பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
பழனி - தமிழ் கடவுள் குடி கொண்டிருக்கும் புண்ணிய ஸ்தலம். தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம். வருடத்திற்கு 70 லட்சம் மக்கள் வந்து வழிபடும் இடத்தில் பக்தர்களிடம் வழிப்பறி கொள்ளை போல நூதன முறைகளில் பணம் பிடுங்கும் செயல்கள் இங்கு அதிகம். நமக்கு ஒரு கஷ்டம்னா, மன நிம்மதிக்காக கோயிலுக்கு போறோம். ஆனா அங்க போனா... ஊர்ல இருக்கிற அத்தனை கஷ்டமும் சுத்தி நின்னு டான்ஸ் ஆடினா எப்பிடி இருக்கும். அந்த நிலைமைதான்.. இங்கு வர்றவங்களுக்கு... முடிந்த வரை எச்சரிக்கையாக இருக்க சில குறிப்புகள்.
வழிப்பறி # 1
எதாவது ஒரு கடையில போய் பூஜை சமான் எல்லாம் வாங்கறீங்க, எல்லா பொருட்களையும் PACK பண்ணி கொடுத்துட்டு, 150 ரூபாய் சார் என்று சொல்லியபடியே அனுமார் வால் போல நீளமான ஒரு லிஸ்டை கொடுப்பார். லிஸ்டை CHECK பண்ணாமல் பணம் கொடுத்தால்.. பணம் போயே போச்.. ஒருவேளை நீங்கள் லிஸ்டை CHECK செய்தால்.. உங்களுக்கு உங்கள் தமிழ் மொழியே மறந்து போக கூடும். சாம்பிளுக்கு ஒரு லிஸ்ட்.
பூ - XXXXX
பழம் - XXXXX
சூடம் - XXXXX
விபூதி - XXXXX
கனி - XXXXX
வாழை - XXXXX
தேங்காய் - XXXX
ஊது பத்தி - XXXX
ஊது பத்தி - XXXX
எலுமிச்சை -XXXX
வில்லை -XXXX
மலர் - XXXX
சந்தனம் - XXXX
கற்பூரம் - XXXX
ஜவ்வாது - XXXX
திருநீறு - XXXX
மாலை - XXXX
நன்றாக கவனித்தால் மட்டுமே விளங்கும், ஒரே பொருளை இருமுறையோ , மூன்று முறையோ லிஸ்டில் இணைத்திருப்பது. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...
தேமேயன கோவில் நோக்கி சென்று கொண்டு இருப்போம், பின்னால் இருந்து மிக அதட்டலாய் ஒரு குரல் நம்மை அழைக்கும். திரும்பி பார்த்தால் அவ்வளவே.. அழைத்த நபர் " என்ன சார், செருப்பு காலோடு கோயிலுக்கு போறீங்க.. இங்க வந்து விட்டுட்டு போங்க சார்" என கட்டளை இடுவார். நம்ம்ம்பி போய் செருப்பை விட்டவுடன் , ஒரு டோக்கனை கொடுத்து "சார் பத்து ரூபா " என்பார். சரி தொலையட்டும் என கொடுத்துவிட்டு 1 KM சுடும் வெய்யிலில் நடந்து வந்து பார்த்தால், கோவில் முன்பு, காலணிகள் இலவசமாய் பாதுகாக்கும் இடம் என்கின்ற பெயர் பலகை உங்களை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கும்.
படியேறி கொண்டுஇருக்கும் போதே, பக்தி பழமாக கையில் தட்டோடு ஒரு நபர் எதிர்ப்பட்டு " சார் ஒரு நிமிஷம்" என்பார், என்ன, ஏது என்று கேட்பதற்குள், எதோ மந்திரம் சொல்லிக்கொண்டே தட்டில் இருந்த விபூதி, சந்தனம், குங்குமும் போன்றவற்றை உங்கள் நெற்றியில் வைப்பார். ஆஹா.. என்ன ஒரு பக்தி என நீங்கள் வியப்பதற்குள்.. சார் பத்து ரூபா கொடுங்க என்பார், எதற்கு என்று கேட்டால் " பிரசாதம் வச்சு விட்டதற்கு " என்பார், உடனே கொடுத்து விட்டால்..பிரச்சனையில்லை. வாதம் செய்தால், அவ்வளவே, மந்திரம் சொன்ன வாய், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பிரயோகம் செய்யும். .
இது போலவே, மொட்டை போட்டு வருபவர்களை குறி வைத்து ஒரு கூட்டம் காத்திருக்கும். எங்கிருந்தோ பாய்ந்து வந்து மொட்டையில் சந்தனமோ அல்லது அதை போல வேறேதோ.. தடவிவிட்டு , "சார் பத்து" என்பார்கள்... மொட்டையில் சந்தனம் தடவினா.. ஜில்லுன்னு இருக்கும் சார்" என்கின்ற உபதேசத்துடன்.
