தோனி அடித்த அடி - IPL SPECIAL
நல்ல கிரிக்கெட் தெரு முனையில் விளையாடப்பட்டாலும் நின்று ரசிப்பவன் நான். ஆனால் IPL போட்டிகளை ஆரம்ப காலங்களில் நான் விரும்பவில்லை. காரணங்கள் ஒன்றல்ல நூறு.
கபில் தேவ் என்னும் சாதனையாளன் புதிய கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதற்காக ICL என்று ஒரு அமைப்பை தொடங்க, அதை முடக்க அவசர அவசரமாக உருவாக்கியதுதான் IPL . கபிலுக்கு மீடியா சப்போர்ட் ஏதும் இல்லை. நவீன மைதானங்கள் கிடைக்க வில்லை. பிசிசிஐ யுடன் அரசியலும் சேர்ந்து விளையாட ICL ஓரம் கட்டப்பட்டது. அந்த பார்முலாவை அப்படியே காப்பி அடித்து IPL இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ரெண்டாவது, கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக விளையாடாமல் பணத்திற்காக விளையாடுவது. இப்போதெல்லாம் தேசிய அளவில் விளையாடுவதற்கு கூட யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. வருடம் ஒருமுறை IPL சீசனில் பங்கேற்றாலே போதும். கோடிகணக்கில் வருமானம்.டப்பு மாமே டப்பு.
மூன்றாவது நாட்டுப்பற்று. கிரிக்கெட்டை இந்தியன் ஓவ்வொருவனும் நேசிக்க அதனுடன் இணைந்த தேசிய பற்றும் ஒரு முக்கிய காரணம். பாகிஸ்தானுடன் விளையாடும் போதெல்லாம் இரண்டுபடி அதிகமாகவே ரத்தத்தில் சுரக்கும். IPL போட்டிகளில் அதற்க்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதற்க்கு பதிலாக மாநில ரீதியாக ஆர்வம் சுருங்குகிறது.
இவை எல்லாவற்றையும் மீறி, கிரிக்கெட் என்னும் வஸ்து நம்மை வசீகரிக்க காரணம் இயல்பாகவே நம்முள் ஊறி போன கிரிக்கெட் மீதான காதலும் அது கொடுக்கும் ஆனந்த அனுபவமும்தான். அதுதான், IPL போட்டிகளை பார்க்கவே கூடாது என்றிருந்தவனை இப்போது ஒரு போட்டி மிச்சம் இல்லாமல் பார்க்க செய்கிறது.(குறைந்த உடையில் நிறைந்த ஆட்டம் ஆடும் சியர் GIRLS ம் ஒரு காரணம். )
இவை எல்லாவற்றையும் மீறி, கிரிக்கெட் என்னும் வஸ்து நம்மை வசீகரிக்க காரணம் இயல்பாகவே நம்முள் ஊறி போன கிரிக்கெட் மீதான காதலும் அது கொடுக்கும் ஆனந்த அனுபவமும்தான். அதுதான், IPL போட்டிகளை பார்க்கவே கூடாது என்றிருந்தவனை இப்போது ஒரு போட்டி மிச்சம் இல்லாமல் பார்க்க செய்கிறது.(குறைந்த உடையில் நிறைந்த ஆட்டம் ஆடும் சியர் GIRLS ம் ஒரு காரணம். )
நேற்றைய சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆட்டம் , கை, கால் விரல் நகங்களை ஒரு சேர கடித்து துப்ப வைத்தது, அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் கட்டாயம் வென்றாக வேண்டும் என்கின்ற நிலையில் பஞ்சாப் 192 ரன்களை குவிக்க பதற்றம் தொற்றிக்கொண்டது. (அனையபோகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல கடைசி கட்ட போட்டிகளில் இந்த பஞ்சாப் செய்யும் லொள்ளுகள் தாங்க முடியலப்பா )
ஒரு கேப்டன் என்கின்ற முறையில் தோணி ஆடிய விதம் சபாஷ். கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகளும், சிக்சர்களும் ஜெட் வேகத்தில் பறக்க பஞ்சாப் பந்து வீச்சாளர்கள் கண்களில் பட்டாம் பூச்சி பறந்தது . கல்லூரி நாட்களில் எங்கள் கிரிக்கெட் செட்டில் பால சுப்பிரமணியம் என்கின்ற நண்பன் இருந்தான். தூங்கும் நேரம் தவிர மிச்ச நேரம் கிரிக்கெட். அவனை நாங்கள் எல்லோரும் "காட்டான்" என்றே விளிப்பது வழக்கம். ஏனென்றால் அவன் அடிக்கும் சிக்சர்கள் நாங்கள் ஆடும் மைதானத்தை தாண்டி, அதற்க்கு பிறகு இருக்கும் ஒரு சிறிய மைதானத்தையும் கடந்து மெயின் ரோட்டில் சென்று லேன்ட் ஆகும். அப்படி ஒரு காட்டு அடி. நேற்று தோணி ஆடிய விதமும் அப்படியே.. முஷ்டியே மடக்கி கொலை வெறியுடன் எதிரியின் முகத்தில் ஓங்கி குத்துவதை போல கடைசி ஓவரில் அறைந்த அந்த சிக்ஸர் உடலின் அட்ரலின் மொத்தத்தையும் தூண்டி மயிர் கால்கள் சிலிர்த்ததை நன்கு உணர முடிந்தது. என்றும் மறக்கவே முடியாத ஷாட். பாவம், இர்பானுக்குதான் நேற்று சோறு இறங்கியிருக்காது.
