Posts

Showing posts with the label பயணக் கட்டுரை

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 5

Image
கொடுமையிலேயே பெரிய கொடுமை ஏது தெரியுமா.. ஒரு அழகான பெண்ணுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை லூசுத்தனமாய்  இழப்பதுதான். அந்த தேவதை என்னை நெருங்கி " காடி மே.. பாடி கா..  கித்னே பஜே " என ஏதோ இந்தியில் விளிக்க.. நான் திரு திருவென இரண்டு நொடி விழித்து ஹி... ஹி.. என  இளித்தேன். என்னை ஏற இறங்க பார்த்தவள் "சாரி" என சொல்லி விட்டு கூட்டத்தில் கலந்தாள்.  இந்தி கற்காத என் மீதும், திராவிட கழகத்தின் மீது ஆத்திரம் எகிற.. நாலைந்து கெட்ட வார்த்தைகள் புதிதாய் பிறந்து இறந்தது. கூட்டம் காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும் என் தம்பியின் வீட்டிற்க்கு மின்சார ரயில் தவிர்த்து ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆட்டோவை நெருங்கி நாங்கள் செல்லுமிடத்திற்கு எவ்வளவு என்று கேட்டதற்கு, என்னிடமும், பரமு தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் பணத்தையும் தவிர , மூன்றாவதாக இன்னொருவரிடம்  திருடினால் கிடைக்கும் தொகையே அவன்  கூறினான். என் தம்பி அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு மேல் வராது என்றதால், அந்த ஆட்டோவை தவிர்த்து இன்னொரு ஆட்டோவிடம் சென்றோம். அவனிடம் சென்று பேசுவதற்கு முன்பாகவே.. வம்சம் படத்த

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4

Image
 தாஜ்மஹால் கொடுத்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த பிரமிப்பு ஆக்ரா கோட்டை. தாஜ் போலவே பிரம்மாண்டமான அதேசமயம் தாஜ்ஜை விட சிலாகிப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்ட இடம். முகலாய அரசர்களின் ஆஸ்தான அரண்மனையாக  அந்த காலத்தில் விளங்கிய ஒன்று. நீண்டு உயர்ந்த மதில்கள்.. அகழிகள்.. பாதுகாப்பு வளையங்கள் என எதிரிகள் எளிதில் உள் நுழையாதபடி அந்தகாலத்திலேயே படு பயங்கர பிளான் போட்டு கட்டியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் உடனே நம்மை வசீகரிப்பது அரண்மனையின் திறந்தவெளி தர்பார். மக்கள் அமர்வதற்கு எதுவாக படிக்கட்டுகள் போல அமர்வு மேடைகள் ஆச்சர்ய மூட்டுகின்றன.  திறந்த வெளி தர்பார்  உட்புற கோட்டை  ஒரு டிபிக்கல் ராஜாவின் வீடு (அரண்மனை ) எப்படி இருக்கும் என்பதை ஆக்ரா கோட்டை மூலம் உணர்ந்து கொள்ளலாம். ராணிகளின் அறைகள்.. குளிர்பதனம் செய்யப்பட்ட அந்தபுரம், ராஜாவும் ராணியும் ஓடி பிடித்து விளையாட ஏதுவான நீண்ட பால்கனிகள்.. ஆலோசனை மண்டபம், வீரர்கள் தங்குவதற்கான சிறு சிறு அறைகள் என உள்ளுக்குள் வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம்.  "அக்பர்" பரமு  பரமுவும் நானும் ஆக்ரா கோட்டையையும், கோட்டையே பார்க

