வாகமன் - TOUR SPOT
எப்படி இந்த இடம் இம்புட்டு நாட்களாய் நம் கண்களுக்கு படவில்லை என உங்களை புலம்ப வைக்கும் அருமையான சுற்றுலா தலம் வாகமன். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பூலோக சொர்க்கம்.
கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை கார்ப்பெட் புல்வெளிகள் என இயற்கையின் பிரம்மாண்டம் நம் விழிகள் விரிய செய்கிறது.
எப்போதுமே தூவிகொண்டிருக்கும் மெலிதான சாரல், ஆள் அரவமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை என இங்கு வரும் ஒவ்வொரு மனிதனும் கடவுளாவான்.இயற்கையில் கரைந்து போவான்.
10 முதல் 25 டிகிரி வெப்பநிலை மட்டுமே நிலவுவதால் பிரிட்ஜில் வைத்தது போல இருக்கிறது ஊர். நம் கால்களுக்கு கீழ் மிதந்து செல்லும் மேகங்களும், முதுகு தண்டை சில்லிட வைக்கும் குளிரும் ஒரு ரம்மியமான அனுபவத்தை தருகிறது.
குரிசு மலா, முருகன் மலை, தங்கல் மலை என முக்கியமான மூன்று இடங்கள். இதில் குருசு மலாவில் மிக பழமையான புனித செபஸ்டியன் தேவாலயம் உள்ளது. ஓவ்வொரு புனித வெள்ளி அன்றும் இங்கு கூட்டம் அம்முகிறது. .
வாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும், சிறிதும் பெரிதுமான அருவிகளும், ஓடைகளுமாய் நிறைந்து கிடக்கிறது. இன்னும் அதிகளவு மக்கள் வெளிச்சம் படாததால் பிளாஸ்டிக் குப்பைகள், வாகன இரைச்சல், டீசல் புகை இன்றி புதிதாய் பூத்த மலர் போல பரிசுத்தமாய் இருக்கிறது.
அமைதி விரும்பிகள் தவற விட கூடாத அற்புதமான இடம் .
தற்கொலை முனை
ஒரு பறவை போல அப்படியே பறந்து போக வேண்டுமென்கின்ற எண்ணம் இந்த இடத்தை பார்த்ததும் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. சிறகு இல்லையே என்பது வரமா...சாபமா...
CINI REFERENCE ..
கணபதி சில்க்ஸ் விளம்பரத்திற்காக மாதவன் எகிறி எகிறி குதிப்பாரே.. அது இந்த இடத்தில்தான்.
பையா படதில் .. 'அடடா மழைடா' பாடல் படமாக்கப்பட்ட இடமும் இதுவே.
வழிகாட்டி
கோட்டயத்தில் இருந்து 65 KM
கொச்சினில் இருந்து 100 KM
கோவையில் இருந்து 250 KM
பஸ் வசதி உண்டெனினும், தனி வாகனங்களில் செல்வது உசித்தம். ஒவ்வொரு
ஸ்பாட்டிற்க்கும் 5 - 20 KM தூர இடைவெளி இருப்பதால்.
இந்த இடத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை. அட்டை பூச்சிகள். சற்றே கவனமுடன் இருப்பது நல்லது.
தேக்கடி இங்கிருந்து 60 KM தொலைவிலும், மூணார் 160 KM தொலைவிலும் அமைந்துள்ளது. நேரம் இருப்பின் அங்கும் ஒரு ரவுண்டு அடிக்கலாம்.
ACCOMONDATION
தங்குவதற்கு நல்ல ரிசர்ட்டுகள் உள்ளன. குறிப்பாய் SILVER COLOUD CASTLE. சுவையான அணைத்து வகை அசைவ உணவுகளும் இங்கேயே சமைத்து தருகிறார்கள்.
இந்த ரிசர்ட் என் நண்பரின் நண்பருடையது. தங்க விரும்புவோர் கீழ்க்கண்ட செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
+91 - 98430 73332
CONTACT PERSON :MR.MOUNA SAMY
புகை படங்கள் :நண்பர் மௌன்ஸ் & பாலு.
மனோ இந்த இடத்தை பற்றி சிறா படத்தின் ஷுட்டிங்கில் இருந்த போது இந்த இடம் பற்றி சொல்லபட்டது..
ReplyDeleteமிகி அழகான விவரனையுடன் பதிவில் சொல்லி இருக்கின்றீர்கள்...மிக்க நன்றி...
எத்தனையோ முறை தேக்கடி மற்றும் மூணார் சென்றிருந்தாலும், இவ்வளவு ஒரு அழகான இடம் அதற்கு பக்கத்திலேயே இருப்பது தெரியாமல் போய்விட்டது. பகிர்விற்கு மிக்க நன்றி!
ReplyDeleteSoooooooooooper...
ReplyDeleteரொம்ப நல்ல தகவல்கள். படம் செம!!நன்றி மனோ
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி.. சமயம் கிடைக்கும் போது போக வேண்டும்.
ReplyDeletenice area
ReplyDeleteSuper place mano....
ReplyDeleteபுகைப்படங்கள் பார்ப்பதற்க்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது பார்க்கலாம் வாய்ப்பிருந்தால்...
ReplyDelete@ jackie sekar,
ReplyDelete@ mohan,
@ udya kumar,
@ kabeesh,
@ raghavan,
@ ramesh,
@ loose,
@ vasanth,
THANKS FOR YOUR COMMENTS