பையா - விமர்சனம்
லிங்கு மீது எனக்கு ஒரு விதமான பயம் உண்டு. ரன், சண்டை கோழி போன்ற பரபரக்கும் படங்களை கொடுத்து கை தட்டவும் வைப்பார். அதே சமயத்தில் ஜி, பீமா போன்ற படங்களை கொடுத்து சீட்டை பிராண்டவும் செய்வார். ஆனால் இம்முறை ஒரு CLEAN ENTERTAINMENT கொடுத்திருக்கிறார். தமிழில் ROAD TRIP படங்கள் மிக குறைவு. லிங்குவின் இந்த பயணம் ACTION, சேஸிங், காதல், என எல்லா தளங்களிலும் பயணிக்கிறது.
பயணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். எதிர்பாராத ஆச்சர்யங்களையும் புது புது அனுபவங்களை கொடுக்கும் பயணத்தை யாருக்குதான் பிடிக்காது. தான் நேசிக்கும் பெண்ணுடன் நீண்ட பயணம் செய்யும் வாய்ப்பினை பெற்ற இளைஞன் சந்திக்கும் சவால்களும், சாகசங்களுமே கதை. அதில் காதலை சர்க்கரை தடவி கொடுத்திருக்கிறார்கள்..
பெங்களூரில் பார்த்த முதல் பார்வையில் காதல் வயப்படும் கார்த்தி, பிடிக்காத கல்யாணத்திலிருந்து தப்பித்து மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் சேர துடிக்கும் தமன்னா. இருவரையும் விதி, பயணம் என்னும் ஒரு புள்ளியில் இணைத்து வைக்க, பின்னால் துரத்தும் வில்லன்கள் கூட்டம், சேஸிங் என ஆக்சிலேட்டரை அட்டகாசமான டெக்னிக்கல் சமாச்சரங்களுடன் விரட்டியிருக்கிறார்கள்.
அதே அலட்சிய பருத்தி வீரன் கார்த்தி. மாடர்ன் உடைகளில் வளைய வந்தாலும், தலை ஆட்டி பேசும் ஸ்டைலும், நடையும், பருத்தி வீரன் உடல் மொழியினை சில இடங்களில் ஞாபக படுத்துகிறது. இருந்தும் ஆள் ஜம்மென்று இருக்கிறார். பெண்களுக்கு இன்னொரு கனவு கண்ணன் ரெடி. தமன்னாவை அவர் பாட்டி வீட்டில் விட்டு வந்ததும், பிரிவின் வலியோடு தன் நண்பியுடன் போனில் பேசி கலங்கும் இடத்தில் அழகாய் ஸ்கோர் செய்கிறார்.
தமன்னா மாதிரி அழகான பிகர் கூட வருவதானால் பாம்பே என்ன பாகிஸ்தான் வரைக்கும் கூட கார் ஓட்டலாம். அம்மணி அம்புட்டு அழகு. ஆனால், END CARD போடும் சமயத்தில் கார்த்தியின் நண்பர்கள் வந்து அவனது காதலை சொல்லும் வரை அவன் காதலை புரிந்து கொள்ளாத மக்கு பெண்ணாக இருப்பது பரிதாபம். காதலின் பிரிவை இவரே உணர்வது போல அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கார்த்திக்கு இணையான படத்தின் இன்னொரு ஹீரோ நம்ம யுவன். அதகள படுத்தியிருக்கிறார். படம் சற்றே தோய்ந்த வேளையில் " என் காதல் சொல்ல வார்த்தை இல்லை" என யுவன் ஆரம்பிக்கும் போது, மொத்த தியேட்டரும் நிமிர்ந்து உட்கார்கிறது. யுவனுடன் சேர்ந்து வரிக்கு வரி பாடுகிறது. யுவனுடன் சேர்ந்து காதலில் கரைகிறது. CONGRATS YUVAN. பின்னணி இசையில், வில்லனை அடித்து விட்டு கார்த்தி நடக்கும் போது வரும் எலெக்ட்ரிக் கிட்டார் பீட் பிரமாதம்.
