மதராச பட்டிணம் - விமர்சனம்


தமிழில் ஒரு டைட்டானிக்.  காதல் ஒரு காற்று போல..  யாரையும், எப்போது வேண்டுமானாலும் தீண்டிச் செல்லும். ஒரு வெள்ளைக்கார கவர்னர் பெண்ணுக்கும், சலவை தொழில் செய்யும் ஒரு இந்திய வாலிபனுக்கும் இடையே பூக்கும் இந்த காதலும் அதை சொன்ன விதமும் ஒரு செல்லுலாய்ட் ஆச்சரியம்.

1945 - 47களில் உள்ள மதராச பட்டினத்தில் நடக்கும் க(வி)தை. அதற்காக இந்த படக்குழு மெனக்கெட்டிருக்கும் விஷயங்கள் ஏராளம். பழைய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், பக்கிங்காம் கால்வாய் (இப்போதைய கூவம்), டிராம் வண்டிகள், அந்த கால கார்கள், மவுண்ட் ரோடு, என தத்ரூபமாக நம் கண்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தி,   அதற்கு நடுவே ஒரு பரவசமான காதல் என 3 மணி நேரம் நம்மை சீட்டோடு சீட்டாய்  கட்டிப்போட்டு விடுகிறார்கள்.

இயக்குனர் விஜய்க்கு ஒரு மிக  பெரிய ராயல் சல்யூட்.  அவரின்  திரைக்கதை, காட்சிக்கு காட்சி சபாஷ் போட வைக்கிறது. ஒரு காதல் கதைக்குள்,  கடைசி கட்ட சுதந்திர போரட்ட நிகழ்வுகள், வெள்ளையர்களின் ஆதிக்க வெறி, போராட்ட காலங்களில் சாமானிய மக்களின் பார்வை நிலை, ஆங்கில அரசுக்கு வேலை செய்யும் இந்திய அதிகாரிகளின் உணர்வுகள்,  ஆங்கிலேயே கலாச்சாரம் ("நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும் அவள் காதலனும் ஒண்ணா வாரங்க")   என 3 மணி நேரத்தில் அவர் தொட்டு செல்லும் தளங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இறந்த காலமும், நிகழ் காலமும் மாறி மாறி பயணிக்கும் 'ஈரம்' பட ஸ்டைல் ட்ரீட்மென்ட் கடைசி வரை  இதில்  பக்காவாக பொருந்துகிறது.

சலவை  தொழிலாளி  பரிதியாக ஆர்யா. தன் பாத்திரம் உணர்ந்து UNDER PLAY  செய்திருக்கிறார். காதலியே தேடும் போது  பரிதவிப்பையும், குஸ்தி சண்டையில் ஆக்ரோஷத்தையும் சரியான கலவையில் முகத்தில் வெளிப்படுத்துகிறார். 

படத்தின் உண்மையான ஹீரோ கம் ஹீரோயின் ஏமி ஜாக்சன். பாலில் நனைத்த பால்கோவா. ரயிலை பிடிக்கும் அவசரத்தில் இருப்பவன் கூட இந்த பெண்ணை பார்த்தால், நின்று, நிதானமாய் பார்த்து, மனசுருக காதலித்து விட்டுத்தான் அடுத்த ரயிலுக்கு போவான். அம்ம்புட்டு அழகு. கண்களில் காதல் அருவி அருவியாய் கொட்டுகிறது. அதே போல நடிப்பும் வெளுத்து கட்டியிருக்கிறார்.  தமிழ் நடிகைகள் இவரிடம் பகல் நேரங்களில்  டியுஷன் படிக்கலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, படத்தில் பல காட்சிகள் கைதட்டி, நெகிழ்வுற வைக்கின்றன. ஆர்யா, ஏமியிடம் பேசுவதற்காய் கற்று வைத்திருந்த ஆங்கிலம் மறந்து போக, தக்கி, முக்கி அதனை நினைவு கொணர தவிக்கையில் "மறந்துட்டியா" என கொஞ்சு தமிழில் ஏமி கேட்கும் போது, நமக்கு  ஜிவ் என உடலில் அட்ரிலின் சுரந்து உடல் சிலிர்க்கிறது.. அதன் தொடர்ச்சியாக வரும் 'பூக்கள் பூக்கும் தருணம்" பாடல் படு  அசத்தல். டூயட் பாடலாக இல்லாமல் மாண்டேஜ் கவிதைகளாக ஒரு பூ தொடுப்பதை போல அழகாய் கோர்த்திருக்கும் இயக்குனருக்கு ஒரு ரோஜா தோட்டத்தையே பரிசளிக்கலாம்.