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 3

Image
பரமு ரொம்பவும் வெகுளி. ஆனால் கிடைக்கிற கேப்பில் டைமிங்காக போட்டு தாக்குவான். நான் இறங்கும் போது ஜல்லி காட்டு  காளை போல  நிற்காமல் போன ரயில்.. அவன் இறங்கும்போது  மட்டும்  பசுமாடு போல சாந்தமாக ஒரு நூறு அடி தள்ளி போய் நின்றது.  வாய் நிறைய பல்லுடன், யுத்தத்திற்கு சென்று வெற்றியுடன் திரும்பியவன் போல கம்பீரமாய் ரயிலில்  இருந்து இறங்கி வந்தவன்,   "என்ன மனோ, பயந்துடீங்களா.. அனுமார் கிட்ட வேண்டினேன்..  அதுதான் ரயில் நின்னுடுச்சு" என்றான். ரயில்  சிக்னலுக்காக நின்றதோ.. அல்லது அனுமார் நிறுத்தினாரோ.. அவன் பத்திரமாக இறங்கியதும்தான் மனம் நிம்மதி அடைந்தது. நான்கு ஆட்டோ டிரைவர்கள், எங்களை அணுகி,  தாஜ் மஹாலை சுற்றி காட்டுவதாய் சொல்ல., அதில் சாமுத்திரிகா லட்சணம் பார்த்து ஒருவரை தேர்ந்தேடுத்தோம்.     பரமு அவரையும், அவரது ஆட்டோவையும் கண்ட மேனிக்கு போட்டோ எடுத்து தள்ளியதுடன் இல்லாமல் அவரது லைசென்சையும் வாங்கி போட்டோ பிடித்து கொண்டான். எதற்கு என்றதற்கு "PREVENTION IS BETTER THAN CURE" என்று தலையே ஆட்டி ஆட்டி சொன்னான். ஆட்டோ டிரைவரின் லைசென்ஸ் எங்களது சொத்துக்களான டிகிரி சர்டிபிகே

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 2

Image
சென்னையில் துரந்தோ ரயிலை நெருங்கியதுமே மின்சாரம் போல அந்த அதிர்ச்சி எங்களை தாக்கியது. சார்ட்டில், 65 வயது ராஜாத்தி அம்மாளை தவிர மற்ற எல்லோருமே ஆண்கள். அட ராமா... எங்கள் கோச் முழுதுமே சேவல் பண்ணையாக காட்சியளிக்க,  சைட் அடிக்க ஒரு பிகர் கூட இல்லாத வருத்தத்தில் துரந்தோ ஏறினோம். இந்த இடத்தில் துரந்தோ ரயிலை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இது ஒரு நான் ஸ்டாப் ரயில்.  சென்னையில் கிளம்பினால் டெல்லி சென்று தான் நிற்கும். இடையில் சில ஸ்டேஷன்களில் நின்றாலும், யாரும் ஏற மாட்டார்கள். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கையில் காபி கோப்பையே பிடித்தவாறு ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டிருந்தேன். தீடிரென எதிர் ட்ராக்கில் ஒரு ரயில் கடக்க,  கடந்த வேகத்தில் கையில் இருந்த காபி கப் அப்படியே பாதியாய் மடங்கி என் உடை நனைத்தது. அந்த அளவு வேகம். அதிக பட்சமாக 160 KM வேகத்தில் செல்லும் என TTR குறிப்பிட்டார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காலை 6.40 க்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. சரியாக 28 மணி நேரத்தில் (10.40 AM) க்கு டெல்லி சென்றடைகிறது. இந்த ரயில் அதிக வேகம் செல்வதற்காக, ரயிலில் ஏகமாக எட

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்பத்தூர் பையனும்... (18+) - 1

Image
வாய்ப்புகள் நம்மை தேடி வராது. நாம்தான் வாய்ப்புகளை தேடி போக வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை நம்புபவன் நான். ஆனால், டெல்லியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள HANDLOOM & HANDICRAFTS CORPORATION OF INDIA என்கின்ற அரசு சார் நிறுவனத்தில் ஒரு நேர்முக தேர்வுக்கு நான் அழைக்க படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை வீணடிக்க வேண்டாமென்று நினைத்து டெல்லி செல்ல அனுமதி பெற்று, போகும் போது ரயிலிலும் வரும் போது விமானத்திலும் வருவதாய் ஏற்பாடு செய்தேன்.  நேர்முக தேர்வுக்கு நான், எனது தம்பி பிரபு, பிரபுவின் நண்பன் பரமு ஆகிய மூவருடன்   பெயர் தெரியாத ஒரு முன்னூறு பேரும் அழைக்கப்பட்டிருந்தோம். எனது தம்பி ஏற்கனவே டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் நான் மட்டும் கோவையில் இருந்து கிளம்பினேன். பரமு சேலத்தில் என்னுடன் இணைந்து கொள்வதாக கூறி விட்டான்.  நேர்முக தேர்வு 23.08.10 திங்கள் மதியம். ஆனால் நாங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக சென்று டெல்லியே சுற்றுவதாய் ஒரு உயரிய நோக்கம் கொண்டிருந்தோம். சென்னை சென்று அங்கிருந்து மாற்று ரயிலில் (துரந்தோ எக்ஸ்பிரஸ்)  டெல்லி செல்வதாய் த