எல்லோருக்கும் படியளந்து விட்டு மேலேறினால், நமக்காகவே ஒரு பூசாரி காத்திருப்பார்.. "வாங்கோ வாங்கோ " லைன்ல போனா தரிசனம் ஆக 3 மணி நேரம் ஆயிடும். 50 கொடுத்துடுங்கோ.. எல்லோர் பேர்லயும் அர்ச்சனை பண்ணி எல்லோரையும், SHORT CUT-ல முருகன் கிட்டே கொண்டு போய் சேர்த்துடறேன் என்பார். கொஞ்சம் சலனப்பட்டு, பணம் கொடுத்தவுடன், அர்ச்சனை தட்டை கையில் வாங்கி வைத்துகொண்டு எல்லோரும் பேஷா ஒரு முறை பிரகாரத்தை சுத்தி வந்துடுங்கோ" என்பார். ஒரு முறை அல்ல அதற்க்கு பிறகு நூறு முறை சுற்றி வந்தாலும் அந்த பூசாரி நம் கண்ணில் படமாட்டார். GREAT ESCAPE.
கற்பூரம் - XXXX
ஜவ்வாது - XXXX
திருநீறு - XXXX
மாலை - XXXX
நன்றாக கவனித்தால் மட்டுமே விளங்கும், ஒரே பொருளை இருமுறையோ , மூன்று முறையோ லிஸ்டில் இணைத்திருப்பது. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...
வழிப்பறி # 2
தேமேயன கோவில் நோக்கி சென்று கொண்டு இருப்போம், பின்னால் இருந்து மிக அதட்டலாய் ஒரு குரல் நம்மை அழைக்கும். திரும்பி பார்த்தால் அவ்வளவே.. அழைத்த நபர் " என்ன சார், செருப்பு காலோடு கோயிலுக்கு போறீங்க.. இங்க வந்து விட்டுட்டு போங்க சார்" என கட்டளை இடுவார். நம்ம்ம்பி போய் செருப்பை விட்டவுடன் , ஒரு டோக்கனை கொடுத்து "சார் பத்து ரூபா " என்பார். சரி தொலையட்டும் என கொடுத்துவிட்டு 1 KM சுடும் வெய்யிலில் நடந்து வந்து பார்த்தால், கோவில் முன்பு, காலணிகள் இலவசமாய் பாதுகாக்கும் இடம் என்கின்ற பெயர் பலகை உங்களை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கும்.
வழிப்பறி - 3
படியேறி கொண்டுஇருக்கும் போதே, பக்தி பழமாக கையில் தட்டோடு ஒரு நபர் எதிர்ப்பட்டு " சார் ஒரு நிமிஷம்" என்பார், என்ன, ஏது என்று கேட்பதற்குள், எதோ மந்திரம் சொல்லிக்கொண்டே தட்டில் இருந்த விபூதி, சந்தனம், குங்குமும் போன்றவற்றை உங்கள் நெற்றியில் வைப்பார். ஆஹா.. என்ன ஒரு பக்தி என நீங்கள் வியப்பதற்குள்.. சார் பத்து ரூபா கொடுங்க என்பார், எதற்கு என்று கேட்டால் " பிரசாதம் வச்சு விட்டதற்கு " என்பார், உடனே கொடுத்து விட்டால்..பிரச்சனையில்லை. வாதம் செய்தால், அவ்வளவே, மந்திரம் சொன்ன வாய், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பிரயோகம் செய்யும். .
இது போலவே, மொட்டை போட்டு வருபவர்களை குறி வைத்து ஒரு கூட்டம் காத்திருக்கும். எங்கிருந்தோ பாய்ந்து வந்து மொட்டையில் சந்தனமோ அல்லது அதை போல வேறேதோ.. தடவிவிட்டு , "சார் பத்து" என்பார்கள்... மொட்டையில் சந்தனம் தடவினா.. ஜில்லுன்னு இருக்கும் சார்" என்கின்ற உபதேசத்துடன்.
வழிப்பறி - 4
எல்லோருக்கும் படியளந்து விட்டு மேலேறினால், நமக்காகவே ஒரு பூசாரி காத்திருப்பார்.. "வாங்கோ வாங்கோ " லைன்ல போனா தரிசனம் ஆக 3 மணி நேரம் ஆயிடும். 50 கொடுத்துடுங்கோ.. எல்லோர் பேர்லயும் அர்ச்சனை பண்ணி எல்லோரையும், SHORT CUT-ல முருகன் கிட்டே கொண்டு போய் சேர்த்துடறேன் என்பார். கொஞ்சம் சலனப்பட்டு, பணம் கொடுத்தவுடன், அர்ச்சனை தட்டை கையில் வாங்கி வைத்துகொண்டு எல்லோரும் பேஷா ஒரு முறை பிரகாரத்தை சுத்தி வந்துடுங்கோ" என்பார். ஒரு முறை அல்ல அதற்க்கு பிறகு நூறு முறை சுற்றி வந்தாலும் அந்த பூசாரி நம் கண்ணில் படமாட்டார். GREAT ESCAPE.