ஆர்ட் டைரக்டர் செல்வகுமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இருவரும் இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும் யானை பலம். முக்கியமாக, தனது எல்லா படங்களிலும், தெளிவான, பிரம்மாண்ட விஷுவல்கள்   தரும் நீரவ் ஷா இந்த படத்தின் களம் உணர்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் ஒளிப்பதிவு செய்திருப்பது படத்தின் ஜீவனை கலைக்காமல் இருக்கிறது. அதே போல அந்த சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் செட்டும், மணிகூண்டு செட்டும் பிரமாதம்.

புத்தருக்கு போதி மரத்தில் ஞானம் கிடைத்தது போல, G.V. பிரகாஷ் குமாருக்கு, நீண்ட நாட்களாய் காணமல் போயிருந்த இசை ஞானம் இந்த படத்தின் மூலம் திரும்ப கிடைத்திருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும்  ஆபாரம். KEEP IT UP பிரகாஷ்.



ஒரு படத்துக்குரிய எல்லா லட்சணங்களும் இந்த படத்தில் சரியாய் பொருந்தி இருக்கிறது. துணை கதாபாத்திரங்கள், சப்- டைட்டில் வசனங்கள் என எல்லாமே பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.  

படத்தின் குறைகளாக சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், காட்சிகளின் தாக்கம்   அதை எல்லாம் மறக்க செய்து  பார்வையாளனை  உற்சாக படுத்துவதால் குறைகள் எதுவும் கண்களுக்கு படாமல் மறைந்து தப்பித்து கொள்கின்றன. 


"காதலிக்காமல் இருப்பதை விட காதலித்து இழப்பதே மேலானது". - டென்னிசன் சொன்னது. இந்த படமும் அதைதான் சொல்கிறது.


(+) பிளஸ் 

திரைக்கதை, இயக்கம்
ஏமி ஜாக்சன்
ஒளிப்பதிவு,
கலை இயக்கம்
கதை களம்
பின்னணி இசை. 

(-) மைனஸ் 

பெரிதாய் ஏதும்
கண்களுக்கு தட்டுப்படவில்லை.


VERDICT : காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம். 


RATING    : 5.3 / 10



EXTRA  பிட்டுகள் : 

  • "மொழி" படத்திற்கு பிறகு தியேட்டர் மொத்தமும் படம் முடிந்து கை தட்டி பாரட்டியது. 

  • ஏய், என்னப்பா, என்ன சொல்லறீங்க, ஏமி ஜாக்சனுக்கு கோயில் கட்டறீங்களா.. அட கொஞ்சம் பொறுங்கப்பா  அந்த பொண்ணு இன்னம் ரெண்டு மூணு படம் நடிக்கட்டும். ஏது, இது ஒன்னே போதுமா? கோவிலுக்கு பேர் கூட வச்சாச்சா..? துரையம்மாள் ஆலயமா..? சரி சரி, நடத்துங்கப்பா..

Comments

  1. விமர்சனம் அருமை மனோ

    படம் பாத்துட்டேன் :)

    நான் ரசித்ததை இங்க போட்டிருக்கேன் பாருங்க

    http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_10.html

    உணர்ச்சிமயமான படம் !!

    ReplyDelete
  2. தம்பி எழுத்துல ஒரு மெச்சூரிட்டி வந்து இருக்குது...பட விமர்சனம் என்னை பார்க்க தூண்டியது...

    ReplyDelete
  3. நல்ல பாசிட்டிவ் விமர்சனம். திரட்டிகளில் இணைச்சுட்டேன். பிடிச்சவிங்க ஓட்டு போடுங்கப்பு.

    ReplyDelete
  4. Unga vimarchanam superb ga!
    பாலில் நனைத்த பால்கோவா. ரயிலை பிடிக்கும் அவசரத்தில் இருப்பவன் கூட இந்த பெண்ணை பார்த்தால், நின்று, நிதானமாய் பார்த்து, மனசுருக காதலித்து விட்டுத்தான் அடுத்த ரயிலுக்கு போவான். அம்ம்புட்டு அழகு. கண்களில் காதல் அருவி அருவியாய் கொட்டுகிறது.
    -- chance a illa, kalakkiteenga.. lol

    ReplyDelete
  5. ப‌ட‌த்தைப் போல‌வே உங்க‌ள் விம‌ர்ச‌ன‌மும் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து!

    ReplyDelete
  6. நண்பரே,

    அந்த பால்கோவாவை உடனே பார்சல் பண்ணவும்:) நல்லதொருவிமர்சனம்.

    ReplyDelete
  7. @ YOGESH,
    @JACKIE ANNA,
    @RAMESH SIR,
    @MAYIL RAVANAN SIR,
    @KARTHIK SIR,
    @CABLE SIR,
    @TAMIL VENKAT SIR,
    @ MOHAN SIR,
    @ KANAVUGALIN KATHALAN

    MANY THANKS FOR YOUR SWEET COMMENTS.

    ReplyDelete
  8. நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம். சிரயா சொல்லியிருக்கீங்க. படிக்கவும் பிடிச்சது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....