மதராச பட்டினம், கோரிப்பாளையம்- இசை விமர்சனம்
மதராச பட்டினம்
அறிமுக படத்திலேயே அசத்தலான பெயர் வாங்கிய G .V பிரகாஷ் அந்த பெயரை காப்பாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். பீரியட் பிலிம் என்பதாலோ என்னவோ இசை கருவிகளில் நிறையவே வித்தியாசம் காட்டியிருக்கும் பிரகாஷ் பச்சக்கென கேட்டதும் ஒட்டிக்கொள்ளும் மெட்டுக்களை போட்டிருந்தால்...அவருக்கு இது ஒரு முக்கியமான ஆல்பமாக அமைந்திருக்கும்.
"பூக்கள் பூக்கும் தருணம் " ரூப் குமார் ரத்தோட் குரலில் அழகான மெலடி. ஆல்பத்தில் சிறப்பான பாடலும் இதுவே. "வாம்மா துரையம்மா" பாடலில் எப்போதும் தமிழை கடித்து தின்று துப்பும் உதித் நாராயண் கொஞ்சம் புரியும் படி பாடியிருப்பது ஆறுதல். M.S.V., சீயான் விக்ரம், நாசர் சேர்ந்து பாடியிருக்கும் "மேகமே" கேட்க கேட்க பிடிக்கலாம். தமிழில் மிக சிறப்பான பாடகர்கள் இருந்தாலும், ஏன் வட இந்திய பாடகர்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஆல்பத்திலும் பெரும்பாலோர் ஹிந்தி பாடகர்கள். ஹிந்தியில் முக்கிய பாடகரான சோனு நிகாம் தமிழில் "ஆருயிரே" என்பதற்கு பதிலாக "ஹருயிரே" என்கிறார். முடியல...
பாடல்கள் நீளம் அதிகம் என்பதால், தியேட்டரில் தம் அடிக்கும் ஆர்வத்தை தூண்டும் அபாயம் இருக்கிறது.
பாடல்களை ஹிட் லிஸ்டிலும் சேர்க்க முடியாது... கடி லிஸ்டிலும் சேர்க்க முடியாது.. பிரகாஷிற்கு இது ஒரு AVERAGE ALBUM. அவ்வளவே.
G.V. - STILL HAS TO BE GO......
RATING : 2.5 STARS
கோரிப்பாளையம்
ஆட்டோகிராப் படத்திலிருந்தே சபேஷ்- முரளி மீது ஒரு தனி மரியாதை இருந்தது. அதற்க்கு பிறகு இன்னமும் சரியான களம் கிடைக்காமல் இருக்கிறார்கள்
ஆல்பத்தில் அட்டகாசமான மெலடி, "என்ன இந்த மாற்றமோ" வெயில் பட "உருகுதே " சாயல் இருந்தாலும், கார்த்திக் குரலில் கேட்டவுடன் பிடித்து போகிறது. அதே போல "அழகு காட்டேரி" பாடலும்...சபேஷ் முரளி பெயர் சொல்லும்.
இதற்கு பிறகு வரும் பாடல்கள் எல்லாம் ரண களம். "சிறுக்கி வாடி என் சிட்டு" விசிலடிச்சான் குஞ்சுகளை ஏகத்திற்கும் உசுப்பேற்றும் பாடல்.
அடுத்த பாடல்..மெட்டை விட்டு தள்ளுங்கள்.. பாடல் வரிகளை கவனியுங்கள்.. "
"ஓட்டை உடைச்சல் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்
என் உசிரை புழியும் பொண்ணு கலரு அரஞ்சு பழம் "
எவ்வளவு கருத்தாழம் மிக்க வரிகள்.. தமிழன் செத்தான்.
"ஆராரோ கேட்டதில்லை", தூக்கம் வராதவர்கள் கேட்டால் உடனடி தூக்கம் உத்தரவாதம்.
சபேஷ் முரளி மெலடிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் எங்கேயோ போகலாம்.
RATING : 2.4 STARS
அருமை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!