பயணங்களின் போது சாலையில் கடந்து செல்லும் மரங்களை போல, படம் முழுதும் மெல்லிய நகைச்சுவை வசனங்களூடே கடக்கிறது. உபயம் : பிருந்தா சாரதி. ஒரு நல்ல எழுத்தாளர் நல்ல வசனகர்த்தாவாகவும் மிளிர்கிறார்.
மதியின் ஒளிப்பதிவு சேஸிங் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது. ஆண்டனியின் எடிட்டிங்கும் அப்படியே. கலை : ராஜீவன், சுத்துதே சுத்துதே பாடல் இவருக்கு மைனஸ். அசல் எது, நகல் எது என பிரித்தறிய முடியாதவாறு ஒரு கலை இயக்குனரின் பணி இருக்க வேண்டும். பாடலில் செட்டிங் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.
படத்தின் மைனஸ், சண்டை காட்சிகளில் தென்படும் மிதமிஞ்சிய ஹீரோயிசம். 2 டஜன் அடியாட்களை ஹீரோ உதைத்து பந்தாடும் போது நம் நெஞ்சின் மீதும் ஏறி மிதிப்பது போல இருக்கிறது. அதே போல வில்லனின் பங்களிப்பும் படு மோசம்.லிங்கு தனது வெற்றி படங்களிலிருந்து சில காட்சிகளை உருவி அப்படியே பயன்படுத்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
எனினும், ஒரு 2 1/2 மணி நேர டைம் பாஸ் செய்வதற்கு இந்த படம் உத்தரவாதம்.
பிளஸ் (+)
இசை,
வசனம்
படமாக்கப்பட்ட விதம்
ஒளிப்பதிவு
கார்த்தி,தமன்னா
மைனஸ் (-)
சண்டை காட்சிகளில் தென்படும் மிதமிஞ்சிய ஹீரோயிசம்
சோப்ளாங்கி வில்லன்,
பழைய படங்களை நினைவூட்டும் காட்சிகள்
சாதாரணமான கிளைமாக்ஸ்
VERDICT :பையா - A CLEAN ENTERTAINER
RATING : 4.9/10
EXTRA பிட்டுகள்
கோவையில் ISO 9001 அங்கீகாரம் பெற்ற செந்தில் குமரன் தியேட்டரில் படம் பார்த்தது நல்ல விஷயம். புகை பிடித்தாலோ, எச்சில் துப்பினாலோ கழுத்தை பிடிக்கிறார்கள். 12 ரூபாய் பெப்சி 12 ரூபாய்க்கே கிடைப்பது ஆச்சர்யம்.
இரவு நைட் ஷோ முடிந்து வரும் போது, ஒரு போலீஸ்காரரிடம் சிக்கி கொண்டு பொழுது போவதற்காய் அவர் என்னிடம் முழு கதையையும் சொல்ல சொல்லி கேட்டது மிக கொடுமை. அதை தனி பதிவாகவே போட வேண்டும்.
------------------
பதிவை படித்துவிட்டு கமெண்ட் அடிக்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்தும். சத்தியம்.
விமர்சனம் நன்றாக இருந்தது, எனக்கும் அதே கருத்து தான். இங்கு (sharjah)வியாழக்கிழமையே பார்த்து விட்டேன். கண் தப்பியது.
ReplyDeleteபீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம்.
ReplyDeletehttp://www.cpraveen.com/suvadugal/paiyya-tamil-movie-review/
மனோ ...
ReplyDeleteஉங்க விமர்சனம் நல்லா இருந்தது ....
இந்த மாதிரி கதை எல்லாம் தெலுங்குல துவைச்சு கைய போட்டுடாங்க ....
உதாரணம் : ready .....etc
நன்றி
கலீல்
intha movie ennoda life la marakka mudiyathu.ethukkuna intha padatha naan 10th public exam mudinchathum enga school la iruthu poyirunthom.naan ennoda classmates,teacher's kooda enjoy panni parthen.and movie yum super ahirukku.
ReplyDelete