பலே பாண்டியா - இசை விமர்சனம்
புகை பட ஓவியர் சித்தார்த்தின் முதல் திரைப்படம். தேவன் எகாம்பரம் இசை இந்த படத்திற்கு துருப்பு சீட்டா இல்லையா என்பதை பார்க்கலாம்.
"சிரிக்கிறேன்" பாடல் கானாவும், ராப்பும், வெஸ்டர்னும் இணைந்த ஒரு கலக்கல் காக்டெயில். தாளம் போட வைக்கும் மெட்டுடன் தொடங்கும் பாடல் சரணத்தில் திக்கு திசையின்றி அலைகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த வருட ஹிட் லிஸ்டில் சுலபமாக இடம் பிடித்திருக்கலாம்.
உன்னி கிருஷ்ணன், மிருநளினி குரல்களில் "கண்களே கமலாலயம்" மென்மையான காதல் டூயட். இருவரது குரல்களும் மனசுக்குள் புகுந்து என்னவோ பண்ணுகிறது. அதை போலவே "ஆறாத கோபமில்லை" பாடலும், தனிமையில் இரவில் ஐ பாடில் கேட்க நல்ல சாய்ஸ் இந்த இரண்டு பாடல்களும்.
"ஹாப்பி" பாடல் வித்தியாசமாக இருந்தாலும் மெட்டில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திஇருக்கலாம்.
"இவன் தேடல்", "பலே பாண்டியா" என மற்ற இரண்டு பாடல்களும் சுமார் ரகம். சிரிக்கிறேன் பாடலிலும், இரண்டு மெலடிகளிலும் நம்பிக்கை அளிக்கிறார் புது இசையமைப்பாளர் தேவன்.
VERDICT : 2 .4 STARS
nalla irukku paattu
ReplyDelete