பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)
படிக்கின்ற வயதில், பிட்டு படம் பார்ப்பதற்கு நெஞ்சில் அசாத்திய தைரியமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லையென்றால் கூட பிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது.
தியேட்டரில் நல்ல பிட்டு ஓடுகிறது என்கின்ற செவி வழி செய்தி வந்தவுடனேயே ஆர்வக்கோளாறில் உடனே கிளம்பிவிடக்கூடாது. ஏனென்றால் அதே செய்தி நம் சொந்த பந்தங்களுக்கும் புயல் வேகத்தில் ரீச் ஆகியிருக்கும். தியேட்டர் வாசலிலோ, டிக்கெட் கவுன்டரிலோ, நம் சித்தப்பாவையோ, அப்பாவின் நண்பரையோ பார்த்து அதிர்ந்து அசடு வழிவது, ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு அசடு வழிவதை விட அசிங்கமானது அந்த காலங்களில்.
எவ்வளவோ திட்டமிட்டும், முகம் மறைத்தும், தைரியம் கொண்டு சம்பவ இடத்தை நெருங்கினாலும், பயம் ஒரு நாய் குட்டியே போல நம் கால்களுக்குள்லேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்க்கு ஏற்றார் போல், தியேட்டர் வாசலை நெருங்கியதுமே, பக்கத்துக்கு வீட்டு ரங்குடு மாமா, தோள் தொட்டு திருப்பி, "எங்கடா இந்த பக்கம்?" என்பார். "ப்ரென்ட் வீட்டுக்கு போறேன் மாமா " என சமாளித்தாலும், படவா... இந்த வயசிலேயே மலையாள படமா.... சரி சரி... நீயும் என்னை பார்த்தேன்னு மாமி கிட்டே உளறிடாதே " என கேட்டுக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்ததுன்டு.
இத்தனைஅரும்பாடுபட்டு, உள்ளே நுழைந்தாலும், அன்றைய தின
அதிர்ஷ்டமே பிட்டு தரிசிக்கும் பாக்கியத்தை கொடுக்கும். அதிர்ஷ்டம்
இல்லையேல்.... வெறும் மலையாள பாஷையே மட்டும் கற்றுக்கொண்டு வெளியே வர வேண்டியதுதான்.
என் முதல் பிட்டு பட அனுபவம், வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக என் பன்னிரண்டாவது வயதிலேயே கிடைத்தது. என் பெரியப்பா பையன், கிராமத்தில்
இருந்தவன், ஒருநாள் எங்கள் வீட்டிற்க்கு வந்து சினிமாவிற்கு போகிறேன், சைக்கிள் வேண்டும் என என் அப்பாவிடம் கேட்க... அடுத்த நொடி நான் சைக்கிள் கேரியரில் அமர்ந்துகொண்டிருந்தேன். முதலில் என்னை பார்த்து அதிர்ந்தவன்.."கீழே இறங்கு" என மிரட்ட..சைக்கிள் வேண்டுமென்றால் அவனையும் அழைத்துக்கொண்டு போ என என் அப்பா
எனக்காக வாதாட... உள்ளுக்குள் திட்டிக்கொண்டே என்னை அழைத்து சென்றான். முதலில் நாங்கள் சென்றது.. ரஜினியின் பணக்காரன் படத்திற்கு..
கூடி நின்ற கூட்டம், அடுத்த இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்றது.. சரி என கமல், விஜயகாந்த், ராமராஜன் என்று எங்கள் தேவையின் தரத்தை குறைத்தாலும்... எங்கும் டிக்கெட் கிடைத்தபாடில்லை. கடைசியில் எதோ ஒரு முடிவெடுத்தவன்.. என்னிடம் வந்து "டேய்,நான் உன்னை ஒரு
படத்திற்கு கூட்டிட்டு போறேன்" ஆனா நான் சொல்லும் போதெல்லாம் நீ கண்ணை மூடிக்கனும் என்றான்" எப்படியாவது ஏதாவதொரு சினிமாவாவது பார்க்க வேண்டும் என நான் ஒரு உயர்ந்த லட்சியத்தில் இருக்க.. ஊம் என தலையாட்டினேன்.