வாத்தியரே, நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இதே அடியே வரும் உலககோப்பையிலும் காட்டுங்கள்...ப்ளீஸ்... கோப்பை நிச்சயம்.
ஒரு நல்ல கிரிக்கெட் ரசிகன் பார்வையில் , இப்போதைக்கு மும்பையும், பெங்களூரும் மிக சிறப்பாக ஆடி வரும் அணிகள். சச்சின், உத்தப்பா இருவரது ஆட்டமும் அட்டகாசமாக இருக்கிறது. இதில் எதாவது ஒரு அணிக்கே கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம். பார்ப்போம்.
//மூன்றாவது நாட்டுப்பற்று. கிரிக்கெட்டை இந்தியன் ஓவ்வொருவனும் நேசிக்க அதனுடன் இணைந்த தேசிய பற்றும் ஒரு முக்கிய காரணம். பாகிஸ்தானுடன் விளையாடும் போதெல்லாம் இரண்டுபடி அதிகமாகவே ரத்தத்தில் சுரக்கும். IPL போட்டிகளில் அதற்க்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதற்க்கு பதிலாக மாநில ரீதியாக ஆர்வம் சுருங்குகிறது.//
ReplyDeleteசிறப்பே இதில் தான் இருக்கிறது. தேசிய மாயையை தேசிய போதையை அறுத்து யாதார்த்தைக் காட்டும் பாங்கு தான் சிறப்பு. நாட்டுக்கு நாடு எதிர் போட்டி என்றால் அவன் ஆஸ்திரேலியன், வெள்ளைக்காரன், இவன் பாக்கிஸ்தான்காரன், எதிரி நாட்டான், இவன் கறுப்பன், அவன் இங்கிலாந்துக்காரன் என்ற பார்வை வந்துவிடும். இங்கு அது கிடையாது இங்கிலாந்தானும், ஆஸ்திரேலியனும், பாகிஸ்தான்காரன் கூட நம் அணியில்; அணி தான் முக்கியமானது. அந்த அணி எப்படி விளையாடுகிறது போன்றது.. இங்கு பேதம் இல்லை, வெள்ளையன், கறுப்பன், வெளிநாட்டான், உள்நாட்டன் எல்லாம் ஒரு அணியில்.. அதன் வெற்றிக்காக! கூடவே, தேசிய அணித்தேர்வின் சூழ்ச்சி, ஆதிக்கபோக்கு காரணமாக அணிக்கு வாழ்விலே விளையாட முடியாத உள்ளூர்க்காரன், நம் மாநிலத்து திறமையாளன் வெளிக்கொணரப் படுகிறான். கேனத்தனமாக கொடிகளை அசைத்து அலறிக் கொண்டு, மூவண்ணத்தை மூஞ்சியில் அப்பிக் கொண்டு செயற்கையாய் உண்டாக்கப் பட்ட ஒரு தேசிய வெறியுடன் இருக்கும் ரசிகத்தன்மை இது போன்ற விளையாட்டுக்களாற் கலைக்கப் படும் நல்ல சகுனங்கள் உண்டு! ஒடுக்கப் பட்டு வேட்டையாடப் படும் பழங்குடிகள், அழிக்கப் படும் தேசிய இன அடையாளங்கள், சுரண்டப் அடி வர்க்கம் எல்லாவற்றையும் கிரிக்கெட் தேசிய அணி, ஆட்டம், வெற்றி, தோல்வி.. அதனோடு கூடிய தேசிய மாயை என்பதற்குள் கொண்டு வந்து மக்களை, இளம் சமுகத்தை மேற் சொன்ன சிக்கல்களில் சிந்தை செலுத்த விடாது, அதை மறைக்கடிக்கக் கூடிய போதையாக தேசிய கிரிக்கெட் இதுவரை இருந்து வந்துள்ளதென்பது துரதிர்ஷடவசமான உண்மை!
DEAR ANONY,
ReplyDeleteஉங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடியதே...
அன்பு அனானி, நான் நினைத்ததை அப்படியே வார்த்தை மாறாமல் சொல்லிவிட்டீர்கள். உங்களை தொடர்புகொள்ள ஆசை. என் மெயில் ஐ.டி spsrajaraman@gmail.com. என் ப்ளாக் விந்தைமனிதன். கண்டிப்பாக தொடர்புகொள்ளவும்
ReplyDelete