பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்
நாலு பைட், அஞ்சு பாட்டு, கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட், கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்பு என மசாலா போண்டா போடும் இயக்குனர்கள் மத்தியில் காமெடி என்கின்ற ஒற்றை வாழைக்காயில் பஜ்ஜி போட்டு, கூட்டத்தை கூட்டி கல்லா கட்டும் வித்தையில் இயக்குனர் ராஜேஷ் ஈசியாக ஜெயிக்கிறார்.
வெட்டி ஆபீஸ்ர் ஆர்யாவுக்கு , நயன் மீது எக்கச்சக்கச்சக்கமாய் காதல் உற்பத்தியாக, நயனின் அக்காவே தனக்கு அண்ணியாக வாய்க்கும் போது.. காதல் எளிதில் கை கூடும் என நினைக்கிறார். அண்ணி, என் தங்கையே கல்யாணம் செய்துக்க உனக்கு என்ன தகுதி இருக்கு என கேட்டு வைக்க, வெகுண்டெழுந்த வேங்கையாய், கை நிறைய சம்பாதித்து காட்டுகிறேன் என வீட்டை விட்டு வெளியேறுகிறார். தன் சலூன் நண்பன் சந்தானத்தின் துணையோடு அவர் பணம் சம்பாதிக்க போராடும் மிச்ச சொச்சமே கதை.
கதைக்காக எந்த மெனக்கேடல்களும் இல்லை. டெக்னிகல் விஷயங்களிலும் ரொம்ப ஆழம் தோண்டவில்லை. டைமிங் காமெடி என்கின்ற ஒற்றை துருப்புசீட்டில் ஸ்கூட் அடித்திருக்கிறார் ராஜேஷ்.
படம் ஆரம்பித்ததில் இருந்து, கிளைமாக்ஸ் வரைக்கும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து அனுப்புவதே நோக்கம் என்றிருப்பதால்.... எந்த வித ரத்தம் தெறிக்கும் சண்டைகளோ உஷ்ணத்தை கிளப்பும் சீரியஸ் கட்சிகளோ இல்லாமால் ரொம்பவே லைட்டாக.. யதார்த்தமாக பயணம் செய்கிறது கதை.. அதில் ஈஸியாக நம்மையும் சேர்த்து பயணிக்க வைத்ததில் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்கள்.
ஆர்யா, சந்தானம் இணைந்து செய்யும் அளப்பறைகளால் மொத்த தியேட்டரும் அல்லோகலப்படுகிறது. "நண்பன்டா" என்கின்ற இந்த வார்த்தை பிரயோகம் இனி பெருமளவில் எல்லோராலும் கொண்டாடப்படும். டயலாக் டெலிவரியில், முக பாவங்களில், டைமிங் கமெண்ட்டுகளில் என சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி போல காமெடியில் இருவரும் பிரித்து மேய்கிறார்கள்.
ஆர்யாவின் அலட்சியமான உடல் மொழி அவரது பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறது. நூறு பேரை அடித்து துவைத்து பயமுறுத்தாமல் இயல்பான ஹீரோவாக மனசில் நிற்கிறார்.
அழகான மோகினி நயனா இது.... நம்பவே முடியவில்லை. தோற்றத்தில் அவ்வளவு முதிர்ச்சி. பிரபு தேவா சார்.. அகில உலக ஜொள்ளர்கள் சங்கம் உங்கள் மீது ஏக கோபத்தில் இருக்கிறது.. வேறு என்ன சொல்ல..
படத்தின் இன்னொரு ஹீரோ சந்தானம். கொஞ்சம் சீன்களில் ஆர்யாவையே ஓவர் டேக் செய்கிறார். அல்லு சில்லான டைமிங் காமெடிகளால், படம் பார்க்கும் அத்தனை பேரின் ஆதர்ச நண்பனாகி விடுகிறார். வாழ்த்துக்கள் சந்தானம்.
ஆர்யாவின் அண்ணன், நயனின் அப்பா சித்ரா லட்சுமணன் என பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வுகள்.. உறுத்தாமல் படத்தை நகர்த்தி செல்கிறது.