அடுத்து நாங்கள் நின்று கொண்டிருந்தது... சூர்யா தியேட்டர் வாசலில். பிட்டு படங்களுக்க்காகவே நேர்ந்து விடப்பட்ட தியேட்டர். "தகாரா" என்கின்ற மலையாள படம். டிக்கெட் கவுன்ட்டர் முன்பு ஒரு பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருக்க.... டிராயர் போட்டுக்கொண்டு வரிசையில் நின்ற எனனை பார்த்து.. கூட்டம் மொத்தமும் அதிர்ந்தது. தம்பி, சின்ன பசங்களையெல்லாம் இங்கே கூட்டிட்டு வரக்கூடாது என என் அண்ணனிடம் எச்சரிக்க... அவனோ... " இவன், இந்த மாதிரி படமெல்லாம் நல்லாவே பார்ப்பானுங்க" என என் இமேஜை காலி செய்ய... நானும்
" ஆமாம்" என்பது போல புரிந்தும் புரியாமல் தலையாட்டி வைத்தேன்.
அந்த படத்தை என்னால் இன்றும் மறக்க முடியாது. காரணம், இடைவேளை முடிந்தவுடன் மங்கலாக 30 நொடிகள் எதோ ஒரு கன்றாவி காட்சி முடிந்தவுடன், என் அண்ணன் என்னை கிளப்ப.. .நான் முழு படமும் பார்த்த பின்தான் வருவேன் என அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவன் மானத்தை வாங்கியது இன்னமும் நினைவிருக்கிறது... அதே படம் பிறிதொரு நாளில் "ஆவாரம்பூ" என தமிழில் பார்த்த போது... இந்த பிளாஷ் பேக் என் மனக்கண்ணில் வந்து மறைந்தது நினைவிருக்கிறது.
அதற்க்கு பிறகான என் பிட்டு பட அனுபவங்கள்.. வயதின் வளர்ச்சிக்கேற்ப பல்கி பெருக முக்கிய காரணம் என் நண்பர்கள் தங்கமணி (என்ன பொருத்தமான பெயர் ) ராஜா இருவரும். பன்னிரண்டாவது படிக்கும் போதே என்னை குண்டுகட்டாய் தூக்கி சென்று எனக்கு பாலியியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய நல் ஆசிரியர்கள் அவர்கள்.
கல்லூரி காலங்களில், போஸ்டர் பார்த்து ஏமாந்து, ஷகீலா ஆன்ட்டியின் ஒரே படத்தை தமிழிலும்,மலையாளத்திலும் இரண்டு முறை பார்த்து பல்பு வாங்கிய அனுபவங்களும் உண்டு.
இப்போதைய இன்டர்நெட், dvd கலாச்சாரம் பிட்டு படம் பார்க்கும் வசதியே ரொம்பவே எளிதாக்கிவிட்டலும், ஆரம்ப காலங்களில் பிட்டு படம் பார்க்க மேற்கொண்ட சாகசங்களும், அந்த த்ரில்லும் இப்போது இல்லாததது இந்த தலைமுறைக்கு ஒரு சாபம்தான்.
டிஸ்கி : இதை படித்து, நான் எதோ பிட்டு படங்களின் பரம ரசிகன் என என்னை நினைத்து விட வேண்டாம். என் வாழ்வில் நடந்த சில பல சுவாரசியங்களை எழுதவே இந்த பிளாஷ் பேக்.
// வெறும் மலையாள பாஷையே மட்டும் கற்றுக்கொண்டு வெளியே வர வேண்டியதுதான்//
ReplyDeleteஅப்போ உங்களுக்கு நல்லா மலையாளம் தெரியும்னு சொல்லுங்க!
பிட்டு படமா? அப்பிடீன்னா என்ன? நான் பார்த்ததே இல்லையே? இப்பிடி சொல்லுறவங்க தான் அதிகம். உங்க தைரியம் பிடிச்சிருக்கு.
ReplyDeleteநல்ல அனுபவ ! பகிர்வு
ReplyDeleteமேலே இருக்கும் குழந்தை படத்தை சிறிதாக்கினால் நல்லது
ReplyDeleteDai Naye Naye....
ReplyDeleteEnnachu unaku...
hai,
ReplyDeletebandhu,
kanavaro,
R.K sathish kumar
thanga,
jayaseelan,
THANKS FOR YOUR SWEET COMMENTS
hai r.k. sathishkumar
ReplyDeletei will try to reduce the picture size