இன்னும், மொட்டை அடிக்கும் இடங்களில், பஞ்சாமிர்த கடைகளில், மலை ரயிலில் என ஏகப்பட்ட இடங்களில் இவர்களின் திருவிளையாடல்கள் தொடர்கின்றன. கூட்ட நெரிசல்களில் பிக் பாக்கெட்டுகளும் மிக சுதந்திரமாக உலாவுகின்றனர். என்னடா இவன் பத்து, இருபது பணம் போறதுக்கெல்லாம் பதிவு போடறனே என நினைக்க வேண்டாம். பணம் மட்டுமல்ல, வரையறையற்ற அத்து மீறல்களால் நாம் இழப்பது நம்முடைய நிம்மதியையும் தான்.
வரலற்று பிரசித்தி பெற்ற கோயில்களில் , பராமரிப்பும், பாதுகாப்பும் இன்றியமையாதது. அரசும், கோவில் நிர்வாகமும் வசூலை மட்டும் கவனிக்காமல்.. வரும் பக்தர்களையும் அவர்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டால் நலம்.
SO , பழனி செல்பவர்கள்.. கவனம் ப்ளீஸ்.....
இது எல்லாம் உண்மைதான். இதற்க்கு மேலேயும் பகல் கொள்ளை நடக்கிறது பழனியில். பத்து வருடங்களுக்கு முன்பே இதே நிலைமை தான்.
ReplyDeleteஅப்போதே முடிவெடுத்துவிட்டேன். கருவறையில் மட்டுமல்ல பழனி ஜில்லாவிலேயே முருகன் இருக்க வாய்ப்பில்லை. இவர்களை திருத்த முடியாது என்பதால் முருகனும் Escape . என்னை பொறுத்தவரை பழனி போகாதிருப்பதே உத்தமம்.
1989 இல் போனபோது அர்ச்சனை பொருட்கள் லிஸ்ட் போட்டு 90 ரூபாய் புடுங்கிட்டானுங்க. மேலே மலை ஏறி போனா அங்கே 12 ரூபாய்க்கு கிடைக்கிறது
ReplyDeleteso u can get every thing at low price or free of cost... but u people dont dont have patience to your duty.. Right... dont blame others... thr is so many temple office (every 100 mtr u can see one temple ofice).. so try to be a human .. 1st u should be ,,,, thn blame other ok
ReplyDeletesundar palani
dear mr.sundar,
ReplyDeletewe didnt blame others.. can you accept that no one try to cheat in pazani from the pilgrims.
compare to other temples, there are lot of cheating practices done in pazani.
we didnt blame the whole people in pazani, we blame only the cheaters.
எல்லா ஊர்லயும் அப்படிதான் நண்பரே...
ReplyDeleteதகவலுக்கு நன்றி....
இதுவரைக்கும் பழனிக்கு போனதில்லை...
போகும் போது மைண்ட்ல வச்சிக்கிறேன்.
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான்., உண்மையில் பழனி ஒரு சுற்றுலா தளமாக நினைத்து செல்பவர்களுக்கு அது தரும் அனுபவம் கசப்பானது. சில கடைகளில் அர்ச்சனை கூடை வாங்க சொல்வார்கள். அது ஒரு கனி பழம் பூ புஷ்பம் என்று விதத்தில் லிஸ்ட் இருக்கும். கூடவே நம்முடன் ஒரு ஆளையும் அனுப்புவார்கள். அவரும் ஒரு கொல்லைகாரராகவே இருப்பார். அதனால் தான் முருகன் கோவணத்துடன் இருக்கிறார் போல இருக்கு,
ReplyDeleteமைண்ட்ல வச்சுக்கிறேன்..!!!
ReplyDelete:)
தல Word verification-a.. நீக்கி விடுங்க...!!!
நல்ல பகிர்வு.
ReplyDelete//என்னடா இவன் பத்து, இருபது பணம் போறதுக்கெல்லாம் பதிவு போடறனே என நினைக்க வேண்டாம். பணம் மட்டுமல்ல, வரையறையற்ற அத்து மீறல்களால் நாம் இழப்பது நம்முடைய நிம்மதியையும் தான்.//
இழப்பதில் அமைதியையும் சேர்த்துக் கொள்ளவும்.
சரியான விதத்தில் பதிவு செய்த நீங்கள் பல்லாண்டு வாழ்க!
ReplyDeleteநன்றி, நான் ஒவ்வொரு வருடமும் கோவிலுக்கு செல்கிறேன். நான் அமெரிக்க நன்றி சொல்கிறேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletepalani bakthargal anaivarukum intha anubavam nadapathu illai, intha anubavam natapathu pavam seibavargalin vaylai, murugan arulvathu mulu bakthargalukay athil pala anubavam pakuvapadutum vakail erukkum,athiyum tandi than mulu nimmathi, amaithi kidaikum. om muruga arokara
ReplyDeletethankig you for yhe information
ReplyDeletethankig you for the information
ReplyDeletecq;fs; jftYf;F ed;wp
ReplyDeletethankig you for yhe information
ReplyDeletethis is right information...oh god. ..pls forgive that beggers
ReplyDelete