யுவனின் இசையில்.. "யார் அந்த பெண்தான்.. " பாடலும்.. ஹைய்ரே ஹைய்ரே பாடல் சரணத்தில் வரும் "முத்தம் தா.. முத்தம் தா " பிட்டும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவை கவனிக்க முடியாதவாறு படம் முழுக்க காமெடிசரவெடி சத்தம்.
முதல் பாதி உற்சாகம்.. இரண்டாம் பாதியில் பாதியாய் குறைந்து போவதை இயக்குனர் கவனித்திருக்கலாம். படம் முடிந்த பிறகும் கிளைமாக்ஸ்சை நீடிக்கும் SMS பாணி இதிலும் தொடர்கிறது. கிளைமாக்ஸ்ல் வரும் ஜீவா கதாபாத்திரம் வலுகட்டாயமாக திணித்தது போலான உணர்வு.
இருந்தாலும், 2.5 மணி நேர உற்சாக டைம் பாசிற்கு உத்தரவாதம் தருகிறார் பாஸ் என்கின்ற பாஸ்கரன்.
(+) பிளஸ்
வசனங்கள்..
ஆர்யா, சந்தானம் கூட்டணி
எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்கும் முற்பாதி.
(-) மைனஸ்
இரண்டாம் பாதி..
இடையே வரும் சில இரட்டை அர்த்த வசனங்கள்
அழுத்தம் அற்ற கிளைமாக்ஸ்
VERDICT : காமெடி திருவிழா
RATING : 4.8 / 10.0
EXTRA பிட்டுகள் :
நேற்று இரவு 10 மணிக்கு மேல், இந்த படத்திற்கு போக வேண்டும் என்கின்ற ஒரு தீடிர் தோன்றலில் நண்பர்கள் ஆறு பேருடன் திருப்பூர் புற நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா திரையரங்கில் இந்த படத்தை பார்த்தோம். படம் முழுதும்.. ஒரு மாதிரி மங்கலாக, மய மயவென தெரிந்ததற்கு தியேட்டர் ஸ்க்ரீன் காரணமா இல்லை நாங்கள் சாப்பிட்ட கிங் பிஷர் காரணமா என்பதை இதை எழுதும் இந்த நொடி வரை பகுத்தறிய முடியவில்லை.
நேற்று இரவு 10 மணிக்கு மேல், இந்த படத்திற்கு போக வேண்டும் என்கின்ற ஒரு தீடிர் தோன்றலில் நண்பர்கள் ஆறு பேருடன் திருப்பூர் புற நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா திரையரங்கில் இந்த படத்தை பார்த்தோம். படம் முழுதும்.. ஒரு மாதிரி மங்கலாக, மய மயவென தெரிந்ததற்கு தியேட்டர் ஸ்க்ரீன் காரணமா இல்லை நாங்கள் சாப்பிட்ட கிங் பிஷர் காரணமா என்பதை இதை எழுதும் இந்த நொடி வரை பகுத்தறிய முடியவில்லை.
king fisher தான்... படம் பார்க்கிறேன்.. என்ன மனோ நயனுக்கு எப்பவும் 16 வயசா இருக்கும்?
ReplyDeleteமச்சி படம் பார்க்க முடியுமான்னு தெரில :)
ReplyDeleteஆனா கண்டிப்பா பாத்தாகணுமயா
//king fisher தான்... படம் பார்க்கிறேன்.. என்ன மனோ நயனுக்கு எப்பவும் 16 வயசா இருக்கும்? //
ReplyDeleteஎங்க ஐஸ்க்கு இன்னும் 16 முடியலயே....
அடுத்து படத்துக்கு போகும் போதும் 'king fisher' அடிச்சுட்டு போய் பாருங்க. ஈஸியா கன்ஃபார்ம் பண்ணிடலாம் :-).
ReplyDeleteOk I will see this movie in theater!
ReplyDeleteமானத்த வாங்கிடயெ!!!!
ReplyDeleteமனொ...
ESCAPE சினிமாஸில் பார்த்த எனக்கும் அதே போன்ற மொய் மொய் படம் தான் தெரிந்தது... அனால் எனக்குள் கிங் பிஷ்ஷேர் ஏதும் இல்லையே!!!
ReplyDelete