வாகமன் - TOUR SPOT
எப்படி இந்த இடம் இம்புட்டு நாட்களாய் நம் கண்களுக்கு படவில்லை என உங்களை புலம்ப வைக்கும் அருமையான சுற்றுலா தலம் வாகமன் . கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பூலோக சொர்க்கம். கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை கார்ப்பெட் புல்வெளிகள் என இயற்கையின் பிரம்மாண்டம் நம் விழிகள் விரிய செய்கிறது. எப்போதுமே தூவிகொண்டிருக்கும் மெலிதான சாரல், ஆள் அரவமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை என இங்கு வரும் ஒவ்வொரு மனிதனும் கடவுளாவான்.இயற்கையில் கரைந்து போவான். 10 முதல் 25 டிகிரி வெப்பநிலை மட்டுமே நிலவுவதால் பிரிட்ஜில் வைத்தது போல இருக்கிறது ஊர். நம் கால்களுக்கு கீழ் மிதந்து செல்லும் மேகங்களும், முதுகு தண்டை சில்லிட வைக்கும் குளிரும் ஒரு ரம்மியமான அனுபவத்தை தருகிறது. குரிசு மலா, முருகன் மலை, தங்கல் மலை என முக்கியமான மூன்று இடங்கள். இதில் குருசு மலாவில் மிக பழமையான புனித செபஸ்டியன் தேவாலயம் உள்ளது. ஓவ்வொரு புனித வெள்ளி அன்றும் இங்கு கூட்டம் அம்முகிறது. . வாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும்,