சிந்து சமவெளி - விமர்சனம் (18+)



சினிமாவில் மெசேஜ் சொல்வது இரண்டு வகை. படம் முழுக்க நல்லவர்களையும்..  பாசிட்டிவான விஷயங்களையும்  காட்டி  நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்கின்ற படங்கள் ஒரு வகை. இன்னொன்று.. படம் முழுக்க கெட்ட விஷயங்களை காட்டி.. கிளைமாக்சில் கெட்டவன் கெட்டழிவான் என்பது. இதில் இயக்குனர் சாமி இரண்டாவது வகை.


இவரின் முந்தைய படங்களான உயிர், மிருகம், இவற்றில் மிருகம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே என்னை மிரட்டிய படம் அது. ரொம்பவுமே யதார்த்தமான மேக்கிங்கும், கெட்டது செய்தால் அழிவு நிச்சயம் என்கின்ற கருத்தும், யாருமே எடுக்க துணியாத ஒரு கதையே எடுத்த தைரியமும் சாமியின்  மீது  ஒரு மரியாதையே உண்டாக்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சிந்து சமவெளி பார்த்தேன். யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார்.

சினிமா.. ஒரு சுதந்திரமான.. மனதில் நினைப்பதை வெளிப்படுத்த உதவும் ஊடகம். இயக்குனர்  நாட்டில் நடக்கின்ற ஒரு தவறான விஷயத்தை சுட்டி காட்ட விரும்பியதில் எந்த தவறும் இல்லை. ஆனால்.. அதை சுட்டி காட்டிய விதத்தில் ஒரு நேர்மை இருக்கிறதா என்பதுதான் இந்த படத்தின் கேள்விக்குறி.


போரில் ஏற்பட்ட காயம் காரணமாக ராணுவத்தில் இருந்து VRS வாங்கிகொண்டு மனைவி மகனோடு  சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கும் கஜினி, மனைவியின் எதிர்பாரா மரணத்தால் மீண்டும் தனி மரமாகிறார். மகனின் காதல் அறிந்து அவனுக்கு  திருமணம் செய்து வைக்க.. திருமணம் ஆன சில தினங்களிலேயே மகன் 2 வருட ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு சென்று விட.. தனிமையில் இருக்கும் மருமகளுக்கும் இவருக்கும் இடையே  உண்டாகும்  உறவை  எவ்வளவு மோசமாக  சொல்ல முடியுமோ அவ்வளவு மோசமாக சித்தரித்திருக்கிறார்.


விசில் வருவதற்கு முன் திறக்கப்பட்ட குக்கர் போல.. வெந்தும் வேகாத.. உப்பு சப்பில்லாத காட்சியமைப்புகள். படம் முழுதும் ஒரு வித நாடக தன்மையுடன் பயணம் செய்வதால்.. சாமி  சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு பதிலாக எரிச்சல்தான் வருகிறது.


படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து, இறுதி காட்சி வரை எதுவுமே மனசில் ஒட்ட மறுக்கிறது. அவ்வளவு அந்நியத்தன்மை.. காட்சிகளிலும்.. அதில் வரும் கதா பாத்திரங்களிலும்.


எத்தனையோ வருடங்களுக்கு முன் பாலசந்தர் சார் அபூர்வ ராகங்களில்  முறையற்ற உறவில் ஏற்படும் காதலை.. உணர்வின் வெளிப்பாடுகளை.. அவ்வளவு நளினமாக.. நாசூக்காக  சொல்லியிருப்பார். பாலசந்தர் சாரோடு  சாமியே ஒப்பிட்டு பேசுவதே தவறு.  உடல் வேட்கைதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்கின்ற ரீதியில் சாமி காட்சிபடுத்தியிருப்பது யதார்த்தத்தை மீறிய ஆபாசம்.


என்னதான் செக்ஸ் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சம் என்றாலும்,  காதல், பாசம், உறவுகளின் மீதான அடிப்படை அன்பு போன்ற மென்மையான உணர்வுகள் எல்லோரிடமும் இருக்கிறது. ஏன் மிருகங்களுக்கு கூட   உண்டு. அதெல்லாம் எதுவுமே இல்லையன்பது போல ஒரு பொய் பிம்பத்தை காட்டியிருப்பது ஒரு நல்ல படைப்பாளிக்கு நாகரீகம் இல்லை.


அதுவும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது சாமியே தூக்கிபோட்டு மிதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் வந்தது சத்தியம்.


இந்த படத்தை பார்ப்பதற்கு பதிலாக ஷகிலா படத்தையே நான்கு முறை பார்த்துவிடலாம். உடல் மட்டும்தான் சூடாகும். உடல் ரீதியான வன்முறையே விட மன ரீதியான வன்முறை மிக மோசமானது.  சாமி இதில் நிகழ்த்தியிருப்பதும் அதைதான்.


