ஒரு காதலின் டைரி குறிப்புகள்
ஒரு முகம்... என் தினங்களை வண்ணங்களால் நிறைத்து அழகுபடுத்தும் திருமுகம். ஓராயிரம் சந்தோஷங்கள் அதை காணும் போதெல்லாம்.. துரு துரு கண்கள்.. முத்தமிடும் ஆசையே தூண்டும் சிவந்த இதழ்கள்... அதில் வெளிப்படும் புன்னகை... ஒரு கவிதை போல.... நிற்காது பொழியும் பரிசுத்தமான மழையே போல.. கன்னக்குழியில் இலவச இணைப்பாய் இன்னொரு புன்னகை... என் கவலைகளை துடைத்தெறியும் மந்திர புன்னகை.
குழந்தை அல்ல.. ஆனால் குழந்தைதான்.. குமரியும் அல்ல. ஆனால் குமரிதான். கன்னங்களின் மென்மை அதை செல்லமாய் கிள்ள சொல்லி என் உயிர் எடுக்கும். கண்களில் வழியும் காதல் என்னை மொத்தமாய் திருடி என் உயிர் குடிக்கும்.
அந்த முகம் பார்க்கும் போதெல்லாம் அதன் வெளிச்சம் என் மீது பிரதிபலித்து நானும் அழகாகிறேன். ஹட்ச் நாய்க்குட்டி போல அவள் பின்னாலேயே சுற்றி வரும் நிழல் ஆகிறேன்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. மனசு கேட்பதில்லை. பார்க்காத தருணங்களில் ஆக்சிஜன் இழந்த மீனை போல துடிக்கிறேன். பார்த்த நொடியில் பரவச பட்டாசாய் வெடிக்கிறேன்.

அந்த முகம், என்னை சிரிக்க வைக்கிறது.. அவளை பற்றியே அனுதினமும் சிந்திக்க வைக்கிறது. சாந்தம் என்பது தொலைந்து போன அழகிய தமிழ் வார்த்தை. இப்போதிருப்பவர்கள் உன் முகம் பார்த்து அர்த்தம் உணர்ந்து கொள்ளட்டும். இனி வருபவர்கள் நம் குழந்தைகளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.
மிகவும் அருமை......வாழ்த்துகள்
ReplyDeleteசெம செம காதல் குறிப்புகள் :)
ReplyDeleteஇன்னும் நிறைய இருக்கு போல
jj
ReplyDeleteLaguda Pandi.. Nadathu Nadathu...
ReplyDeleteஉன்போல் அழகி
ReplyDeleteஉலகினில் இல்லை
இனிமேல் பிறந்தால்
அது நம் பிள்ளை.....
பாடல் வரிகளை நினைவுபடுத்தியது இறுதி வரிகள். நன்று
குறிப்புகள் கலக்கல்...
ReplyDeleteஇந்த காதல் என்ற ஒன்று நுழைந்துவிட்டால் குறிப்புகள் கூட கவிதையாகவே மாறிப்போகிறது . அருமை அனைத்தும் பகிர்வுக்கு நன்றி
ReplyDelete@ KARTHIK,
ReplyDelete@ RK GURU,
@ YOGESH,
@THANGAMANI
@ ADEKAPPA
@ KALANESAN
@ PANITHULI SHANKAR
@ VINO
MANY THANKS FOR YOUR SWEET COMMENTS
//அந்த முகம் பார்க்கும் போதெல்லாம் அதன் வெளிச்சம் என் மீது பிரதிபலித்து நானும் அழகாகிறேன்///
ReplyDeleteஅருமை ...!!
குத்தாலத்தான்ஸ் ல படிச்சிட்டு வந்தேன் ..!!
//சாந்தம் என்பது தொலைந்து போன அழகிய தமிழ் வார்த்தை. இப்போதிருப்பவர்கள் உன் முகம் பார்த்து அர்த்தம் உணர்ந்து கொள்ளட்டும். இனி வருபவர்கள் நம் குழந்தைகளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.//
ReplyDeleteVery Cute.
அழகான வரிகள்.....
ReplyDeleteஎழுதிய கைகளுக்கு ஒரு குலுக்கல்.....
HI MOHAN,
ReplyDeleteHI SHRI PRIYE,
THANKS FOR YOUR SWEET COMMENTS
HI SELVAKUMAR,
ReplyDeleteTHANKS FOR YOUR SWEET COMMENTS