நான் மகான் அல்ல - இசை விமர்சனம்


யுவன் ஷங்கர் ராஜா - காதலுக்காக நேர்ந்து விடப்பட்ட இசையமைப்பாளர். மற்ற பாடல்களை விட காதல் பாடல்களை, அதுவும் யுவன் குரலில் கேட்கும் போது மிக எளிதாக மனசுக்கு நெருக்கமாகி விடும். துள்ளுவதோ இளமையில் நிஜமாகவே அதிகம் துள்ளியது, துள்ள வைத்தது  யுவனின் இசைதான். அதில் ஆரம்பித்து இதோ நான் மகான் அல்ல வரை அவரின் குரல்களில் கேட்கும் பாடல்கள் எல்லாமே  ஒரு வித ஈர்ப்பை, ஒரு சந்தோஷத்தை, கூடவே சேர்ந்து பாடும் விருப்பத்தை கொடுக்கின்றன. 

"வா வா நிலவ புடுச்சு" : ராகுல் நம்பியார் குரலிலும், நா.முத்து குமார் வரிகளிலும் அவ்வளவு உற்சாகம். "வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு" என நம்மையும் சேர்ந்து பாடவைக்கும் நல்ல ENERGETIC SONG. எல்லோருக்கும் பிடித்தமான மெட்டு பாடலை எளிதாக ஹிட் லிஸ்டில் சேர்த்து விடும்.  
காதலுக்கும், காதலர்களுக்கும் யுவனின் அடுத்த டெடிகேஷன் "இறகை போலே" . யுகபாரதியின் வரிகளும், யுவனின் காதலை கொஞ்சும் குரலும்,வித்தியாசமான அந்த     இன்ஸ்ட்ருமெண்டல் பிட்டும்.. அப்படியே  மெஸ்மரிசம் செய்து அந்த பாட்டுக்கு நம்மை  அடிமையாக்கி விடுகிறது. ஹய்யோ.. இன்னும் எத்தனை முறை இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்க போகிறேனோ.. EXCELLENT  SONG FROM YUVAN. 

"ஒரு மாலை நேரம்" - ஜாவித் அலி, ஷில்பா ராவ் குரல்களில்  மென்மையான ஒரு டூயட்.  ரொம்பவுமே எளிமையான ஆர்க்கேஸ்ட்ரேஷேன் வரிகளை சிதைக்காமல்  மெதுவாக ஆரம்பித்து பின் வேகம் பிடிக்கிறது.

"தெய்வம் இல்லை"  -  மது பால கிருஷ்ணன் பாடியிருக்கும் ஒரு சோக பாடல். ஆயிரத்தில் ஒருவன் "தாய் தின்ற மண்ணே " சாயல் இதில் வருவதை யுவன் தவிர்த்திருக்கலாம். 

SONGS CAN LISTEN

"இறகை போலே" - யுவன்
"வா வா நிலவ புடுச்சு" - ராகுல் நம்பியார் 


RATING  : 3.1 / 5.0

Comments

  1. நீங்க சொன்னா மாதிரி இந்த யுவன் குரலில் என்னவோ ஒன்னு இருக்கு

    காதல் அப்டியே பொங்கி வழியுதே அந்த பாடலில்:)

    ரெண்டு பாடலும் எனக்கும் பிடித்துவிட்டது

    ReplyDelete
  2. பையா படத்திலிருந்து யுவனின் படப் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதுபோல் தெரிகிறது,அதற்கு காரணம் அவர் அதிகமான படங்களுக்கு இசையமைப்பதால் கூட இருக்கலாம்.ஆனாலும்,சமீபத்தில் வந்த யுவனின் மற்ற படங்களை ஒப்பிடும் போது இந்த படத்தின் அனைத்து பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன

    ReplyDelete
  3. Nice post. I likes "வா வா நிலவ புடுச்சு"

    ReplyDelete
  4. யுவன் காதல் பாடல்களில் கவர்கிறார். ஆனாலும் ஒரு இசை அமைப்பாளருக்கு இன்னும் நிறைய தேவை இருக்கு.

    ReplyDelete
  5. எனக்கு மூணு பாட்டு பிடிச்சிருக்கு...
    படம் தான் எப்படினு தெரியல...

    ReplyDelete
  6. @ YOGESH,MOHAN,KOZHIPAYAN,KARTHIK & JETLI

    THANKS FOR YOUR SWEET COMMENTS.

    MANO

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....