ஒரு ஷோவிற்கு 250 பேர் என்றாலும் ஒரு நாளைக்கு 1000  பேர்.  இது கோயம்பத்தூரில் மட்டும். மொத்த தமிழ் நாட்டுக்கும் கணக்கு போட்டு கொள்ளுங்கள்.  மனிதர்களாக  தியேட்டர் உள்ளே  வருபவர்களை மிருகமாக்கி வெளியே அனுப்புகிறார் சாமி. முக்கியமான விஷயம்.. அது  எடுத்துக்கொண்ட கதைக்காக அல்ல.. அந்த கதையே காட்சி படுத்திய விதத்தில்...

இந்த படத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று யாரும் கிளம்பிவிடதீர்கள். அது படத்திற்கு தேவையில்லாத விளம்பரத்தை கொடுத்துவிடும். யாரும் கண்டு கொள்ளது விட்டாலே மூன்று நாட்களில்  பெட்டிக்குள் போய் விடும். படத்தின் தரம் அப்படி. 

(+) பிளஸ் 

வாய்ப்பிருந்தும் கதாநாயகியே உரித்த கோழியாய் காட்டாமல் விட்டது.


(-) மைனஸ்

நாடகத்தனமான காட்சிகள்
திரைக்கதை
இயக்கம்
வசனம்
ஒட்டாத கதாபாத்திரங்கள்


VERDICT  : சாமிக்கு போதாத காலம்.  படம் பார்க்கும் நமக்கும்.
RATING    : 1.0 / 10.0


EXTRA பிட்டுகள் : 

சாந்தி தியேட்டர் காந்திபுரம் மெயின் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், பஸ் கிடைக்காத  குடும்பம் ஒன்று  (அதில் இரு பெண்கள் ) இந்த படத்திற்கு இரவுக் காட்சியில்  தெரியாமல் நுழைந்து விட.. அவர்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. தியேட்டரில் இருந்த அனைவரும் ஹீரோ, ஹீரோயின்,வில்லன் என அனைவரையும் பார பட்சமின்றி  கெட்ட கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டி தீர்க்க.. பாவம் அந்த பெண்கள் சங்கடத்தில் நெளிந்தது ரொம்பவே பரிதாபமாக இருந்தது.


Comments

  1. மனோ இந்த மாதிரி படத்துக்கு விமர்சனமே எழுதக் கூடாது..

    ReplyDelete
  2. Negativa kooda solli vilambara paduthidadhinganu solli. Neengale vilambara paduthittingale thala.
    Adhu sari oru nalla nagarigathin peyarai ippadi oru kedu ketta padathukku vachadhuku, yarum yen yedhirpu therivikkala.

    ReplyDelete
  3. //அதுவும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது சாமியே தூக்கிபோட்டு மிதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் வந்தது சத்தியம்//

    :-).
    நல்ல வேளைக்கு நான் இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை!

    ReplyDelete
  4. உண்மை மனோ இந்தப்படத்தை பார்த்தேன் ..
    எங்கயோ பொய் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் வேகத்தை குறைப்பது போல் உள்ள இந்த படமும் , அந்த சாமிக்கும் கண்டனம் ..

    ReplyDelete
  5. @ KOLIPAYAN...

    100 RS IS NOT A BIG MATTER. BUT I SAVED YOUR FROM MIND STRESS,HEADACE

    @VINO

    THIS REVIEW HELPS TO AVOID THE FILM OTHERS..

    @PRIYAMUDAN RAMESH

    THANKS FOR YOUR COMMENTS

    @MOHAN

    YOU R A LUCKEY PERSON

    @PON SIVA

    THANKS FOR YOUR COMMENTS SIVA

    ReplyDelete
  6. your total critics tell the sngle line யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார்.wonderfull review

    ReplyDelete
  7. sinth samaveli padam super ithu mathiri pala kudumbangalil tavarana uravu murai irukirathu athai sonnal kudumbathil prachanai varumo yena payanthu pengal athai veliyea solluvathu kidayathu intha matiri padngalai parthavathu sila jenmangal tirunthuvargala ithil aanum matrum pennum adakam uusi idam koduthal thanea nuul nulaya mudiyum ithu matiri kattiya kanavanuku trogam saiyum pengalai arival kondu kanda thundamaga vetti yeariya vendum. nalla padam nalla sinthanai itha marithiri padam parthal veetil ullavargal anivarum romba gavanamaga irupargal ithumathiri padangal niraya vara vendum.

    ReplyDelete
  8. Dear Sir

    Ethu Karpani kadhaya ?
    Anupava Kadhaya?

    Solluggo Please

    ReplyDelete
  9. Saamy is psychic mental ...sex addict fellow...may be in his family he seen all those things..tats y he is making film like tis,....the name of good cultiure has been spoiled by keeping it as title... this person has no relation wit his name saamy...kedu ketta kadhai and director...

    ReplyDelete
  10. Kathai thavaralla athai aapasamakavum kevalamakavum kaatchi paduthiyathu perum thavaru

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....