நம்ம இந்த மாதிரி விசயங்கள் வெச்சு படம் எடுப்போமா?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. சினிமா தனமான பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஹீரோவும், ஹீரோயினும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் போது பூவைக் காட்டுவது!
ReplyDeleteமனோ என்னாச்சு டெல்லி ராஜகுமாரிகள்.
ReplyDeleteகதை என்ற ஒரு விசயத்தையும் தமிழ் சினிமா இயக்குனர்கள் மறந்து நாள் ஆகி விட்டது
ReplyDeletewhile doet take place, all will go to foreign
ReplyDelete