கொலையுதிர் காலம் - ஒரு பார்வை.


சுஜாதா சாரின் சாகா வாரம் பெற்ற நாவல்களில்  கொலையுதிர் காலத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு. 1981 ல் எழுதிய நாவல் இது. இப்போது படித்தாலும் சும்மா விறு விறு விறுவென பறக்கிறது. 

கணேஷ் வசந்த் ஜோடி இந்த நாவலில் பட்டையே கிளப்பியிருப்பார்கள். அதுவும் வசந்தின் டைமிங் காமெடி இந்த நாவலில் சற்று தூக்கலாகவே இருக்கும். எப்போதும் என்னை ஆச்சரிய படுத்தும் விஷயம்.. சுஜாதா சார் இந்த இரு கதா பாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதம்.. கணேஷ் எப்போதுமே சீரியசாக, தன் கேள்விக்கு விடை தெரியும் வரை அதை துரத்துபவன்.. கொஞ்சமாய் பேசுவான். சுஜாதா அவர்களின் புத்திசாலித்தனம் அந்த கேரக்டர் மூலம் வெளிப்படும். வசந்த் அதற்க்கு நேர் மாறானவன்.. சீரியஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்  ஜாலி மேன். ஓயாமல் பேசி பேசி பெண்களை வளைக்க போராடுபவன்.. அவ்வப்போது A ஜோக் சொல்லி பெண்கள் முகம் சிவக்க வைப்பான். சுஜாதா அவர்களின் குறும்புத்தனம் வசந்தின் மூலம் பக்கத்துக்கு பக்கம் நம்மை வசீகரிக்கும்.

ஒரு எஸ்டேட் சொத்து விஷயங்களை மேற்பார்வை இடுவதற்காக வரும் கணேஷ் வசந்த்,  அங்கு நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களை கண்டு ஆர்வத்தில் மூக்கை நுழைக்க, சில பல கொலைகள் அரங்கேறுகின்றன.. கொலைகளுக்கு காரணம்  விஞ்ஞானமா, பைசாசமா என அவர்கள் குழப்பத்தில் கும்மியடிக்க அவர்களுடன் சேர்ந்து   நாமும் பாயை பிறாண்டுகிறோம். இறுதி  வரை எது காரணம் என்கின்ற கேள்வி மண்டையே போட்டு குடைய.. சுஜாதா தன் ஸ்டைலில் கடைசி வரியில்  விடை சொல்லியிருக்கும் விதம் விசிலடிக்க வைக்கிறது.  

சுமார் பத்து வருடங்களுக்கு முன் வாடகை புத்தக நிலையத்திலிருந்து வாங்கி படித்த இந்நாவலை ஒரு புத்தக சந்தையில் பார்த்தவுடன் வாங்க தூண்டிய விதம்தான் சுஜாதா அவர்களின் வெற்றி.
  
பதிப்பகம் : உயிர்மை. 
விலை      : RS.160/-
(புத்தகம் நல்ல கனமான அட்டையில் பைன்ட் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். )

Comments

  1. இன்னும் விளக்கமாய் படிக்காதவர்களை படிக்க தூண்டும் விதமாய் எழுதியிருக்கலாமே தலைவரே..
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. நான் ரசித்துப் படித்த வாத்யார் புத்தகம்..

    ReplyDelete
  3. சீக்கிரம் இந்த புத்தகம் படிச்சாகனும்

    அறிமுகம் செய்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  4. அறிமுகம் அருமை.discovery book palace- ல் கொலையுதிர்க் காலம் கிடைக்கிறது

    ReplyDelete
  5. உண்மையில் உங்கள் எழுத்து மிக இயபை இருக்கிறது மனோ அவர்களே...
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. @ CABLE SIR,

    @ KRP SENTHIL SIR

    @ YOGESH,

    @ DISCOVERY BOOK PALACE

    @ PONSIVA SIR,

    THANKS FOR YOUR COMMENTS

    ReplyDelete
  7. தலைவரை நினைத்து ஏங்க வைத்து விட்டீர்கள்.அருமையான விமர்சனம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....